பதிந்தவர் tamilmuslim மேல் ஆகஸ்ட் 22, 2008
டெல்அவிவ்: யூதர்களில் ஒரு பிரிவினராகக் கருதப்படும் பினேய் மெனேஷெ (Bnei Menashe) இனத்தைச் சேர்ந்த 7,232 இந்தியர்களை தனது நாட்டில் குடியேறச் செய்ய இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் இந்த சமூகத்தினர் இந்தியாவில் பழங்குடி அந்தஸ்து பெற்றவர்கள் ஆவர்.
யூதர்களான இவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு குடிபெயர்ந்தனர். இஸ்ரேலில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக உள்ளதால், இந்தியாவில் வசிக்கும் இவர்களை மீண்டும் இஸ்ரேலிலேயே குடியமர்த்த வேண்டும் என அந் நாட்டில் கோரிக்கை எழுந்தது.
இது குறித்து அந் நாட்டு பிரதமர் எகுட் ஓல்மெர்ட் விவாதித்து வருகிறார். விரைவில் இவர்கள் இஸ்ரேலில் குடியேற்றப்படுவார்கள் என அந் நாட்டின் முன்னணி நாளிதழளான ஹார்ரேட்ஸ் கூறியுள்ளது.
ஏற்கனவே இந்த இனத்தைச் சேர்ந்த 1,400 பேர் இந்தியாவில் இருந்து இஸ்ரேலில் குடியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
.... இங்கே பதியப்பட்டது நிஜாமுத்தீன் | குறிச்சொல்லிடப்பட்டது: இஸ்ரேல், யூதர்கள் | Leave a Comment »
பதிந்தவர் tamilmuslim மேல் ஆகஸ்ட் 22, 2008
சென்னை: அரசு அலுலகங்களில் லஞ்சம் கேட்டால், வாங்கினால் அதுகுறித்து தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம் என ஊழல் தடுப்புத் துறை தெரிவித்துள்ளது.
அரசு அலுவகங்களில் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்கும் வகையில் இந்த தொலைபேசி சேவையை லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் வாங்கினாலோ அல்லது கேட்டாலோ, ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்புத் துறை டி.எஸ்.பியை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
சென்னை நகருக்கான எண்கள்:
044-24455089, 9444113058.
பொது எண்கள்:
044-26621232, 9444077666
.... இங்கே பதியப்பட்டது நிஜாமுத்தீன் | குறிச்சொல்லிடப்பட்டது: சென்னை, தொலைபேசி, போலிஸ், லஞ்சம் | Leave a Comment »
பதிந்தவர் tamilmuslim மேல் ஆகஸ்ட் 1, 2008
பகுத்தறிவு பேசும் திராவிட கழகத்திற்கு பகிரங்க சவால்
இராமர் உண்மையிலேயே வாழ்ந்தவரா அல்லது கற்பனைப் பாத்திரமா என்ற விமர்சனம் தலை தூக்கியிருந்த சமயத்தில் அதற்கு பதில் சொல்லப்புகுந்த ராமகோ பாலன் நபிகள் நாயகம் பற்றி இப்படிக் கேள்வி கேட்க முடியுமா? என்று எதிர் விமர்சனம் செய்திருந்தார்.
அதற்கு மறுப்பு அளிக்கும் வகையில் உணர்வில் எழுதப்பட்ட கட்டுரையில் ”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கற்பனைப் பாத்திரமன்று. அவர் ஒரு முன் மாதிரி. அதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு ; அறிவியல் பூர்வமான நிரூபணங்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவரைக் கற்பனைக் கதாபாத்திரத்தோடு ஒப்பிடுவது மடத்தனம்” என குறிப்பிட்டிருந்தோம்.
(உணர்வு 5-11-2007)
இராமர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் நபிகள் நாயகம் இவ்வுலகில் வாழ்ந்த உண்மையான பாத்திரம் என்பதற்கு சான்று உள்ளது என்பதுதான் இதன் சாராம்சம்.
