தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

கிறிஸ்த்துவம் கேள்வி பதில்

Posted by tamilmuslim மேல் ஜூலை 12, 2007

இதுதான் இஸ்லாம் இணையத்திற்கு வந்த கேள்விகளும் அதற்கான பதில்களும்.
இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கிறிஸ்த்துவர்களிடம் விளக்குவதாக இருந்தால் எப்படி விளக்குவது?irvanm(at)reedifmaildotcom
சிறு சிறு வேறுபாடுகள் என்று ஏராளமாக இருந்தாலும் மிக முக்கிய வேறுபாடுகள் சில உள்ளன.
ஒன்று. இயேசு இறைத்தூதரா.. அல்லது இறை மகனா…

கிறிஸ்த்தவர்களில் ஒரு சாரார் இயேசுவை இறைமகன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் இயேசுவை இறைத்தூதர் என்று நம்புகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்ட பைபிளும் குர்ஆனும் இயேசுவை இறைத்தூதர்தான் என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றது. அவர் இறை மகன் அல்ல என்று குர்ஆன் திட்டவட்டமாகவும் வன்மையாகவும் மறுத்துள்ளது. அதே போன்று பைபிளும் பல்வேறு இடங்களில் கர்த்தருக்கு சந்ததித்தேவையில்லை. மகன்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளது.
”அல்லாஹ் (தேவன்) சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்” என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் (கர்த்தர்)மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா? (அல்குர்ஆன் 10:68)

இரண்டு. கிறிஸ்த்துவத்தின் சிலுவைப்பாடு.
சிலுவையில் அறையப்பட்டது இயேசுதான் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதை வைத்துதான் சிலுவை வணக்கங்கள் தோன்றின. ஆனால் குர்ஆன் சிலுவை சம்பவத்தை அடியோடு மறுக்கின்றது. இயேசு சிலுவையில் அறையப்படவே இல்லை. அவரை கர்த்தர் காப்பாற்றி தன்னலவில் உயர்த்திக் கொண்டார் என்பது குர்ஆன் முன் வைக்கும் முடிவு. பைபிளில் இடம் பெறும் சிலுவை சம்பவங்களை ஊன்றி படித்தால் கூட அதில் உள்ள முரண்பாடுகள் இயேசுவின் சிலுவை மரணத்தை கேள்விக்குறியாக்குகின்றன.
(இயேசுவாகிய) அவரை அவர்கள்(யூதர்கள்) கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை.(அல்குர்ஆன் 4:157)

மூன்று. பைபிளின் நிலை.
பைபிளை வைத்தே கிறிஸ்த்தவம் தீர்மானிக்கப்படுகின்றது. பைபிள் பல்வேறு வரலாற்று குறிப்புகள், ஆங்காங்கே மனிதர்களின் சுய கற்பனைகள் போன்றவற்றின் தொகுப்பேயாகும். முஸ்லிம்கள் இந்த முடிவில் இருக்கும் போது ஆய்ந்தரிந்த பல கிறிஸ்த்தவர்களும் இந்தக் கருத்தை ஒப்புக் கொள்கிறார்கள். பைபிள் கர்த்தரால் இறக்கப்பட்ட புனித வேதமல்ல. இயேசுவுக்கு கர்த்தர் கொடுத்த வேதம் இன்றைக்கு இருக்கும் பைபிளல்ல. இயேசுவுக்குப் பின் அந்த வேதம் வேண்டிய அளவு மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டன. அந்த மாற்றங்களின் தொடர் பல காலம் நீடித்தது.(பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு குறித்து ஒரு விரிவான கட்டுரை விரைவில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ். அப்போது அது இறைவேதத்திற்குரிய தகுதியில் உள்ளதா என்பதை கண்டுக்கொள்ள முடியும்).
நான்கு. இயேசு இறுதித் தூதரா..
இயேசுவை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொண்ட ஒரு பிரிவினர் கிறிஸ்த்துவத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். பைபிளின் பல பகுதிகளை நம்பும் அவர்கள் இயேசுவை கடைசித் தூதர் என்று நம்பியுள்ளனர். அவர் கடைசித்தூதர் என்று அவர்கள் நம்பியுள்ள பைபிளின் எந்தப்பகுதியும் அறிவிக்காத நிலையில் இந்த முடிவுக்கு அவர்கள் வந்தததை அவர்கள் பரிசீலிக்க வேண்டும். இயேசுவுக்கு பிறகு வந்து சத்தியப்பாதையைக் காட்டும் ஒரு தேற்றவாளர் (இறைத்தூதர்) குறித்த அறிவிப்பை பைபிளில் காணலாம்.
நான் பிதாவை வேண்டிக் கொள்வேன். அப்போது என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும் படிக்கு வெறொரு தேற்றவாளரை அவர் உங்களுக்கு தந்தருள்வார். உலகம் அந்த சத்திய ஆவியானவரை காணாமலும் அறியாமலும் இருக்கின்ற படியால் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது. (யோவான்14:15-16)

திருக்குர்ஆனும் – இயேசுவும்
ஒரு மதம் இன்னொரு மதத்தை கண்டுக் கொள்ளாமல் தனித்து போய் விட்டது போன்று இஸ்லாம் இல்லை. மோசே என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படும் மூஸாவின் வரலாற்றை திருக்குர்ஆன் விரிவாக எடுத்துச் சொல்வது போன்று இயேசுவைப் பற்றி குர்ஆன் விரிவாக பேசியுள்ளது. பைபிளில கிடைக்காத பல சம்பவங்கள் குர்ஆனில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மேரி என்றும் மரியாள் என்றும் அழைக்கப்படும் இயெசுவின் தாயார் மரியம் பற்றிய வரலாற்று குறிப்புகள் அதிக இடங்களில் குர்ஆனில் விவாதிக்கப்பட்டுள்ளன. (இது குறித்து இயேசுவுக்கு நேர்ந்ததென்ன.. என்று வரலாற்று தொகுப்பில் எழுதி வருகிறோம்). பைபிளில் கைகழுவப்பட்ட இஸ்மவேல் என்ற ஆப்ரஹாமின் மகனுடைய வம்சத் தோன்றலில் ஏற்பட்ட உலகப்புரட்சியை கிறிஸ்த்தவ உலகம் திட்டமிட்டே மூடி மறைத்து வருகின்றன.
மிக முக்கியமான ஒரேக் கொள்கையை போதிக்க வந்த மோசே மற்றும் இயேசு போன்றவர்கள் அவர்கள் காலத்து மக்களால் துன்பத்துக்கு ஆளானார்கள் என்றால் அவர்களுக்குப் பின் அவர்கள் போதித்து சென்றக் கொள்கை மதகுருக்களால் துன்பத்துக்கு ஆளானது. இதையெல்லாம் குர்ஆன் விரிவாக விவாதிக்கின்றது
இதுதான் முக்கியமாக கிறிஸ்த்தவர்களின் கவனத்திற்கு செல்ல வேண்டியவைகளாகும். தேவன் உங்களை இரச்சிப்பார் என்ற போதனையை சொல்லியே கிறிஸ்த்தவ மத போதகர்கள் கிறிஸ்த்தவர்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ள பாடுபடுகிறார்கள். உண்மையில் தேவன் மனிதர்களை இரட்சிக்க வேண்டுமென்றால் கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தித்தால் மட்டும் போதாது. தேவன் எதற்காக பகுத்தறிவைக் கொடுத்தாரோ அந்த அறிவை அவர் காட்டியுள்ள வழிகளுக்காக விசாலமாக்கிக் கொள்ள வேண்டும். இதில் ஒரு மாற்றம் வர வேண்டுமென்றால் அவர்களிடம் குர்ஆனின் போதனைகள் செல்ல வேண்டும்.
…………………………………………………………………………………..
நீங்கள் இயேசுவை முஸ்லிம் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் கிறிஸ்த்துவத்தை யார் உருவாக்கியது? kabmabulattyahoodotcom
கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டு முஸ்லிமாக இருந்து இஸ்ரவேலர்களிடம் *கர்த்தரின் பக்கம் திரும்புங்கள்* என்று பிரச்சாரம் செய்த இயேசு, கிறிஸ்த்தவம் என்ற எந்த ஒரு தனிமதத்தையும் உருவாக்கவில்லை. அவ்வாறு துணியும் அதிகாரம் அவருக்கு இல்லை.
வேதக்காரர்களே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! கர்த்தர்் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா(இயேசு) எனும் மஸீஹ் கர்த்தரின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். அவனது உயிருமாவார். எனவே கர்த்தரையும்், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.
மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.(அல்குர்ஆன் 4:171-172)
கிறிஸ்த்தவ மதம் என்பது இயேசுவோடு சம்பந்தப்பட்டதல்ல. அவருக்கு பின் ‘அவரது பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டேன்’ என்று சொல்லிக் கொண்டு வெளிபட்ட பவுல் தான் கிறிஸ்த்தவத்தின் தந்தை – நிறுவனர். பவுல் என்பவர் இல்லையென்றால் உலகில் இன்றைக்கு கிறிஸ்த்தவம் என்பது இருந்திருக்காது. மாறாக இயேசுவின் உண்மையான அழைப்பும் போதனைகளும் ஓரளவு மக்களுக்குக் கிடைத்திருக்கும். பவுல் வந்தவுடன் அந்த மக்களால் இயேசு மறக்கடிக்கப்பட்டு பவுல் உருவாக்கிய இயேசுவே மக்களிடம் முன்னிருத்தப்பட்டு விட்டார். எனவே கிறிஸ்த்துவத்திற்கும் இயேசு என்று அழைக்கப்படும் அந்த இறைத்தூதருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
