இணையங்களில் RSS – XML என்ற செய்தியோடைகள் மிக பிரபல்யமாகி விட்ட ஒரு நுட்பமாகும். அதை தொகுப்பது, அதற்கான வாய்ப்புகள், அது குறித்து விளக்கப்பட்டுள்ள பல தளங்கள், நம் விருப்பங்களின் உள்ளடக்கம் என்று ‘செய்தியோடை’ பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
ஜூன் 19th, 2008- க்கானத் தொகுப்பு
இணைய செய்தியோடை
பதிந்தவர் tamilmuslim மேல் ஜூன் 19, 2008
சில காலமாக இந்த RSS ஓடை அல்லது RSS ஊட்டு என்பதை இணைய தளங்களில் பார்த்திருப்பீர்கள். குறிப்பாக இணைய தளங்களில் செய்தி வாசிப்போர் இதை அறிய வந்திருக்கக்கூடும். ஒரு செஞ்சதுரத்தில் XML என்றோ அல்லது RSS என்றோ குறிக்கப்பட்டிருக்கும்.இந்த செஞ்சதுரம் காணப்படும் இணையதளங்களில் இம்மாதிரி வசதி கிட்டும். அவையன்றி வலைப் பூக்களிலும் இம்மாதிரி வசதி உண்டு.
வெப்தளங்களில் இயங்கும் http://www.bloglines.com/ போன்ற நூற்றுக் கணக்கான “அக்ரிகேட்டர்” அல்லது “நியூஸ் ரீடர்” எனப்படும் RSS படிப்பான்கள் நிறையவே இருக்கின்றன. இணையத்தில் துழாவினால் நிறையவே கிடைக்கும். நீங்கள் படிக்க விரும்பும் செய்தித் தலைப்புக்களின் RSS முகவரியை இட்டால் அங்கிருந்தே செய்திகளின் தளத்திற்குச் சென்று முழுவதையும் படிக்கலாம்.
இனி RSS ஊட்டுக்களைக் கொடுக்கும் இணைப்பு முகவரிகளை ஒவ்வொன்றாக உள்ளிடலாம். இந்தஊட்டுக்களை தரும் மின்னஞ்சல் குழுக்களோ, வலைப்பூக்களோ, இணைய தளங்களோஎதுவாயினும் உள்ளிடலாம்.
எடுத்துக்காட்டாக, தமிழ் உலகம்http://rss.groups.yahoo.com/group/tamil-ulagam/rssஎன்றும்,
இதை உங்கள் தளங்களிலும் பெற வேண்டும். என்ற எண்ணம் வருகிறதா? நல்லதுதான். அதை உருவாக்கி தளங்களில் சேர்ப்பது கடினமானதா? அப்படியெல்லாம் கடினமானதில்லை.மீயுரை குறியீட்டில் (HTML) சில வரிகள் எழுதத் தெரிந்தாலே போதும்.இதை எழுத “நோட்பேட்” போதுமானது. ஒருமுறை சரியான ஒரு படிவத்தை எழுதிவிட்டால் அதை வைத்தே (template) புதியதையும் எழுதலாம்.
RSS ஊட்டுக்களுக்காக XML வகை கோப்புக்களைப் பயன்படுத்துவதாகக் கண்டோம்.அந்த கோப்பை எந்த முறையில் உருவாக்கினாலும் சரி; அடிப்படையான இரண்டுவிடயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
அடுத்து RSS ஊட்டின் அமைப்பு ஒழுங்கு பற்றி:1. எந்த வகை RSS ஊட்டு என்பது பற்றி.2. அந்த ஊட்டின் சானல் (channel) அடக்கம்.
முதல் வரி இந்த கோப்பு ஒரு XML கோப்பு என்பதையும் இரண்டாவது வரி RSS கோப்பின் எந்த வகை என்பதையும் காட்டுகிறது. என்பது நீங்கள் தரும் விபரத்தின் அடக்கம்(அல்லது வழி?) என்பதைக் குறிப்பதாகும்.
தேவையான உள்ளீடுகளை செலுத்திவிட்டு “Next Item” பொத்தானை அழுத்தி ஒவ்வொரு ஆக்கத்திற்கான “Item” தொகுப்புக்களைச் செலுத்தியபின் “Finish” பொத்தானை அழுத்தினால் xml கோப்பின் (with professional look!)முழு வடிவமும் கிடைத்துவிடும். “Copy” பொத்தானை அழுத்தி பின் “நோட்பேடில்” அதை ஒட்டி தேவையான பெயருடன் xml (*.xml) கோப்பாக சேமித்துக் கொள்ளலாம்.
Date & Time ஐப் பெறுவதற்கு அதன்மீது சொடுக்கினாலே போதும். மேலும் Date & Time அமைப்பைப் பாருங்கள் இது ஒருவகை தர நிர்ணயத்திற்குட்பட்டது. நீங்கள் கையால் மாற்றம் செய்ய வேண்டுமானால் அதன் அமைப்பு(format) மாறாமல் செய்ய வேண்டும். ஏனிப்படி? நாம் உருவாக்கிய கோப்பு சரி என்பதை எப்படி அறிந்து கொள்வது? இதற்கெல்லாம் மேல், இந்தகோப்பை எப்படி பயனுறச் செய்வது?
ஆக இம்மாதிரி தேதியை, நேரத்தை கணக்கிட வேண்டுமானால் அதை படிப்பான்களால் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். தேதி இருக்கும் இடத்தில் நேரத்தை இட்டால் குழம்பிவிடும் அல்லவா? ஆக, தெரிவிக்க வேண்டியதை சரியாகத் தெரிவிக்க வேண்டும். என் நண்பன் சொன்ன ஜோக்:மாடிப்படி வழியாக இருவர் ஏறிப் போய்க் கொண்டிருந்தனர். ஒருவர் நம்மவர்; மற்றவர் மலையாளி. மாடிப்படி மூலையில் ஏதோ மலையாளத்தில் எழுதியிருக்கக் கண்டு “என்ன எழுதி இருக்கிறது?” என்று நம்மவர் மற்றவரை வினவ, அவரும் மலையாளம் கலந்த தமிழில் “இங்கு எச்சில் துப்புரது” என்று சொல்ல, நம்மவர் வாயில் குதப்பி இருந்த வெற்றிலையை பளிச்சென்று துப்பிவிட்டு போனாராம். “எச்சில் துப்பாதே” என்பதாக மலையாளத்தில் எழுதியிருந்த வாசகம்தான் அது. மலையாளத்தில் “..ரது” போட்டால் “கூடாது” என்பது நம்மவருக்குத் தெரியாது பாவம். இந்த கதைபோல் ஆகிவடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வரைமுறை.
RSS ஊட்டுக்களைச் சரிபபர்க்க உதவும் தளஙகளின் ஒன்றுதான் http://feedvalidator.org/ ஆகும். எளிமையானதும் அதிக விபரங்களை தரக் கூடியதுமாகும்.
http://www.geocities.com/csd_one/rss/sang.xml
சரி, இப்போது எல்லாம் ஆகிவிட்டது. அடுத்தது அந்தக் கோப்பை வழங்கியில் (சர்வர்) ஏற்ற வேண்டும். அத்தோடு நம் வேலை முடிந்துவிட்டதா? மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டாமா? முதலில் உங்கள் தளத்தில் முன் பக்கத்தில் உங்கள் தளம் RSS ஊட்டு வசதியை வழங்குகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும். அதன் சுட்டியையும் (இப்போது சர்வரில் ஏற்றிய RSSகோப்பின் சுட்டி) தர வேண்டும் மேலும் சுட்டியுடன் இந்தச் சிறிய icon ஐயும் சேர்த்துத் தாருங்கள்.http://www.geocities.com/csd_one/rss/xml.gif
http://www.syndic8.com/suggest.php?Mode=data
யாஹு தரும் பல சேவைகளில் http://my.yahoo.com உம் ஒன்று. இங்கு உங்களுக்குத் தேவையான யாஹு தொடர்பான எல்லா விடயங்களியும் ஒரு சேர காணலாம். கிட்டத்தட்ட ‘ஹோம் பேஜ்’ மாதிரி. இங்கு நாம் முன் சொன்ன RSS படிப்பான் வசதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.. நேரடியாகhttp://my.yahoo.com தளத்திற்குச் சென்றும் செய்யலாம். அல்லது ஒரே சொடுக்கில் கீழ்க்கண்டவாறும் செய்யலாம்:
Active Web Readerhttp://www.deskshare.com/awr.aspx
For Mozilla Firebird 0.7 v1.68: rssreader_168.xpihttp://fls.moo.jp/moz/rssreader/rssreader_168.xpi
Abilon http://www.activerefresh.com/abilon.php இது ஒரு சிறிய, (வெறும் 364 kb) அளவுள்ள எளிய செயலி.
இணையத்தைத் துழாவினால் நிறையவே கிடைக்கும். ஒவ்வொன்றையும் சோதித்தறிதலுக்கே நேரம் போதாது. நான் குறிப்பிட்டவைகளைவிட நல்ல செயலிகள் கூட கிட்டலாம். ஒரு நாளுக்கு நான்கைந்து என்று புதிதாக வந்துகொண்டே இருக்கின்றன.
நாம் தொடக்கத்தில் சொன்னபடி xml கோப்புக்களைத் திருத்தும்போது அதன் கட்டமைப்பு மாறாமலும் RSS தரத்தின்(எந்த வகையோ அதற்கொப்ப) வரைமுறை மீறப்படாமலும் இருக்க வேண்டும் என்று அறிவோம். (இங்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது RSS Version 2 ஆகும்)
இன்னொரு சிக்கல் சில எழுத்துகளை, குறியீடுகளை உள்ளிடுவது பற்றி. குறிப்பாக & < > போன்றவற்றை நேரடியயக உள்ளிட இயலாது. அது சிக்கலைத் தோற்றுவிக்கும். அதற்கு இண¨யான மீயுரை குறியீடுகளை இடவேண்டும்.அவை இப்படி இருக்கும்:
xml பாவனைக்கு வந்த பின் தகவல் பரிமாற்றத்தில் நிறையவே மாற்றங்கள் வந்திருக்கின்றன. இதன் சிறப்புக் குணங்களில் முக்கியமானது, சாதாரணமாக நாம் புழங்கும் உரை வடிவிலேயே (text format) தரவுகளை பரிமாறிக்கொள்ளலாம். ஆனால் சில விதிகளைக் கடைபிடிக்கவேண்டும். உரைவடிவில் இருப்பதால் கையால் எழுதுவது சுலபமாக இருந்தாலும் விதிகள் மீறப்படமல் இருப்பது அவசியம்.
.... இங்கே பதியப்பட்டது நிஜாமுத்தீன் | குறிச்சொல்லிடப்பட்டது: RSS - XML - செய்தியோடை | 2 மறுமொழிகள் »