உணர்வில் எழுதப்பட்டதை ஒருவர் விமர்சிப்பது என்றால், எழுதப்பட்டது குறித்துதான் விமர்சிக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கற்பனைப் பாத்திரமே என்று சான்றுகளை எடுத்துக்காட்ட வேண்டும். அல்லது நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்தார் என்பதை நிரூபிக்க இயலுமா என்று அறைகூவல் விட வேண்டும்.
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
.... இங்கே பதியப்பட்டது நிஜாமுத்தீன் | குறிச்சொல்லிடப்பட்டது: அழைப்பு, உணர்வு, உண்மை ஏடு, சத்தியம், சவால், திராவிடம், பெரியார், வீரமணி | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் tamilmuslim மேல் ஜூலை 27, 2008
அணுசக்தி அடிமையாகின்றது இந்தியா!
அணு சக்தி தொடர்பான ஓர் ஒப்பந்தம் 1963லில் தாராப்பூர் அணுமின் நிலையத்திற்காக இந்தியாலிஅமெரிக்கா வோடு ஏற்கனவே செய்துள்ளது. அதில் சர்ச்சைக்குரிய ‘ஹைடு’ சட்டம் இல்லை. ஆனால் இப்போதைய ஒப்பந்தத்தில் ‘ஹைடு’ சட்டம் சேர்க்கப் பட்டதுதான் சிக்கல்களுக்கு காரணம்.
ஒப்பந்தம் என்றால் இருதரப்பும் சேர்ந்து திட்டமிட்டு ஆலோசிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ‘ஹைடு’ ஒப்பந்தம் முழுக்க முழுக்க அமெரிக்க அதிகாரிகளால் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய தரப்பு மதிக்கப்படவேயில்லை. கேட்கப்படவும் இல்லை.
அமெரிக்காவின் ‘ஹைடு’ சட்டத்தின்படி இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இந்தியா வின் வெளியுறவுத்துறை கொள்கைகளை அமெரிக்கா தீர்மானிக்கும்.
இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமெரிக்காவுக்கு எதிராக இல்லை என ஒவ்வொரு வருடமும் அமெரிக்க ஜனாதிபதிலிஅமெரிக்க பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமாம். அமெரிக்காவின் தவறு களை இந்தியா எதிர்த்தால் ஒப்பந்தம் ரத்தாகிவிடும்!
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
.... இங்கே பதியப்பட்டது நிஜாமுத்தீன் | குறிச்சொல்லிடப்பட்டது: அடிமைத்தனம், அணுஉலை, அணுசக்தி, அமேரிக்கா, இந்தியா, காங்கிரஸ், மன்மோகன் சிங் | Leave a Comment »
பதிந்தவர் tamilmuslim மேல் ஜூலை 26, 2008
நியூயார்க்: ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் பெண் நீதிபதி நவநீதம் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் தாண்டி இந்தப் பதவிக்கு இவர் வந்துள்ளார்.
67 வயதாகும் நவநீதம் பிள்ளை ஏழை தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்தவர். இவரது தந்தை பஸ் டிரைவராக இருந்தார். நிறவெறி தலைவிரித்தாடியபோது அதற்கு இலக்காகி பல்வேறு இன்னல்களை சந்தித்தவர் பிள்ளை.
மிகுந்த வறுமை, நிறவெறிக் கொடுமைக்கு மத்தியிலும் சிறப்பாக படித்து சட்டப் படிப்பை முடித்தார் பிள்ளை. தென் ஆப்பிரிக்காவின் நேடால் மாகாணத்திலேயே முதல் முறையாக வழக்கறிஞரான பெண் என்ற பெருமையும் பிள்ளைக்கு உள்ளது. 1968ம் ஆண்டு வக்கீலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் இனவெறி கொடுமைகளுக்கு எதிராக போராடினார். அதுதொடர்பான வழக்குகளில் ஆஜரானவர். முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆதரவாகவும் அரசியல் வழக்குகளில் ஆஜராகிய பெருமைக்குரியவர் பிள்ளை.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த பெருமைக்குரிய பிள்ளை, 2003ம் ஆண்டு ஹேக் நகரில் உள்ள சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அங்குதான் நீதிபதியாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
அதற்கு முன்பு 1995ம் ஆண்டு ருவாண்டாவுக்கான சர்வதேச கிரிமினல் டிரிப்யூனலிலும் நீதிபதியாக பணியாற்றியுள்ளாளார் பிள்ளை.
தற்போது ஐ.நா மனித உரிமை ஆணைய தலைவராக இருக்கும் கனடாவின் லூயிஸ் ஆர்பரின் பதவிக்காலம் ஜூன் 30ம் தேதி முடிவடைகிறது. அதன் பின்னர் பிள்ளை அப்பொறுப்பை ஏற்பார்.
பிள்ளையின் நியமனத்திற்கு ஆரம்பத்தில் அமெரிக்கா கடும் ஆட்சேபனை தெரிவித்தது. அவரது நியமனத்தை கடுமையாகவும் எதிர்த்தது. ஜிம்பாப்வேக்கு ஆதரவான பிள்ளையின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து இந்த எதிர்ப்பை தெரிவித்தது அமெரிக்கா. இருப்பினும் அதை நிராகரித்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், பிள்ளையை இந்த உயர் பதவிக்கு நியமனம் செய்து நேற்று உத்தரவிட்டார்.
192 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில் பிள்ளையின் நியமனத்திற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன் பின்னர் நான்கு ஆண்டு காலத்திற்கு இப்பதவியை வகிப்பார் பிள்ளை
.... இங்கே பதியப்பட்டது நிஜாமுத்தீன் | குறிச்சொல்லிடப்பட்டது: அமேரிக்கா, தமிழ், நீதிபதி, பெண், போராட்டம் | Leave a Comment »
பதிந்தவர் tamilmuslim மேல் ஜூலை 17, 2008
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது பழமொழி. அதாவது நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் நம் எந்த பணியையும் செய்ய முடியும்.
தூக்கம் என்பது உடலுக்கு மிக இன்றியமையாதது. உடலுக்கும், மனதிற்கும் முழுமையான ஓய்வை அளிக்கும் உன்னதமான ஒரு விஷயம்தான் தூக்கம்.
தினமும் 3 வேளை உண்ணும் உணவும், குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமும் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.
இரவில் அதிகமாக தூங்குபவர்களை விட குறைந்த நேரமே தூங்குபவர்களுக்குத்தான் உடல் பருமன் பிரச்சினை ஏற்படுவதாக சமீபத்தில் கனடா நாட்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் நடத்திய ஆய்வு கூறுகிறது.
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
.... இங்கே பதியப்பட்டது நிஜாமுத்தீன் | குறிச்சொல்லிடப்பட்டது: ஆரோக்யம், இரவு, உடலுறுப்பு, உடல், தூக்கம் | Leave a Comment »
பதிந்தவர் tamilmuslim மேல் ஜூலை 10, 2008
பலப்பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே மைக்ரோ சாப்டின் புதிய வெளியீடாக வெளிவந்திருக்கிறது ஆபிஸ் 2007. உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிற ஆபிஸ் 2003, எக்ஸ்பி போன்ற வெளியீடுகளிலிருந்து பலவகைகளில் மேம்பட்டு சிறப்பான பல வசதிகளுடன் வெளிவந்திருக்கிறது ஆபிஸ் 2007. இதன் வசதிகள் ஒவ்வொரு பயனாளரும் கணினியையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில் அடுத்த உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் எனக்கூறலாம். இப்போது நாம் வேர்டு, எக்ஸல், பவர்பாயிண்ட் முதலான எம்.எஸ் ஆபிஸ் பயன்பாடுகள் அதன் முந்தைய வெளியீடுகளை விட எவ்வாறு மேம்பட்டுள்ளது என்பதை சுருக்கமாகக் காணலாம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
.... இங்கே பதியப்பட்டது நிஜாமுத்தீன் | குறிச்சொல்லிடப்பட்டது: ஆபிஸ் 2007, தகவல், office 2007 | Leave a Comment »
பதிந்தவர் tamilmuslim மேல் ஜூன் 9, 2008
.... இங்கே பதியப்பட்டது நிஜாமுத்தீன் | குறிச்சொல்லிடப்பட்டது: குண்டுவெடிப்பு, பத்திரிக்கைகள், பயங்கரவாதம், முஸ்லிம், விகடன் | 1 மறுமொழி »