……………………………………………………………………………………………………….
முஸ்லிம்கள் குர்ஆனை holy quran என்கிறோம் கிறிஸ்த்தவர்கள் பைபிளை holy bible என்கிறார்கள் கிறிஸ்த்தவர்களின் அந்த நம்பிக்கையை நாம் மறுக்கலாமா..? rafeeqrauoofa(att)gmaildotcom
ஒவ்வொருவரும் அவர்கள் நம்பும் ஒன்றை புனிதம் என்று கருதுவது அவர்களின் விருப்பத்தை சார்ந்தது என்றாலும் பைபிளைப் பற்றி நாம் கருத்து வைப்பதற்கு காரணம் இறைவேதம் என்ற தகுதியில் அது இல்லை என்பதால் தான்.இறை வேதம் என்று அறிமுகப்படுத்தப்படும் ஒன்றில் எதுவெல்லாம் இருக்கக் கூடாதோ அவைகள் பரவலாக பைபிளில் கிடைக்கின்றன.வரலாற்றுக் குழப்பங்கள், முரண்பாடுகள், பச்சையாக விவரிக்கப்படும் பாலியல் கதைகள், மாமனாருக்கு மருமகளுடன் தொடர்புப் பற்றி கிறிஸ்த்தவர்கள் புனிதமாக கருதும் பைபிள் இப்படி விவரிக்கின்றது.
அப்பொழுது ”உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது?” சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்து போட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக் கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுக்களுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா? என்றான். அதற்கு அவள், நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன், நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்க வேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்து போய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள். (ஆதியாகமம் 38:13-29)
மாமனாருடன் மாமனாருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டு குழந்தைப் பெற்ற இந்த தாமாரின் வம்சத்தில் தான் இயேசு பிறந்தார் என்று பைபிள் கூறுகின்றது
மகள் தந்தைக்கு மதுவைக் கொடுத்து தன்னைக் கர்ப்பவதியாக்கிக் கொண்டது என்று பட்டியல் போடலாம்.
புனிதத்துவத்தை தீர்மானிப்பதில் கிறிஸ்த்தவ உலகில் ஏற்பட்டு நிற்கும் மாறுபாடுகளையும் இங்கு சுட்டிக் காட்டலாம்.
கத்தோலிகர்களிடம் உள்ள பைபிளில் 73 தொகுப்புகள் உள்ளன. இதை அவர்கள் புனிதம் என்று கருதுகிறார்கள். ஆனால் கிறிஸ்த்தவர்களில் உள்ள புரோட்டஸ்டண்ட் களிடம் உளள பைபிளில் 66 தொகுப்புகளே உள்ளன. கத்தோலிகர்களிடம் உள்ள கூடுதலான 7 தொகுப்புகளை இவர்கள் நிராகரித்து விட்டனர்.
கர்த்தருடை வார்த்தைகளுடன் ஒன்றையும் கூட்டாதே கூட்டினால் அவர் உன்னை கடிந்துக் கொள்வார் என்று பைபிள் கூறுகின்றது. (நீதிமொழிகள் 30:5)
இப்போது கத்தோலிகர்களிடம் உள்ளது கர்த்தரின் வார்த்தைகளா.. அல்லது புரோட்டஸ்டண்ட்களிடம் உள்ளது கர்த்தரின் வார்த்தைகளா..என்றெல்லாம் கிறிஸ்த்தவ உலகம் சிந்தித்தால் பைபிள் புனிதமானது என்ற நம்பிக்கையை அவர்கள் மறு பரிசீலனை செய்யத்துவங்கி விடுவார்கள்.
முஸ்லிம்களைப் பொருத்தவரை நாம் இயேசு(ஈஸா) விற்கு கர்த்தரால் ஒரு வேதம் கொடுக்கப்பட்டது என்பதை நம்புவோம். ஆனால் அது பைபிளல்ல. அந்த வேதம் அந்தகாலத்து மதகுருமார்களுக்கு தேவையான அளவு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு விட்டது. இறைவேதத்தில் நீக்குவதும் சேர்ப்பதும் அவர்களைப் பொருத்தவரை சாதாரணமாகி விட்டது. இன்றைக்கும் கூட பைபிளின் சில பகுதிகளை நீக்க கிறிஸ்த்தவ உலகில் சில மேலிடங்கள் யோசித்து வருகின்றன. இத்தகைய காரணங்களால் தான் நாம் பைபிளை புனித வேதமல்ல என்று கூறி வருகிறோம்.
பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு கட்டுரை வெளிவரும். அதில் உங்களுக்கு மேலதிக விளக்கங்கள் கிடைக்கும்.
………………………………………………………………….
கிறிஸ்த்தவர்களை முஸ்லிம்களாக மாற சொல்வதை என் கிறிஸ்த்தவ நண்பர் மறுக்கிறார். ஆப்ரஹாமின் வழித்தோன்றல்களாகிய நமக்கு மத்தியில் இந்த பாகுபாடு ஏன் என்று கேட்கிறார். என்ன பதில் சொல்வது? mmsafi20(att)hotmaildotcom
எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கில் ஒருவர் மதம் மாறுவதையோ இன்ன பிற உலக ஆசைகளுக்காக மதம் மாற எண்ணுவதையோ இஸ்லாம் அடியோடு மறுக்கின்றது. நித்திய ஜீவன் என்றக் குறிக்கோளும், அதற்கான தேடலும் இருந்து உண்மையை கண்டு மனமாற்றம் அடைவதே உண்மையான மாற்றமாகும். அத்தகைய மாற்றத்தையே இஸ்லாம் விரும்புகின்றது.
இயேசு உங்கள் பாவங்களுக்கான தம்மை பலியாக்கிக் கொண்டார், இயேசுவை விசுவாசிப்பதே நித்திய ஜீவன், இயேசுவின் பக்கம் மனம் திரும்புங்கள் என்று சில சுலோகங்களை திரும்ப திரும்ப மீடியாக்கள் வழியாக கிறிஸ்த்தவ மக்களிடம் கொண்டு போய் ஒருவித மயக்கத்தை மத போதகர்கள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
உண்மையில் பைபிளின் அனைத்துப் பகுதிகளையும் ஆழ்ந்து படித்து பரிசீலியுங்கள் என்ற திறந்த மனப்பான்மையோடு கிறிஸ்த்தவ போதகர்கள் பிரச்சாரம் செய்து தம் மக்களைத் தூண்டட்டும் பார்க்கலாம்.
நாம் கிறிஸ்த்தவர்களை இஸ்லாத்தை நோக்கி அழைக்கின்றோம் இதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் ஏற்றுக் கொண்ட இயேசு, மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்தார். *கர்த்தரை மட்டும் வணங்கி அவருக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழுங்கள்* என்ற இஸ்லாத்தின் அடிப்படையான போதனையே இயேசுவின் போதனையாக இருந்தது.
கிறிஸ்த்தவர்கள் மனமுரண்டாக இஸ்லாத்தை நிராகரித்தே வருகின்றார்கள். உண்மையில் இஸ்லாம் குறித்து ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வருகின்றார்களா என்றால் அதுதான் இல்லை. ஆண்டாண்டுக் காலமாக மதகுருக்களின் இஸ்லாமிய வெறுப்புணர்ச்சியும் மேற்கத்திய மீடியாக்களின் இஸ்லாத்திற்கெதிரான சூழ்ச்சிகளும் அவர்களின் மனங்களில் வேறூண்றியுள்ளன.
இந்த நிலை மாற வேண்டும். அவர்கள் இஸ்லாம் குறித்த ஆய்வில் (தப்பான மனநிலையோடு அனுகாமல்) இறங்க வேண்டும். இஸ்மவேலின் வழிதோன்றலில் வந்த முஹம்மத் அவர்கள் பரலோக ராஜ்யத்தின் மீட்சிக்கான வழியை காட்டி சென்றுள்ளார்கள். இயேசுவின் பணியையும் யூதர்களால் இயேசுவுக்கு ஏற்பட்ட இன்னல்கள், இயேசுவுக்கு கர்த்தரிடம் இருந்து கிடைத்த பாதுகாப்பு, இறுதி தீர்ப்பு நாளின் அடையாளமாக இயேசுவின் வருகை குறித்தெல்லாம் விளக்கமாக சொல்லி விட்டு சென்றுள்ளார்கள்.
மேற்குலக மீடியாக்களின் வண்யுக்தியை புறக்கணித்து ஒரு ஆய்வாளனாக குர்ஆனையும் முஹம்மத் அவர்களின் வாழ்க்கையையும் படிக்கத் துவங்கும் எந்த கிறிஸ்த்தவரும் இஸ்லாம் மீதான கடந்தக் கால தம் எண்ணங்களுக்காக நிச்சயம் வருந்துவார். குர்ஆன் மீதும் முஹம்மத் அவர்களின் மீதும் தாம் கொண்டிருந்த தப்பபிப்ராயத்திற்கு தேவனிடம் பாவமன்னிப்புக் கேட்பார்.
Advertisements

7 பதில்கள் to “கிறிஸ்த்துவம் கேள்வி பதில்”

 1. கஜினி said

  அன்புடையோர் அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் இணையத்தில் வெளிவந்த “கிறிஸ்த்துவம் கேள்வி பதில்” பகுதியில் கேள்வி கேட்ட அனைத்து E-mail முகவரிகல் போலியானவை என்றும் தாங்களே இது போன்ற கேள்விகளை சுயமாக தயாரித்து வெளியிட்டதாக http://www.tamilchristians.com/ கூருகிறது. தங்களின் விளக்கம் தேவை.

 2. அறிஞன் said

  அவர்கள் அவசரமாக அந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்கள். நடந்தது வேறு. சம்பந்தப்பட்ட இணையத்தின் நிர்வாக ஒப்புதலைக் கேட்டிருந்தோம் அவர்கள் பின் வாங்கியுள்ளார்கள்.

  நமக்கு மறுப்பளிக்கும் பிற வலைப்பூக்களை நாம் சுட்டிக்காட்டாமல் அவர்களின் இணையத்தை மட்டும் சுட்டிக் காட்டியதற்கு காரணம் அந்த இணையத்தில் மட்டும் தான் பின்னூடல்கள் வருகின்றன. நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு பிறரும் வலியுறுத்தலாம்.

  போலி IDகளை நாம் உருவாக்கவில்லை என்பதும் அவர்களின் அவசரத்தின் நிலையையும் தனிபதிவில் விளக்குவோம்

 3. இயேசு கிறிஸ்த்து said

  அன்பு நண்பர் அறிஞன் அவர்களுக்குஅஸ்ஸலாமு அலைக்கும். முதலில் உங்களுக்கு மறுப்பை வெளியிட்டது [url]http://isakoran.blogspot.com/2007/07/blog-post_16.html[/url] இந்த இணையமே.பின்புதான் கிறிஸ்தவர் இணையத்தில் பதியப்பட்டு உள்ளது.வலைபூக்களில் நீங்கள் ஒரு கட்டுரை வெளியிடும் போது அதற்கு பதில் தெரிந்த யாராக இருந்தாலும் பதில் அளிப்பார்கள்.அளித்த பதில் சரியா அல்லது தவறா என்பதை விளக்க முயற்சி செய்யுங்கள்.அதை விடுத்து இணையங்களுக்குள் விவாத அழைப்பை விட்டு பின் வாங்கியுள்ளார்கள் போன்ற உதார் எல்லாம் விடாதீர்கள்.உங்களிடம் இருந்து வந்த கட்டுரைக்கு பதில் எழுதிய இணையம் வேறு,அவைகள் பதியப் பட்டுள்ள இணையங்கள் வேறு.உண்மையை உலகம் அறிய வேண்டும் என்று ஆர்வம் இருந்தால் வீண் விவாதமெல்லாம் விட்டு விட்டு பதில்களை தாருங்கள்.இன்ஸா அல்லா.வரும் நாட்களில் உண்மையை உங்களிடம் எதிர் பார்க்கும் ஜாமா

