தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

சிதைக்கப்படும் பிஞ்சுக் குழந்தைகள்

Posted by tamilmuslim மேல் ஓகஸ்ட் 10, 2007

அமீரகத்திலிருந்து அபூ அஃப்ரீன்.
இந்தியாவின் பல மாநிலங்களில் பெண் சிசுக்கொலைகள் தற்போது அதிகரித்து விட்ட பல செய்திகளை நமக்கு ஊடகத்துறைகள் தெரிவிக்கின்றன. ஆனால் அரசுத்துறையும், அரசாங்க அதிகாரிகளும் மக்களிடம் சொல்லும் விழிப்புணர்வானது, சொல்லும் போது.. சரி தான் செய்ய மாட்டோம்.. என்று தலையினை ஆட்டுவார்கள். ஆனால் அவர்கள் சென்ற அடுத்த நிமிடமே அவர்களின் வேலையினை காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.
சமீபத்தில் ஒரிஸ்ஸா மாநிலம் புவனேஷ்வரில், பிறந்த பல குழந்தைகளின் எலும்புகள் மற்றும் சிதைந்த உடல் பாகங்கள் 30 பிளாஸ்டிக் பைகளில் அங்குள்ள தெருக்களில் கண்டு பிடிக்கப்பட்டது என்ற செய்திகள் பல பத்திரிகைகளில் வந்தது. இதனை ஊடகத்துறைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால் நமக்கு தெரிவித்து விட்டது, ஆனால் இது போல் பல சம்பவங்கள் யாருக்கு தெரியாமல் வட மாநிலங்களில் அதிகமாக நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன.
ஒரிஸ்ஸா மாநிலத்தின் காவல் துறை அதிகாரியான திரு. அமரநந்தா பட்நாயக் (MR. AMARANANDA PATNAYAK – The Director – General of Police in the Eastern state of Orissa) அவர்கள் கூறுகையில், ஆண் குழந்தைகளுக்கு ஆசைப்படும் பல பெற்றோர்கள் பெண் குழந்தைகள் பிறந்தால் அதனை கொன்று விடுகிறார்கள். அல்லது ஆறு, குளம், ஏரிகள், ஓடும் இரயில் முதலியவற்றில் ஏறிந்து விடுகிறார்கள். மேற்குறிப்பிட்ட சம்பவத்தினை பற்றி மேலும் விசாரிக்க வேண்டி அந்த மாநிலத்தின் தனியார் மருத்துவமனையையும், மற்றும் உள்ள மருத்துவமனைகளையும் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றார்.
‘(மனிதர்களே..!) நீங்கள் வறுமைக்குப் பயந்து, உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள், அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கைத் தேவைகளை) வழங்குகிறோம். நிச்சயமாக அவர்களைக் கொலை செய்வது, பெரும் குற்றமாக இருக்கிறது.’ அல்குர்ஆன் : 17 : 31.
இந்திய தலைநகரான புதுடில்லியில் சென்ற மாதம், மருத்துவர் ஒருவரின் வீட்டின் சாக்கடை நீர்த்தொட்டிலிருந்து சிதைக்கப்பட்ட பல பெண்குழந்தைகளின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன. மற்றும், சென்ற வருடம் வடக்கு மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் 25 சம்பவங்கள் இது போல் நடப்பதற்கு முன் தடுக்கப்பட்டு விட்டன என்ற செய்தியினை அங்குள்ள காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள்.
கருக்கலைப்பு மூலமாக சிசுகளை கொலை செய்வதும், கருவில் இருக்கும் பிள்ளை என்ன என்பதினை பார்க்கவும் கூடாது என்ற சட்டம் இந்தியாவில் உள்ளது. ஆனால் இதனை யாரும் கடைப்பிடிப்பது இல்லை என்ற குறைகள் தான் அதிகம். இந்திய அரசு, கருவில் சிசுவினை கொல்லும் பெற்றோர்களுக்கும், அவற்றிற்கு உடந்தையாக இருக்கும் நபர்களுக்கும் பல கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவரான திருமதி. பிரதிபா பாடில் அவர்கள் இத்தகைய சம்பங்கள் இந்தியாவில், நடைபெறாமல் இருக்க வேண்டி அரசாங்கத்தினையும் மற்றும் அரசுத்துறை ஊடகச் சாதனங்களையும் முடக்கி விட வேண்டும். பாலர் படுகொலைகளுக்கு யார் காரணமாக இருந்தாலும் தயவு தட்சணயம் பாராமல் அவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
ஒரிஸ்ஸாவில் நடந்த மற்றொரு சம்பவம், அங்கு ஜெய்ப்பூர் என்ற இடத்தில், தான் பெற்ற பிள்ளையினை வளர்க்க வசதி வாய்ப்பு இல்லை என்பதற்காக வேண்டி, தன்னுடைய ஐந்தாவது குழந்தையினை மற்றொருவருக்கு குறைந்த விலைக்கு விற்று இருக்கிறார் தனியார் லாரி ஓட்டுனர் ஒருவர். அவரின் மாத வருமானம் 1000 ரூபாய் மட்டுமே. அவருடைய மனைவியும் அங்குள்ள பீடித்தொழில்சாலையில் மாத வருமானம் 500 ரூபாய் மட்டும் பெறுகிறார்.
அகமதாபாத்தில், சிமாலியா கிராமத்தில் (Dahod District _ near Vadodara) 35 வயதுடைய பெண்மணி ஒருவர், தன்னுடைய கணவன் மற்ற பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தார் என்பதனை அறிந்து, தான் பெற்ற 5 குழந்தைகளுடன் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்தார். இவர்களை அங்குள்ள மீட்புப்படையினர் மீட்டனர். மற்றும் கள்ளத்தொடர்பினை அதிகமாக கணவன்மார்கள் வைத்து இருந்ததால் குஜராத் மாநிலத்தில் மட்டும் 500 பெண்கள் இதுவரை தற்கொலை செய்துக்கொண்டு உள்ளார்கள் என்ற செய்தியும் தற்போது ஊடகத்துறைகள் தெரிவிக்கின்றன.
மற்றும் இந்த மாதம், (தேதி சரியாக குறிப்பிடப்பட வில்லை) புதுடில்லியில் நடந்த மற்றொரு சம்பவம், மாமியார் ஒருத்தி தன்னுடைய 25 நாள்கள் மட்டுமே பூர்த்தியான பேத்தியினை கொன்று இருக்கிறார். திருமதி. ரேணு ஜெயின் (Thirumathi. Renu Jain) அவர்கள் காவல் துறையினரிடம் கூறும் போது, நான் என்னுடைய மகளுக்கு உணவு கொடுத்துக்கொண்டு இருந்தேன் அப்போது, என்னுடைய மாமியார், என்னுடைய மடியில் இருந்த குழந்தையினை கட்டாயமாக தூக்கினார். அதன் பின்னர் குழந்தையினை தனி அறைக்கு தூக்கி சென்று ஏதோ ஒன்றினை கொடுத்து இருக்கிறார். அடுத்த ஐந்து நிமிடத்தில் குழந்தை நோய் வாய்ப்பட்டு உடல் உணர்ச்சியற்ற நிலைக்கு போய் விட்டது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றோம். ஆனால் மாலையில் அந்த குழந்தை இறந்து விட்டது என்று கண்ணீர் மல்க அவர் கூறினார்.
பெண் குழந்தைகள் பிறந்தால், நகை பணம் சேர்த்து வைக்க வேண்டும், வரதட்சனை கொடுக்க வேண்டும், நல்லதொரு ஆணிடம் பிடித்துக்கொடுக்க வேண்டும் என்ற பல கவலையுடன் தான் பல பெற்றோர்கள் இருக்கிறார்கள். ஆகையால் பிறக்க போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதையினை பார்க்கும் ஆவலில் பல பெற்றோர்கள் மருத்துவர்களையும் மற்றும் சிடி, ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் (Ultra Sound) போன்ற நவீன கருவிகளை தேடி அலைகிறார்கள். மருத்துவர்கள் கேட்கும் பணத்தினை கொடுத்து விட்டு அவர்களின் வயிற்றினை நிரம்பி, இவர்கள் வயிற்றினை கழுவிக்கொள்கிறார்கள். அபார்ஷன் என்ற வார்த்தையானது தற்போது நாகரீக உலகத்தில் ஃபாஷன் போல் ஆகி விட்டது. இன்றைக்கு உடுத்தும் உடையினை நாளை வாஷிங் செய்வது போல், இன்று கரு என்றால் அது நாளை கழுவப்படும் என்ற தொணியில் பல நாகரீக நங்கைகள் வளர்ந்து விட்டார்கள். அதனால் தான் அவர்களின் பாவாடைகளும் குட்டையாக போய் கொண்டு இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனமான (WHO- World Health Organisation) 27.07.2007 ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. உலகில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆண்டு ஒன்றுக்கு 4 மில்லியன் வரை இறந்து போய் விடுகிறார்கள் என்று சொல்கிறது. இவர்களின் இந்த இறப்பிற்கு காரணமாக சுற்றுப்புற சூழல், சுகாதாரம் இல்லாத குடி நீர், மலேரியா காய்ச்சல், கொசு மூலமாக பரவக்கூடிய நோய்கள் மற்றும் உள்ள இவைகள் போன்ற காரணத்தினால் இந்த பிஞ்சுகள் இறக்கிறார்கள் என்று சொல்கிறது. இந்த அறிக்கையினை இந்த அமைப்பின் அதிகாரியான Mr. JENNY PRONCZUK அவர்கள் வெளியிட்டார்கள்.
கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் பெண் குழந்தைகள் இறந்து இருக்கிறார்கள் என்ற அறிக்கையானது தற்போது வெளியாகி உள்ளது. கருக்கலைப்பு (Unborn Babies) மற்றும் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் (New Born Babies) பெற்றோர்களாலும் மற்றும் உள்ள உறவினர்களாலும் இறக்க வைக்கப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவலை அந்த அறிக்கை தருகிறது.
இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைந்து உள்ள, சிறிய நகரான நயாகர்க் (Nayagarsh) என்ற இடத்தில் மண்பரப்புகளில் பிறந்த பெண் குழந்தைகளில் சிதைந்த உடல் பகுதிகள் பல கண்டெடுக்கப்பட்டன. விளையாட போன 11 வயது உடைய உபேந்திரா கலாஸா என்பவன், இதனை கண்டு பிடித்து காவல்துறைக்கு தெரிவித்துள்ளான். பின்னர் காவல் துறையினர் அங்குள்ள மருத்துவமனைகளை சோதனை போட்டு சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உள்ளனர்.
உலகத்தில் தற்போது சூடான், செச்சனியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை, மியான்மர், உகாண்டா, சோமாலியா, ஈராக், பாலஸ்தீனம், லெபனான், காங்கோ மற்றும் உள்ள நாடுகளில் நடக்கும் போராலும் பல குழந்தைகள் மற்றும் பெண்களும் எந்த விதமான காரணமும் இன்றி கொல்லப்படுகிறார்கள். இங்கு நடைபெறும் வன்முறையாலும் மற்றும் வன்செயலாலும், இனப்பிரச்சனையாலும் இவர்கள் கொல்லப்படுகிறார்கள் அநியாயமாக. இப்படியாக போய்க்கொண்டு இருந்தால் வரும் காலங்கள் என்ன செய்யும்.. என்ற கவலையுடன்..?..!
‘ஒவ்வோர் ஆத்மாவும் நன்மையில் தான் செய்தவற்றையும், தீமையில் தான் செய்தவற்றையும தன் முன் ஆஜராக்கபட்டதாகப் பெறும் (அந்) நாளில், அது, தான் செய்தவைகளுக்கும், தனக்கும் மத்தியில் வெகுதூரம் இருந்திருக்க வேண்டுமே என விரும்பும். அன்றியும், அல்லாஹ் தன்னைப் பற்றி (அவனது தண்டனையை நினைவு கூருமாறு) உங்களை எச்சரிக்கை செய்கிறான், இன்னும் அல்லாஹ் (தன்) அடியார்கள் மீது மிக்க இரக்கமுடையவன்’. அல்குர்ஆன் 3 : 30.
5.8.07 அன்று பெங்களூரில் ஸ்ரீராம்புரம் (Bangalore – Srirampuram) என்ற நகரில், அங்குள்ள குப்பைத் தொட்டில்களில் சிதைக்கப்பட்ட 23 பெண் குழந்தைகளில் உடல் பகுதிகள் கருப்பு பைகளில் சுற்றப்பட்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டன. குப்பைகளை கிளறி பழைய பொருட்களை எடுத்து விற்கும் தொழில் செய்பவர்கள் (Rag Pickers)அதனை கண்டுபிடித்து அங்குள்ள காவல் துறையினரிடம் தெரிவித்து உள்ளனர். அந்த பைகளில் ஊசிகள், மற்றும் துணிக்கட்டு (Syrines – Bandage Cotton) களும், மருத்துவமனை சம்மந்தப்பட்ட மற்ற பொருட்களும் கிடைத்தன. ஆகையால் அங்குள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் Nursing Homes ஆகியவைகள் காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள Victoria Hospital இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்தது என்று கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.
கர்நாடகா மாநில் மகளிர் உரிமை கழகத்தினை சார்ந்த திருமதி. பிரமிளா நேசர்ஹி (Thirumathi. Pramila Nesargi – Karnanata State Women’s Commission Chair person) அவர்கள் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, தகாத முறையிலும் மற்றும் தகாத உறவிலும் குழந்தைகளை பெறும் சில பேர்கள் தான் அவர்கள் பெற்ற குழந்தைகளை, யாருக்கும் தெரியாமல் காய்கறிகளை வெட்டி வீசுவது போல் குப்பைகளில் வெட்டி வீசிகிறார்கள். இத்தகைய சம்பவங்கள் நடைபெற ஒரு சில தனியார் மருத்துவமனைகள் துணை புரிகின்றன, இவர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கையானது எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். மேலும் அவர் குறிப்பிடுகையில், சில மருத்துவனைகள் PNDT (Pre – Natal Diagnostic Techniques) என்ற சட்டத்தினை மீறி வருகிறார்கள். உரிமம் பெற்ற பல தனியார் மருத்துவமனைகள் பெங்களூரில் உள்ளது. அவைகள் அனைத்தும் காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றார்.
கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சரான திரு. ஆர். அசோக் (Mr. Ashok – Karnataka Health Minister) கடுமையான கண்காணிப்பில் இத்தகைய மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த சம்பவங்கள் இனியும் இங்கு நடைபெறாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
சென்ற வருடம் ஆகஸ்டு 8 ம் தேதி அன்று தெற்கு லெபனான் (Bazuriye – South Lebanon) நடந்த சம்பவம் ஒன்று, அங்கு 7 வயதுடைய தலியா ஹீசைன் (Dalia Hussein) என்ற சிறுமியானவள், தன்னுடைய தந்தை தம்பி தங்கை ஆகியோர்களுடன் கடைத்தெருவிற்கு உணவுப்பொருட்கள் வாங்க சென்று இருக்கிறார். ஆதிக்க சக்தியான இஸ்ரேல் படைகள் அவர்கள் மீது குண்டுகளை பொழிந்தது. அந்த சம்பவத்தில் அந்த சிறுமியின் தந்தை மற்றும் தம்பி தங்கைகள் காயங்களுடன் தப்பினர். ஆனால் தலியா ஹீசைன் என்ற அந்த சிறுமியானவள் முகம் மற்றும் உடல் பகுதிகள் அனைத்தும் சிதையப்பட்டு கிடந்தார். அந்த சிறுமி இறந்து விட்டாள் என்று எண்ணிய அவர்களின் பெற்றோர்கள் அங்குள்ள மருத்துவமனை சவக்கிடங்கில் போட்டு விட்டனர். இந்த சம்பவத்தினை பற்றி செய்தி சேகரிக்க சென்ற புகைப்பட நிருபரான ஆயாஅரன ணுயலயவ என்பவர், புகைப்படம் எடுக்கும் போது அந்த சிறுமிக்கு உயிர் உள்ளது என்று சொன்னார். உடனே அந்த சிறுமியினை அங்குள்ள இத்தாலி நாட்டைச்சார்ந்த செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த சிறுமிக்கு கடுமையான சிகிச்சைகள் செய்தனர். உடலில் சில பகுதிகளில் ஆறு ஆபரேஷன் செய்தனர். அந்த சிறுமியானவள், தற்போது நடக்க முடியாமலும் மற்றும் பேசமுடியாமலும் இருக்கிறாள். என்னுடைய மகள் சீக்கிரமாக நடப்பாள் மற்றும் பேசுவாள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் அந்த சிறுமியின் பெற்றோர்கள். அல்லாஹ் நாடினால்.. அந்த சிறுமி விரைவில் குணமடைய நாம் அனைவரும் பிராத்திப்போம்.
இது போல் பல சிறார்கள் தினம் தினம் பல பிரச்சனைகளை எதிர் நோக்கி இருக்கிறார்கள். நமக்கு தெரிந்த சம்பவங்கள் இவைகள்..நமக்கு தெரியாமல் எத்தனையோ சம்பவங்கள் நாள் தோறும்..!.?
Advertisements

5 பதில்கள் to “சிதைக்கப்படும் பிஞ்சுக் குழந்தைகள்”

 1. மாசிலா said

  ஏம்பா, அறிஞரே!
  கொஞ்சம் குட்டையா எழுதக்கூடாதா? அதுல வேற பொடி எழுத்துங்க. முக்கியமான விடயத்த பற்றி எழுதறீங்க. இம்மாம் பெரிய பக்கத்த பாத்து பயந்தே ஓடிட்டேன். பொருமையில வர்ரேனுங்கய்யா.

 2. தஞ்சாவூரான் said

  //அபார்ஷன் என்ற வார்த்தையானது தற்போது நாகரீக உலகத்தில் ஃபாஷன் போல் ஆகி விட்டது. இன்றைக்கு உடுத்தும் உடையினை நாளை வாஷிங் செய்வது போல், இன்று கரு என்றால் அது நாளை கழுவப்படும் என்ற தொணியில் பல நாகரீக நங்கைகள் வளர்ந்து விட்டார்கள். அதனால் தான் அவர்களின் பாவாடைகளும் குட்டையாக போய் கொண்டு இருக்கிறது.//

  வேதனையான உண்மை…

 3. masdooka said

  சிதைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகள் பற்றிய செய்தி இதயத்தை ரணமாக்கியது.
  அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும்
  ‘எந்த குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப் பட்டீர்கள்?’ என்று
  (திருக் குர்ஆன் 81: 8.9)

 4. முஸ்லிம்நேசன் said

  சிதைக்கப்பட்ட பெண் குழந்தைகள் பற்றிய கட்டுரை கண்டபோது இதயம் ரணமாகியது.
  என்ன பாவத்துக்காக கொல்லப்படாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவர் விசாரிக்கப்படும் போது (திருக் குர்ஆன் 81:8.9) என்னும் இறைசவத வசனம் தான் நினைவுக்கு வந்தது.

 5. masdooka said

  சிதைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகள் பற்றிய கட்டுரை கண்டேன் இதயம் ரணமாகியது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: