தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

இணைய உலக காயங்கள்

Posted by tamilmuslim மேல் ஓகஸ்ட் 23, 2007

முத்துப்பேட்டை அபூஅஃப்ரீன்

இளைய தலைமுறையினர், தாங்களின் அறிவினை வளர்ந்துக்கொள்ள வேண்டி பற்பல தகவல் சாதனங்கள் தற்போது வந்துக்கொண்டு இருக்கும் இத்தகைய தருணத்தில், வலையத்தளம் இணையத்தளம் சார்டிங் வீடியோ விளையாட்டுகள் போன்றவற்றினால் இளைய சமுதாயத்தினரை பல வகையான நோய்கள் அவர்களை பிடித்துக்கொண்டு பித்து பிடித்தது போல் ஆக்கி வருகிறது. (பார்க்க: இது தான் இஸ்லாம் இணையத்தள பகுதி, பெற்றோர்களே.. கொஞ்சம் நில்லுங்கள்.. என்ற கட்டுரையினை..)

பள்ளி மற்றும் கல்லூரியின் விடுமுறைகளில், நமக்கு தெரிந்து கோடை கால கணிப்பொறி சிறப்பு பயற்சி வகுப்புகள் (Computer Training Special Classes) நடைபெறும். ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான, சீனாவில் கணிப்பொறியின் வளர்ச்சியினால் அதிகமான இளைய சமுதாயத்தினர் நரம்பு தளர்ச்சி, மனக்கஷ்டம், மன வேதனை, பயம் போன்ற பல நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்களிலிருந்து இவர்களை மீட்க வேண்டி பத்து நாள்கள் கொண்ட கோடை கால சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. இந்த வகுப்புகளானது, குறிப்பாக இணையத்தளம் மற்றும் வலையத்தளம் போன்றவற்றில் உள்ள விளையாட்டுகளில் அடிமையாகி போன 14 வயதிலிருந்து 22 வயதுக்குட்பட்ட இளைய சமுதாயத்தினருக்காக, பிஜிங்கில் (Beijing) உள்ள இணையத்தள மீட்பு பயிற்சி குழுமம் (Internet Addiction treatment Centre) என்ற அமைப்பானது நடத்தி இருக்கின்றன.

லண்டனில், தற்போது எடுக்கப்பட்ட ஆய்வின் படி ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்களின் உடல் எடையானது அவர்களின் வயதுக்கு மீறியதாக இருக்கிறது. காரணம் என்னவென்றால், கணிப்பொறி முன்பாக பல மணி நேரங்களை அவர்கள் செலவிடுகிறார்கள். அத்துடன் பொழுது போக்கிற்காக அவர்கள் யாருமே வெளியே செல்வதில்லை. வீட்டுக்குள்ளேயே இருந்து பல உணவுப்பொருட்களை ஒரே நேரத்தில் உட்கொள்கிறார்கள். அவர்கள் சாப்பிடும் அனைத்துமே கொழுப்பு சத்து, புரதச்சத்து, பைபர் சத்து அதிகம் உள்ளதான உணவாக இருக்கிறது. அவர்கள் சாப்பிடும் உணவானது சீக்கிரமாக ஜீரணமாகமால் அவர்களின் உடலுக்கு மிக பெரும் எடையினையும் மற்றும் ஆபத்தினை கொடுக்கிறது. இவர்களின் உடலினை எப்படியாவது குறைக்க வைக்க வேண்டும் என்று லண்டனில் உள்ள பல பெற்றோர்கள் கலலையுடன் புலம்புகிறார்கள்.

லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மின்னஞ்சல் (E.mail) மூலமாக பல தொல்லைகள் நாள்தோறும் அதனை உபயோகப்படுத்துவர்களுக்கு அதிகரித்து விட்டன. இந்த தொல்லைகள் அந்த நாடுகளில் பரவியது மட்டுமல்லாமல், மற்ற நாடுகளுக்கும் பரவி விட்டன. உலகில் யாராவது எங்கிருந்தாவது ஒரு மூலையில் இருந்துக்கொண்டு, என்னிடம் அதிகமாக பணம் உள்ளது, அதனை எப்படி செலவு செய்வது என்பது தெரியவில்லை, ஆகையால் தாங்களை என்னுடைய Life Partner ஆகவோ அல்லது Business Partner ஆகவோ சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். ஆகையால் தாங்களின் வங்கி கணக்கு எண்ணை எனக்கு தெரியப்படுத்தவும். நான் பணம் அனுப்பி வைக்கிறேன் என்று இருக்கும். நாம் பணம் கிடைக்க போகிறது என்பதினை எண்ணி அனுப்பி வைத்தால் நம்முடைய வங்கி கணக்கில் உள்ள பணமானது காணாமல் போய்விடும். இவர்களை தற்போது E.mail Thives என்று ஆங்கில மொழியில் கூறுகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட செய்தியானது சிறிய ஒரு உதாரணம் தான். இதனை படிக்கும் நண்பர்களுக்கு இது போல் நடந்து இருக்கும் என்பது எனது கருத்து. இணையத்தளத்தில் எத்தனையோ புதிய செய்திகள் இருக்கின்றன. ஆனால் அதனை விட்டு விட்டு புதியதாக எங்கு யாரை ஏமாற்றலாம் என்ற நோக்கத்தில் திருடர்கள் தோன்றுகிறார்கள் நாள்தோறும். அத்துடன் விபச்சாரங்கள் பெருகுவதற்கு மற்றும் சொல்ல முடியாத பல அனாச்சாரங்கள், கலாச்சார விபரீதங்கள் அதிகரித்து விட்டமைக்கு இத்தகைய சாதனங்களை தவறாக பயன் படுத்துவோரையும் நாம் கண் கூடாக காண்கிறோம்.

எதை விட்டும் நீங்கள் விலக்கப்பட்டிருக்கிறீர்களோ அத்தகைய பெரும் பாவ(மான காரிய)ங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (மற்ற சிறிய) தீயவைகளை உங்களை விட்டும் நாம் போக்கி விடுவோம். இன்னும், சங்கையான நுழைவிடத்தில் உங்களை நாம் நுழைவிப்போம். அல்குர்ஆன் 4 : 31

தென்கொரியா நாடானது, உலகின் முதன் முதலில் இயந்திர மனிதனை பற்றிய ஆய்வு ஒன்றினை (World’s First Robot ethics Charters) நடத்தி உள்ளது. Professor. Kim Dae – won (Professor of Myongji University) அவர்கள் தலைமையில் அந்த ஆய்வானது நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் 12 க்கும் அதிகமான அறிவியல் விஞ்ஞானிகளும், பொறியாளர்களும், மற்றும் பல்கலை கழக மாணாக்கர்களும் கலந்துக்கொண்டனர். இனிவரும் ஆண்டுகளில் மனிதனும் மற்றும் இயந்திர மனிதனும் கலந்து மற்றும் சேர்ந்து பணிகளை செய்தால் எவ்வாறு இருக்கும் என்று ஆராய்ந்தனர்.

2013 ஆம் ஆண்டுக்குள் தென்கொரியா நாட்டில் உள்ள எல்லா வீட்டிலும் இயந்திர மனிதன் (ரோபாட் – Robot) கொண்டு வருவோம். மற்றும் 2050 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டிலும் துணி துவைக்கவும் மற்றும் வீட்டு பணிகளை செய்யவும் ரோபாட் என்ற இயந்திர மனிதன் பயன் படுத்தப்படும் என்றும் அவர்கள் கருத்தினை வைத்தனர்.

மின் யாங் – ஷி (Min young – Gi – Manager of the Korea Advanced Intelligent Robot Association) அவர்கள் கூறும் போது, வரும் ஆண்டுகளில் பள்ளிக்கூட மாணாக்கர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பணிகளையும், நாட்டின் இராணுவத்தின் பல பணிகளை செய்யவும் ரோபாட்கள் பயன் படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

தென் கொரியாவில் 2012 ஆம் ஆண்டில் உலகின் முதல் ரோபாட் தீம் பூங்கா (Robot Land) ஒன்றினை உருவாக்க இப்போது இருந்தே பணிகளை மேற்கொண்டு வருகிறாhர்கள். இதற்காக வேண்டி பல டாலர் செலவுகளை செய்யவும் இப்போது இருந்தே தயாராகி விட்டார்கள் அந்த நாட்டினர்.

கொரியா நாட்டில் உள்ள (Korea Advanced Institute of Science and Technology (KAIST) உருவாக்கி உள்ள ரோபாட்டானது, பெண்களுடன் கலந்து உரையாடும், அவர்களுடன் பாடும், அவர்கள் செய்யும் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்யும். மற்றும் ஒப்ரோ (OFRO) என்ற ரோபாட்டானது வரும் ஆண்டுகளில் பள்ளி மற்றும் நிறுவனங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளது என்றும் அந்நாட்டினர் கூறுகிறார்கள். வருங்காலங்களில் கொரியா நாடுகள் மட்டுமல்ல இன்னும் பல நாடுகளிலும் ரோபாட்டிஸம் (Robotism) வரப்போகிறது வளரப்போகிறது. ரோபாட் வருகையின் மூலம் நன்மை கிடைக்கும் பட்சத்தில் நாம் அதனை வரவேற்கலாம். ஆனால் தீமைகளாய் இருக்கும் பட்சத்தில் அதற்கு நிச்சயமாக ஆட்சேபணை எழும்.

நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர் அவர்களுக்கு (விசுவாசிகளின் இதயங்களில்) நேசத்தையும் அர்ரஹ்மான் நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுப்பான்.அல்குர்ஆன் – 20 :96

ஜப்பான் நாட்டில் தற்போது முதியோர்களும் கணிப்பொறி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்களுக்கு கணிப்பொறி சம்மந்தமான பாடங்களை சொல்லிக்கொடுக்கும் முயற்சியில் அங்குள்ள ஒரு அமைப்பானது உருவாகி உள்ளது. இரண்டு முதிய வயதுடைய பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 200 முதியோர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கணிப்பொறி சம்மந்தமான அனைத்து பாடங்களை நன்றாக கற்று வருகிறார்கள். இவர்கள் தாங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்களுக்குள்ளேயே கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். ஜப்பான் ஊடகத்துறையானது தந்த ஆய்வானது, 60 வயதிலிருந்து 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் தற்போது கணிப்பொறியினை உபயோகப்படுத்தும் அளவானது 15.4 சதவீதத்திலிருந்து 32.3 சதவீகிதம் ஆகி விட்டது என்று சொல்கிறது. ஒரு பக்கம் சிறுவர்களுக்கு கணிப்பொறி பயிற்சி இன்னொரு பக்கம் முதியோர்களுக்கு பயிற்சி.. என்ன செய்யும் உலகம். உலகத்தின் பல பகுதிகளில் சிறார்கள் கணிப்பொறியினால் நோய் வாய் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தும் வயதான காலத்தில் நோய் வாய்ப்பட்ட பெரியோர்கள் அதிகமான நோயினை இணையத்தளம் வழியாக தானாகவே தேடிக்கொள்கிறார்கள்.

ஆங்கில செய்தி நிறுவனமான (Guardian News Service) சமீபத்தில் ஒரு அறிக்கையினை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையின் படி, இண்டர் நெட் மற்றும் வீடியோ விளையாட்டு சாதனங்களின் வளர்ச்சியினால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக மனக்கவலை பெறுகிறார்கள். அவர்களுக்கு வரும் மின்னஞ்சலை திறக்கும் போது அவர்களுக்கு கிடைப்பதோ மிகபெரும் மனக்கஷ்டம் தான் (E.mail Stress) இவற்றினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் அதிகம். ஏனெனில் பெண்களை மிகவும் பலவீனமானவர்கள். அந்த பலவீனத்தை பயன் படுத்தி அவர்களை பாழ்படுத்தி வருகிறார்கள். இவர்கள் கணிப்பொறியின் முன் அமர்த்தால் ஏதோ ஒன்றினை இழந்த மாறி ஆகிவிடுகிறார்கள். மற்றும் பல்வேறு நோய்களுக்கும் வெகு விரைவில் ஆளாகி விடுகிறார்கள். கணிப்பொறிக்கே முற்றிலும் அடிமையான மாறி அவர்கள் போய் விட்டார்கள்..

மேலும் அந்த அறிக்கையின் (Guardian News Service) படி பார்த்தோமானால்,

1. 2006 ஆம் ஆண்டில் உலகில் 6 திரில்லியன் (ஒரு திரில்லியன் என்பது 100 பில்லியனுக்கு சமம்) வியாபார நோக்கம் கொண்ட மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளன.

2. சாதாரண அலுவலர்கள், (Average Office workers) ஒரு நாளைக்கு மின்னஞ்சலை மட்டும் பார்க்க 45 நிமிடங்களை செலவு செய்கிறார்கள்.

3. மிகப்பெரிய அலுவலர்கள், (Senior Management Workers) ஒரு நாளைக்கு மின்னஞ்சலை மட்டும் பார்க்க 4 மணி நேரங்களை செலவு செய்கிறார்கள்.

4. 80 சதவீதமான மின்னஞ்சல்கள் தேவையில்லாத செய்திகளையும், மற்றும் ஏமாற்றும் விதத்திலும் இருக்கின்றன.

5. 62 சதவீதமான அலுவலர்கள், அவர்களின் மின்னஞ்சலை வீட்டிலும் மற்றும் விடுமுறை காலங்களிலும் பார்க்கிறார்கள்.

6. 20 சதவீதமான அலுவலர்கள் மின்னஞ்சல் (E.mail Stress) தொல்லைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஃபாஸ்ட் புட் காலத்தில் எல்லாமே ஃபாஸ்டாக போய்க்கொண்டே இருக்கிறது. அது போல் வரக்கூடிய நோய்களும் மிக வேகமாக பரவுகிறது. நோய்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் தான் நாம் இருக்கிறோம். ஆனால் நோய்களை எதிர்த்து போராடக்கூடிய மன பக்குவதில் நாம் யாருமே இல்லை. நம்முடைய சந்ததியினரையும் மேற் குறிப்பிட்ட பல நோய்களிலிருந்து இனிவரும் காலங்களில் பாது காக்கலாம். புதிய உலகம் என்ற மாயை பல துறைகளில் எப்படி எல்லாம் ஆட்டி படைக்க போகிறது என்பதனை நாமும் எதிர் பார்க்கலாம். ஏக இறைவனாகிய அல்லாஹ் கொடுத்த சிந்தனை கொண்டு நாம் அனைவரும் நன்றாக சிந்தித்தால் நாம் நோய் நொடி இல்லாமல் வாழலாம். மற்றும் இறைவன் நமக்கு கொடுத்த அறிவான கல்வி ஞானத்தை கொண்டு நாம் அனைவரும் நல்ல மாதிரியாக வழியில் சிந்திப்போம்.. செயல் படுவோம்..

கல்வியானது ஒரு அத்தியாவசியமான ஒன்றாக தான் தற்போது உள்ளது. ஆனால் அதனை பெற்ற பல கல்வியாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்தினாலும் அவர்களை எப்படியாவது வழி கேடுக்க வேண்டும் என்ற தருணத்தில் பல துறைகள் உள்ளன. பத்திரிகைத்துறை என்றும் ஊடகத்துறை என்றும் அழைக்கப்படும்

தகவல் துறைச்சார்ந்த துறைகள் தான் தற்போது மக்களை வழிகேடுக்கும் மிக பெரும் பணிகளை செய்கின்றன. இளைய சமுதாயத்தினரை நல் வழிப்படுத்தும் எத்தனையோ இணையத்திரட்டிகள், இணையத்தளம், வலையத்தளம் உள்ளன. மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தினை எளிதாக புரிந்து கொள்ள எழுத்து ஆக்கத்திலும், கட்டுரை வடிவத்திலும் கொடுக்க பல இஸ்லாமிய இணையங்கள் தற்போது அதிகமாக உள்ளன. அவற்றினை பார்க்கும் நம் சமுதாயத்தினரும் மற்றும் மாற்று மதத்தினருக்கும் தாங்களை சீர்படுத்திக்கொள்ளதற்கு ஒரு வாய்ப்பாக அது அமைந்து கொடுக்கும் நமக்கும் நம்முடைய சந்ததிகளுக்கும் என்பதில் உறுதி தான்.

இணையத்தில் பல நல்லவைகளும் இருக்கும் அது போல் சில தீமைகளும் இருக்கும். தீமை எதுவென்று பிரித்து உணரக்கூடிய அறிவினை நமக்கு ஏக இறைவன் கொடுத்து இருக்கிறான். அது போல் நன்மை எதுவென்றும் நமக்கு தெரியும். அதனை நாம் பலமாக பற்றி பிடித்து கொள்ள வேண்டும். தீமைகள் என்னவென்பது நமக்கு தெரிந்தும் அதன் பின் போய் விடக்கூடாது. பின்பற்றினால் ஷைத்தான் நமக்கு நண்பனாகி விடுவான். நன்மையினை மட்டும் எடுத்துக்கொண்டு, நன்மைகள் புரிந்து நன்மைகள் செய்து நன் மக்களாய் இருப்போம்.. இறப்போம்.

விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால், வழி தவறியவர் உங்களுக்கு எவ்வித்தீங்கும் செய்ய மாட்டார், அல்லாஹ்வின் பக்கமே உங்கள் யாவரின் மீட்சி இருக்கிறது, நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி (அது சமயம்) அவான் உங்களுக்கு அறிவித்து விடுவான். அல்குர்ஆன் 5:105

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: