தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..? – 6

Posted by tamilmuslim மேல் ஓகஸ்ட் 31, 2007

இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பினால், ஈஸா சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவில்லை. அவர் இயற்கையாகவே மரணித்து விட்டார். அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய, கிறிஸ்த்தவர்களுக்கு வழிகாட்ட கர்த்தர் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்றக் கொள்கையுடன் ஒருவர் வெளிபட்டார்.
……………………………………………………………………………………………………….

தொடர் – 6 (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்)
இயேசு அற்புதமான முறையில் பிறந்து பிறந்தவுடன் தன் தாயின் கற்புக்கு கொடுத்த உத்திரவாதம், இயேசுவின் அற்புத பிறப்பில் பொதிந்துள்ள விஞ்ஞான உண்மை – அத்தாட்சிப் போன்றவற்றை கடந்த தொடர்களில் கண்டோம். (குறிப்பாக தொடர் – 4) இத்தொடரில் இயேசுவின் முதல் பேச்சில் பொதிந்துள்ள ஆழத்தையும், கிறிஸ்த்தவர்கள் பெற வேண்டிய பாடத்தையும், முஸ்லிம்களிடம் இருக்கக் கூடிய சந்தேகங்கள் அதற்கான பதில்கள் இவைகளைப் பார்ப்போம்.
ஈஸா – இயேசு முதல் முதலில் வாய்திறந்தவுடன் சொன்ன வார்த்தை அவரது அடிமைத்தனத்தை வெளிபடுத்துகின்றது.
‘இன்னி அப்தல்லாஹ்’ நிச்சயமாக நான் கர்த்தரின் அடிமையாவேன். இறைவனுக்கு முன், அவனது பணியில் தனது அடிமைத்தனத்தை வெளிபடுத்துவதற்கு எந்தத் தீர்க்கதரிசியும் தயங்கியதே இல்லை.
மஸீஹ் (என்ற ஈஸாவும்) இறைவனுக்கு நெருக்கமான வானவர்களும் அவனுக்கு அடிமையாக இருப்பதில் ஒரு போதும் இருமாப்புக் கொள்ள மாட்டார்கள் என்று இறைவன் திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். (அல் குர்ஆன் 4:172)
அடியாராகப் பிறந்து அடியாராகவே இறைப் பணி செய்து, அடியாராகவே இன்றுவரை வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஈஸா பிற்காலத்தில் ஞானமில்லாத சிலரால் தேவக்குமாரனாக்கப்படுவார் என்பதையும் அது மிகப்பெரிய தவறு என்பதையும் உணர்த்தும் விதமாகவே அவர் முதன் முதலில் பேசிய பேச்சிலேயே ‘நான் இறைவனின் அடிமைத்தான்’ என்பதை தெளிவுபடுத்தி விடுகின்றார்.
நான் இறைவனின் அடிமைத்தான். ஆனால் இறைவன் என்னை அழைப்புப் பணிக்காக நியமித்துள்ளான். எனக்கு வேதத்தையும் வழங்கியுள்ளான் என்பதை அடுத்துக் கூறுகிறார். ஆதானியல் கிதாப வஜஅலனி நபிய்யா.
தீர்க்க தரிசனம் உரைப்பவராக இறைவனின் தூதராகத்தான் அவர் வந்துள்ளாரேத் தவிர இறைமகனாக அவர் வரவில்லை.
ஈஸாவிற்கு வேதம் கொடுக்கப்பட்டது. அந்த வேதத்தின் பெயர் இன்ஜில் என்று குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. இறைத்தூதர்களுக்கு வேதங்கள் வழங்கப்பட்டன. வேதமில்லாமல் யாரும் இறைத்தூதராக வரவில்லை. அப்படியே வந்தாலும் கடைசியாகவும், அவர்களுக்கு முந்தியதாகவும் வந்த வேதத்தை பாதுகாக்கும் பொறுப்பிலேயே அவர்கள் வந்துள்ளார்கள்.
ஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டது. இன்றைக்கு அரபு மொழி பேசும் கிறிஸ்த்தவர்கள் தங்களிடம் உள்ள பைபிளை ‘இன்ஜில்’ என்றே குறிப்பிடுகிறார்கள். அவர்கள் அதை இன்ஜில் என்று குறிப்பிட்டாலும் இறைவன் ஈஸாவிற்கு வழங்கிய இன்ஜிலுக்கும் இன்றைக்கு இவர்களிடம் இருக்கும் பைபிளுக்கும் சம்மந்தம் எதவுமில்லை. கேள்விப்பட்டதையும் – மனதில் தோன்றியதையும் எழுதி வைத்துக் கொண்டு இதுதான் இன்ஜில் என்று கிறிஸ்த்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இஸ்ராயீலின் சந்ததியிடம் கர்த்தர் செய்துக் கொண்ட உடன்படிக்கையை அவர்கள் மாற்றிக் கொண்ட விபரங்கள், வேதவசனங்களில் பலவற்றை மறந்து மறைத்து விட்ட விபரங்கள் பற்றிய அறிவிப்பு அல்குர்ஆன் 5:12,13,14 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. (இதபற்றி நமக்கும் கிறிஸ்த்தவர்களுக்கும் மத்தியில் நடக்கும் கருத்துப் பரிமாற்றத்தில் நாம் விரிவாக பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்)
ஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டு அதை வைத்து அந்த மாபெரும் இறைத்தூதர் இஸ்ரவேலர்களை இறைவனின் பக்கம் அழைத்துள்ளார். யுதர்களுக்கு வழிகாட்டியுள்ளார். ஆனால் இறைவன் அவரைக் கைப்பற்றிய பிறகு அனேகக் காரணங்களால் அந்த வேதம் மாற்றத்திற்குள்ளாக்கப்பட்டது. (இயேசுவையே ஒழித்து விட வேண்டும் என்று கொலை வெறிப்பிடித்தலைந்தவர்கள் அவரது போதனைகளை விட்டு வைப்பார்களா.. வேதமாற்றங்களுக்கு இதுவும் காரணமாக அமைந்திருக்க வேண்டும். இயேசுவுக்கு பிறகு அவரை விசுவாசித்தோம் என்று சொன்னவர்களில் சிலரும் வேத மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளார்கள்).
முஸ்லிம்களைப் பொருத்தவரை முந்தைய இறைத்தூதர்களுக்கு வேதம் வழங்கப்பட்டுள்ளது என்பதை நம்புவார்கள். ஆனால் இன்றைக்குள்ள வேதங்கள் தான் அவை என்று கூறினால் அந்தப் பொய்யை நம்ப மாட்டார்கள்.
இறைவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை தூதராகவும் ஆக்கியுள்ளான் என்ற ஈஸாவின் அடுத்த பேச்சு அவர் கொண்டு வந்த தூதுத்தவத்தின் ஆழத்தை உணர்த்துகின்றது.
வஜஅலனி முஃபாரகன் ஐனமாகுன்து.
நான் எங்கிருந்தாலும் அவன் என்னை பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான்.
இந்த வார்த்தைகளும் ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும். கிறிஸ்த்தவத்தின் அநேக நம்பிக்கைகளுக்கு பதில் சொல்லும் வசனம் இது.
பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான் என்ற வார்த்தை சிலுவை சம்பவத்திற்கு எதிரானதாகும். தலையில் முள் கிரிடம் சூட்டி, சுமக்க முடியாத பெரும் துன்பத்துடன் சிலுவையை சுமந்து, சாட்டையால் அடிக்கப்பட்டு தெரு முழுதும் இழுத்துச் செல்லப்பட்டு அனேக இழிநிலைக்கு இயேசு ஆளானார் என்ற மொத்த நம்பிக்கைக்கும் மறுப்பு இந்த வார்த்தையில் உள்ளது.
