தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

ஆகஸ்ட், 2008 க்கான தொகுப்பு

இந்திய யூதர்கள்

பதிந்தவர் tamilmuslim மேல் ஆகஸ்ட் 22, 2008

டெல்அவிவ்: யூதர்களில் ஒரு பிரிவினராகக் கருதப்படும் பினேய் மெனேஷெ (Bnei Menashe) இனத்தைச் சேர்ந்த 7,232 இந்தியர்களை தனது நாட்டில் குடியேறச் செய்ய இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் இந்த சமூகத்தினர் இந்தியாவில் பழங்குடி அந்தஸ்து பெற்றவர்கள் ஆவர்.

யூதர்களான இவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு குடிபெயர்ந்தனர். இஸ்ரேலில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக உள்ளதால், இந்தியாவில் வசிக்கும் இவர்களை மீண்டும் இஸ்ரேலிலேயே குடியமர்த்த வேண்டும் என அந் நாட்டில் கோரிக்கை எழுந்தது.

இது குறித்து அந் நாட்டு பிரதமர் எகுட் ஓல்மெர்ட் விவாதித்து வருகிறார். விரைவில் இவர்கள் இஸ்ரேலில் குடியேற்றப்படுவார்கள் என அந் நாட்டின் முன்னணி நாளிதழளான ஹார்ரேட்ஸ் கூறியுள்ளது.

ஏற்கனவே இந்த இனத்தைச் சேர்ந்த 1,400 பேர் இந்தியாவில் இருந்து இஸ்ரேலில் குடியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

.... இங்கே பதியப்பட்டது நிஜாமுத்தீன் | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

போனில் புகார்

பதிந்தவர் tamilmuslim மேல் ஆகஸ்ட் 22, 2008

சென்னை: அரசு அலுலகங்களில் லஞ்சம் கேட்டால், வாங்கினால் அதுகுறித்து தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம் என ஊழல் தடுப்புத் துறை தெரிவித்துள்ளது.

அரசு அலுவகங்களில் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்கும் வகையில் இந்த தொலைபேசி சேவையை லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் வாங்கினாலோ அல்லது கேட்டாலோ, ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்புத் துறை டி.எஸ்.பியை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

சென்னை நகருக்கான எண்கள்:
044-24455089, 9444113058.

பொது எண்கள்:
044-26621232, 9444077666

.... இங்கே பதியப்பட்டது நிஜாமுத்தீன் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , | Leave a Comment »

தி க விற்கு சவால்

பதிந்தவர் tamilmuslim மேல் ஆகஸ்ட் 1, 2008

பகுத்தறிவு பேசும் திராவிட கழகத்திற்கு பகிரங்க சவால்

 

இராமர் உண்மையிலேயே வாழ்ந்தவரா அல்லது கற்பனைப் பாத்திரமா என்ற விமர்சனம் தலை தூக்கியிருந்த சமயத்தில் அதற்கு பதில் சொல்லப்புகுந்த ராமகோ பாலன் நபிகள் நாயகம் பற்றி இப்படிக் கேள்வி கேட்க முடியுமா? என்று எதிர் விமர்சனம் செய்திருந்தார்.

 

அதற்கு மறுப்பு அளிக்கும் வகையில் உணர்வில் எழுதப்பட்ட கட்டுரையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கற்பனைப் பாத்திரமன்று. அவர் ஒரு முன் மாதிரி. அதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு ; அறிவியல் பூர்வமான நிரூபணங்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவரைக் கற்பனைக் கதாபாத்திரத்தோடு ஒப்பிடுவது மடத்தனம்என குறிப்பிட்டிருந்தோம்.

(உணர்வு 5-11-2007)

 

இராமர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் நபிகள் நாயகம் இவ்வுலகில் வாழ்ந்த உண்மையான பாத்திரம் என்பதற்கு சான்று உள்ளது என்பதுதான் இதன் சாராம்சம்.

 

உணர்வில் எழுதப்பட்டதை ஒருவர் விமர்சிப்பது என்றால், எழுதப்பட்டது குறித்துதான் விமர்சிக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கற்பனைப் பாத்திரமே என்று சான்றுகளை எடுத்துக்காட்ட வேண்டும். அல்லது நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்தார் என்பதை நிரூபிக்க இயலுமா என்று அறைகூவல் விட வேண்டும்.

  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

.... இங்கே பதியப்பட்டது நிஜாமுத்தீன் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | 2 மறுமொழிகள் »