 4. Asalam said

  மாற்று மத சகோதரர்களின் பார்வைக்கு இது வருமேயானால், யோசிக்க வேண்டிய கட்டாய நிலைமையில் இருப்பார்கள் நமது கிருத்துவ சகோதரர்கள். ஆமீன்

  asalamone

 5. சாதிக் said

  உங்கள் அனைவரின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உன்டாகட்டும்.

  நண்பர் உமர் என்பவர் http://www.tamilchristians.com/ என்ற மன்றத்தில் இதுதான் இஸ்லாம் தலத்தில் போலி முகவரி உருவாக்க படுவதாக அவசர பட்டு கூறிவுள்ளால் இது எதையும் ஆராயாமல் செய்திகளை, கருத்துகளை வெளியிடும் அவரின் தன்மையை எடுத்துக்காட்டுகிறது,

  இதுதான் இஸ்லாம் இணைய தலத்தில் வெளியிடப்படும் அனைத்து கேள்வி கேட்கும் நண்பர்களிம் E-Mail முகவரிகளும் மாற்றம் செய்யபட்டு வெளியிடபடுகிறது(வாசகர்களே..வழக்கம் போல உங்கள் மெயில் ஐடியில் சில மாற்றங்கள்) என்பதை கேள்விபதில் பகுதியில் முன்பே அறிவிக்கபட்டுள்ளது(பார்க்க: http://www.tamilmuslim.com/QA/qa27.htm
  அதே பகுதியில் 321 வது கேள்வியாக இடம் பெற்ற என் கேள்வியில் எனது E-mail முகவரி (sahiq@hotmail.com)மாற்றம் செய்யபட்டே வெளியிடபட்டுள்ளது.

  நண்பர் உமர் அவர்களுக்கு… கிருஸ்த்துவ கேள்விபதில் பகுதிமட்டுமல்ல, இஸ்லாம் சம்பத்தமான கேள்விபதில் பகுதியில் வெளியிடபட்ட அனைத்து E-mail முகவரிகளை கூட அதே பெயரில் உருவாக்களாம்,தங்களுக்கு நேரம் இருந்தால் முயற்ச்சி செய்துபார்க்கவும்.

 6. அறிஞன் said

  அன்பின் சாதிக் எல்லோர் மீதும் இறைவனின் சாந்தி நிலவட்டும்.

  அவர்கள் எழுதட்டும். தமிழ் மக்களுக்கு மத்தியில் இஸ்லாம் கிறிஸ்த்தவம் பற்றிய கருத்து பரிமாற்றங்கள் மிக குறைவு. அதை துவங்கியுள்ளோம். பல முஸ்லிம் சகோதரர்களும் – கிறிஸ்த்தவ சகோதரர்களும் இதில் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

  அவர்களுக்குரிய பதில் தயாராகின்றது. பல்வேறு பணிகளின் நிமித்தமாக உடன் பதிலளிக்க முடியவில்லை. கர்த்தர் நாடினால் இன்னும் ஓரிரு நாட்களில் அந்த பதில் அப்டேடாகும்.

  அவர்கள் வைக்கும் இந்த காரணங்களால் நாம் பின்வாங்கப் போவதில்லை. காலதாமதமானாலும் அனைத்து விபரங்களையும் எழுதத்தான் செய்வோம்.

  முடிந்தவரை இந்தக் கட்டுரைகளை பிறர் பார்வைக்கு எடுத்துச் செல்லுங்கள். உங்கள் பதிவுக்கு நன்றி. தொடர்ந்து பதிவிடுங்கள்.

  ஸலாம்.

 7. பா.பார்த்தீபன் said

  நீங்கள் பவுல் கிறிஸ்த்தவத்தை நிறுவினார் என்று கூறுகிறீர்கள் ஆனால் பவுலுக்கு முன்பே அப்போஸ்த்தலர்களான பேதுரு, யோவான் போன்றோரின் பிரசங்களின் மூலம் அநேக ஜனங்கள் இயேசுவை இறைமகன் என்று விசுவாசித்தார்களே இதைப்பற்றி உமது கருத்து என்ன?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: