தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

ஆதிபாவத்தோடு மனிதன்?

பதிந்தவர் tamilmuslim மேல் ஜனவரி 9, 2008

மனிதன் ஜாதிகளோடும் ஆதிபாவத்தோடும் பிறக்கிறானா…?மனிதன் ஜாதிகளோடும், ஆதிபாவத்தொடும் பிறக்கிறான் என்று சில மதங்கள் கூறும்போது விஞ்ஞானம் சார்ந்த மருத்துவர்கள் குழுந்தை தூய்மையாகப் பிறக்கின்றது என்கிறார்கள், இஸ்லாமிய மத நம்பிக்கை குழந்தை பிறப்பைப்பற்றி என்ன சொல்கிறது?

வினா: சு.முருகானந்தம்,கடலூர்.

பிறக்கும் குழந்தையோடு இணைக்கப்படும் ஜாதிகளையோ, ஆதிபாவத்தையோ இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. எதை விஞ்ஞானம் கூறுவதாக நீங்கள் கூறுகிறீர்களோ அதைத்தான் திருக்குர்ஆன் கூறுகின்றது.
உங்கள் அன்னைகளின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை இறைவன் வெளிப்படுத்துகிறான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களுக்கு செவிப்புலன்களையும், பார்வைப்புலன்களையும், இதயங்களையும் கொடுத்திருக்கிறான். (அல்குர்ஆன் 16:78)
உங்கள் கேள்விக்குத் தெளிவான விடையளிக்கிறது இந்த வசனம் ‘தாயின் வயிற்றிலிருந்து ஒன்றுமே அறியாதவர்களாக நீங்கள் வெளிவருகிறீர்கள்’.
ஜாதியோ, அதிபாவமோ, இன்னபிற போன்ற எதுவும் குழந்தைப் பிறப்பைக் களங்கப் படுத்துவதில்லை. பார்வை- செவிப்புலன்கள்- இதயம் குழந்தைக்கு இருந்தாலும் எதையும் உள்வாங்கும் சூழ்நிலை கருவறையில் இல்லை என்பதால் உலகிற்கு வந்த பிறகே அந்த உறுப்புகள் குழந்தைக்கு பயன்படுகின்றன.
தனது சுற்றுப்புற சூழலால் பதிக்கப்படும் குழந்தை அந்த பாதிப்புகளை மட்டுமே உள்வாங்கி பதிவு செய்து கொள்கிறது. தாய், தந்தை, உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், இயற்கை என்று எந்த ஒரு உறவும் குழந்தைப் பிறந்து சில நாட்களுக்குப் பிறகு பதிவு செய்ய துவங்குபவைகளேயாகும். ஒன்றுமே அறியாதவர்களாக… என்பது வெறும் உடலியலை மட்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் ஆத்மா சார்ந்த ஆன்மீக விஷயங்களையும் குறிக்கத்தான் செய்யும். பிறப்பு அடிப்படையிலான உயர்வு, தாழ்வு எவரோ செய்தக் குற்றத்திற்கான தொடர் பாவ ஒட்டு என்று எவ்வித அழுக்கும் இல்லாமல் இறைவன் குழந்தையை வெளிப்படுத்துகிறான். உலகிற்கு வந்து தன்னுணர்வு பெற்றப் பிறகு தன்னைப் படைத்தவனை அறிவதுதான் மனிதனுக்கு தலையாயக் கடமையாக இருக்க வேண்டும். இதைத்தான் இஸ்லாம் விரும்புகிறது.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>