மனிதர்களின் பார்வையில் இத்தகைய இழிநிலைக்கு ஆளானவர்களை பாக்கியம் பொருந்தியவன் என்று யாரும் கூறமாட்டார்கள். கர்த்தரின் பாதையில் உழைக்கும் பொது ஏற்படும் இழப்புக்கு கர்த்தர் சிறந்த கூலி கொடுப்பார். என்பது வேறு விஷயம். துன்பத்திற்கு ஆளாகாமல் சுவர்க்கம் என்ற பெரு வாழ்வு கிடைக்காது என்பதால் இறை நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை துன்பங்களும் பாக்கியம் தான்.
ஆனால் இயேசு விஷயத்தில் (குறிப்பாக இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைக்கு) அந்தப் பொருள் கொடுக்க முடியாது.
ஏனெனில் அந்த வசனத்தில் ‘நான் எங்கிருந்தாலும்’ என்ற சொல்லை அவர் பயன்படுத்துகின்றார். இயேசுவை முடிந்த அளவு இழிவுபடுத்திக் கொல்ல வேண்டும் என்ற யூதர்களின் (ஆட்சியாளர்களின்) திட்டம் மொத்தமாக பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. இயேசுவின் கண்ணியம் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் கர்த்தர் இயேசுவை பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.
‘நான் எங்கிருந்தாலும்’ என்ற அந்த வார்த்தையை ஈஸா அவர்கள் பயன்படுத்தியதின் மூலம் சிலுவை சம்பவம் கேள்விக்குறியாக்கப்பட்டு விடுகின்றது.
இயேசு தன் தாய் வயிற்றில் உருவாகும் போது எப்படி பாக்கியம் பொருந்தியவராக .இருந்தாரோ, பிறந்தவுடன் எப்படி பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, தனது உலக வாழ்வில் பிரச்சாரத்தில் எப்படிப் பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, இன்றைக்கும் அதே நிலையில் பாக்கியம் பொருந்தியவராக இருக்கிறார். இனி வரக் கூடிய இறுதிக் காலத்திலும் அவர் பாக்கியம் பொருந்தியவராக இருப்பார். ‘நான் எங்கிருந்தாலும்’ என்ற வார்த்தை அவர் விஷயத்தில் எத்துனை தெளிவாக இருக்கின்றது. என்பதை எண்ணிப் பார்க்கும் போது சிலிர்ப்பு ஏற்படவே செய்யும்.
அடுத்து,
வ அவ்ஸானி பிஸ்ஸலாத்தி, வஸ்ஸகாத்தி மாதும்து ஹைய்ய(ன்)வ் வ பர்ரம் பி வாலிததி.
நான் உயிரோடு இருக்கும் காலம் மேலும் தாயராருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் தொழுது வருமாறும் ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்.
அழைப்புப்பணிக்கல்லாமல் அவரது சொந்த வணக்கங்கள் பற்றியும் அவர் தனது ஆரம்ப பேச்சில் தெளிவு படுத்தியுள்ளார்.
இந்த இடம் சற்று ஆழமாக அணுக வேண்டிய இடமாகும். காரணம் இந்த இடத்தைப் புரிந்துக் கொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் ஒரு குழப்பமான நிலைக்கு ஒரு சாரார் தள்ளப்பட்டு விட்டனர். புதிய நபிக் கொள்கை உருவாக்கப்பட்டு ஒரு சாரார் அதை நம்பும் நிலைக்கு ஆளாகினர்.
முதலில் இங்கு இவர்களுக்கு ஏற்பட்ட தடுமாற்றம் என்னவென்பதைப் புரிந்துக் கொண்டு தொடர்வோம்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பினால், ஈஸா சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவில்லை. அவர் இயற்கையாகவே மரணித்து விட்டார். அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய, கிறிஸ்த்தவர்களுக்கு வழிகாட்ட கர்த்தர் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்றக் கொள்கையுடன் ஒருவர் வெளிபட்டார். (இது பற்றி நாம் இங்கு விவாதிக்கப் போவதில்லை). அவர் தன்னை ஈஸாவின் இடத்தில் வைத்து பார்ப்பதற்கு ஆதாரமாக்கியவற்றில் இந்த வசனமும் ஒன்று.
இந்த வசனத்திற்கு அவர் – பிற அனேக மொழிப்பெயர்ப்பாளர்கள் – கொண்ட பொருள்.
‘நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்’ என்பதாகும். இவ்வாறு பொருள் கொண்ட அவர் ‘ஈஸா இப்போது உயிரோடு இருந்தால் அவர் எப்படித் தொழுவார்? எப்படி ஸக்காத் கொடுப்பார்? என்ற கேள்வியை வைத்து அவர் இப்போது உயிரோடு இருந்தால் கட்டாயம் தொழ வேண்டும் ஸக்காத் கொடுத்தாக வேண்டும் ஆனால் இப்போது அவரால் தொழவோ ஸக்காத் கொடுக்கவோ முடியாது என்பதால் அவர் உயிரோடு இல்லை என்பது அவரது வாதம்.
மொழி ரீதியாக இப்படிப் பொருள் கொள்ள இடமிருந்தாலும் இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ள அந்த வசனம் இடங்கொடுக்கின்றது. ஈஸா அவர்களின் முழு வாழ்க்கையையும் நாம் கருத்தில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது இன்னொரு பொருளே அங்கு பொருத்தமாக உள்ளது. எவ்வித குழப்பத்திற்கும் இடங்கொடுக்காமல் அந்த பொருள் பொருந்திப் போகின்றது.
அந்தப் பொருள் என்ன?’நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும்…. என்பதில் உயிரோடு இருக்கும் காலத்திற்கு பக்கத்தில் தாயாருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் என்பதையும் சேர்த்து பொருள் கொள்வது.
நான் உயிரோடு இருந்து தாயாருக்கு பணிவிடை செய்யும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் (பொருளாதாரப் பங்கீடல்) கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன் என்பது அந்த வசனத்தில் பொருள்.
குர்ஆன் வசனத்தின் அரபு வார்த்தை இப்படிப் பொருள் கொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது. இப்படிப் பொருள் கொள்ளும் போது ஈஸாவின் மீது தொழுகை மற்றும் ஸக்காத் கடமையாவதற்கு இரண்டு நிபந்தனைகள் – சூழ்நிலைகள் அமைந்திருக்க வேண்டும்.
1) அவர் உயிரோடு இருக்க வேண்டும். 2) தாயாருக்கு பணிவிடை செய்யும் நிலையில் இருக்க வேண்டும். இந்த இரு நிபந்தனைகள் இருக்கும் போது மட்டுமே ஈஸாவின் மீது தொழுகை ஸக்காத் ஆகியவை கடமையாகும். இன்றைக்கு ஈஸா அவர்கள் உயிரோடு இருந்தாலும் தாயாருக்கு பணிவிடை செய்யும் சூழல் அவருக்கு இல்லை என்பதால் இன்றைக்கு அவர் மீது எந்தக் கடமையும் இல்லை.
ஈஸாவின் வாழ்க்கை அனேக அற்புதங்களைக் கொண்டதாகும். தனித்துவம் வாய்ந்த அந்த அற்புதங்களோடு இந்த விளக்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதுவே சரியான விளக்கமாகப் படுகின்றது.
இப்படிப் பொருள் கொள்ளும் போது புதிய நபித்துவக் கொள்கையில் தடுமாற்றம் ஏற்பட்டு விடும்.
அடுத்த சந்தேகத்திலிருந்தும் தெளிவாகுவோம்.
இப்படிப் பொருள் எடுத்தால் இனி ஈஸா அவர்கள் அடுத்த முறை வரும் போது அவர்கள் உயிரோடு இருப்பார்கள் ஆனால் அப்போதும் தாயாருக்கு பணிவிடை செய்ய முடியாது அப்படியானால் அப்போதும் அவர்கள் மீது தொழுகை – ஸக்காத் கடமையில்லையா என்ற கேள்வி எழுந்தால், இனி வரும் போது அவர்கள் இறைத்தூதராக வரமாட்டார்கள். மாறாக குர்ஆனை விசுவாசித்து இறைப் பணி செய்யும் ஒரு நம்பிக்கையாளராகவே வருவார்கள் என்பதே பதிலாகும். அவர்களின் இரண்டாவது வருகை இறைத்தூதர் அந்தஸ்த்தில் இருக்காது என்பதால் (இரண்டாவது வருகை குறித்து பிறகு வரும் இன்ஷா அல்லாஹ்) இறைத்தூதராக இருந்த போது அவர்களுக்கு இருந்த சட்டம் இப்போது பொருந்தாது என்பதை கவனத்தில் கொண்டால் சந்தேகம் தீர்ந்து விடும்.
மேற்கண்ட வசனத்திற்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம்.
‘நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்’ என்று ஈஸா அவர்கள் சொல்லும் போது உயிரோடு பச்சிலங்குழந்தையாக இருக்கிறார்கள். அதாவது தன் மீது தொழுகைக் கடமை என்று அவர்கள் சொல்லும் போது உயிரோடு இருக்கிறார். ஆனாலும் குழந்தை. குனிந்து நிமிர்ந்து வணங்கும் நிலையில் அவர் அன்றைக்கு இல்லை என்றாலும் அந்தக் குழந்தையின் வார்த்தைகள் அனைத்தும் வணக்கமாகவே இருந்தது. அதுபோன்ற ஒரு நிலையைக் கூட உயர்த்தப்பட்டப் பிறகு இறைவன் அவருக்கு ஏற்படுத்தி இருக்கலாம்.
இந்த இரண்டு வித்தில் எப்படிப் பொருள் கொண்டாலும் அங்கே புதிய நபிக் கொள்கைக்கு இடமில்லாமல் போய்விடுகின்றது.
என்னைத் துர்பாக்கியசாலியாகவோ, பெருமைக்காரனாவோ அவன் ஆக்கவில்லை.
இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், மீண்டும் நான் எழுப்பப்படும் (தீர்ப்பு) நாளிலும் என்மீது சாந்தி நிலவும் (என்று ஈஸாவாகிய அந்தக் குழந்தைக்) கூறிற்று.
நான் மரணிக்கும் நாளில் என் மீது சாந்தி நிலவும் என்ற இயேசுவின் கூற்று மீண்டும் ஒரு முறை சிலுவை சம்பவத்தைப் பொய் படுத்துகின்றது இந்த இடத்தில்.
ஏனெனில் சிலுவையில் அறையப்பட்டதாக நம்பப்படும் அந்த நபர் ‘ஏலி ஏலி லாமா சபக்தனி’ என்று கூக்குரலிடுகிறார் இதற்கு ‘என் என் தேவனே ! என்னை ஏன் கை விட்டீர்’ என்று அர்த்தமாம் என பைபிள் கூறுகின்றது. இந்த அவலக்குரல் சாந்தியான மரணத்தின் அடையாளமல்ல. ஆனால் ஈஸாவின் மரணம் நிச்சயம் சாந்தியோடு நிகழும் என்பதில் ஐயமில்லை. அவரது இரண்டாவது வருகைக்கு பின் நிகழப்போகும் இறைப் பணிகளுக்குப் பிறகு அவர் மரணிப்பார். அப்போது அவர் மீது சாந்தி நிலவும் அந்த சாந்தி, அவர் மீது சுமத்தப்பட்ட இறைமகன் என்ற அவதூறு – சிலுவை அவதூறு போன்றவை துடைக்கப்பட்டு விட்டதாக இருப்பதால் உலகறியும் சாந்தியாக இருக்கும்.
இயேசுவைப் பற்றி நாம் அறியும் இந்த விபரங்கள் அனைத்தும் இயேசுவின் தாயார் மரியாள் (மரியம்) என்ற பெயரில் இடம்பெறும் குர்ஆனின் 19 வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்,
இதுவே அவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்த மரியமின் புதல்வர் ஈஸா பற்றிய உண்மைச் செய்தியாகும். எந்த ஒரு பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது கர்த்தருக்கு தகுமானதல்ல. கர்த்தர் தூயவர். (அல்குர்ஆன் 19:29-35)
இயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.
தேவன் நாடட்டும் தொடர்வோம்
Advertisements

4 பதில்கள் to “இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..? – 6”

 1. emenet said

  “அஸ்ஸலாமு அலைக்கும்

  “இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..? என்று கிருஸ்தவ உலகம் மரைத்ததையும் ஞானமில்லாத சிலரால் தேவக்குமாரனாக்கப்படு விட்டார் என்பதையும்.இறைவன் ஈஸாவிற்கு வழங்கிய இன்ஜிலுக்கும் இன்றைக்கு இவர்களிடம் இருக்கும் பைபிளுக்கும் சம்மந்தம் எதவுமில்லை. கேள்விப்பட்டதையும் – மனதில் தோன்றியதையும் எழுதி வைத்துக் கொண்டு இதுதான் இன்ஜில் என்று கிறிஸ்த்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்பதை கிருஸ்தவ உலகம் சிந்தித்து இயேசுவின் அற்ப்புத வாழ்வையும் அதன் நோக்கத்தையும் சரியான வழியில் புரிந்து பரலோகதில் அவர்களும் வெற்றி அடைய வேண்டும் என்ற உங்களின் நல்ல நோக்கம் பராட்டதக்கது….!!

  ஆனால் நீங்கள் என்னதான் அறிவு பூர்னமான விலக்கங்கள் சொன்னாலும். கிருஸ்தவத்தை வைய்த்து பிளைப்பு நடத்தும் புரோகிதர்கள் “இயேசுவின் அற்புததின் காரணத்தையும் அதன்மூளம் கர்தரின் நோக்கத்தையும்! “எந்த ஒரு பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது கர்த்தருக்கு தகுமானதல்ல. கர்த்தர் நம்மைபோன்று பழகீனமானவர் அல்ல அவருக்கு முதுமை ஆகாது அவருக்கு பென் துனை பிள்ளை துனை தேவையில்லை.பழகீனமான நமக்குதான் முதுமயில் அடுத்தவர் துனை தேவை.கர்தர் தூயவர். என்பதை “பொதுஜனங்கள் புரிந்து விலகிடகூடாது என்பதில் புரோகிதர்களின் புதிய யுக்தியே அடுத்த மததினர் மீது புதுக்கதை கட்டுவத்தும். விதன்டா வதாம் பன்னுவதும். பைபிலில் உள்ள சில வசனங்கள் அவர்களின் வாதத்திர்க்கு முரனாக இருக்கிரதே என நாம் வினா எலுப்பினாள். அல்லது அனைவரும் புரியும்படிக்கு பதில் கொடுத்தால். அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

  இஸ்லாமியர்கள் பைபிளில் உள்ள மற்றும் அல்லா இறக்கியதாகச் சொல்லும் தோரா ஜபூர் மற்றும் இஞ்ஜில் வேதத்தையே நம்புவதில்லை அப்படி இருக்க ஏன் அவர்கள் பைபிளில் இருந்து ஆதாரத்தை முன்வைக்கின்றனர்? திருத்தப்படவில்லை என்று நம்புகிறார்களா?

  “முஸ்லிம்கள் இயேசு ஈஸா (அலை) க்கு இறை வேதம் வந்ததும் அது மக்களுக்கு போதிக்கபட்டதும் உன்மை என்று நம்புவர்கள். ஆனால் இன்று உள்ளது இயேசு ஈஷா(அலை)க்கு வந்த வேதம்தானா எனபதுதான் சர்சை. (கிருஸ்தவகள் நம்பிகைபடி இயேசு(ஈஸா)வனாள் உந்தபட்டு) மனிதகளாள் எலுதபட்டது என்ரால். அதில் மனிதர்களின் சொந்த கருது (கை கடதள்) இருக்கிரது என முஸ்லிம்கள் தெரிந்து கொள்ள பைபிளை படிக்கவேண்டியது இல்லை.

  தாங்கள் தான் உன்மையான கிறிஸ்த்தவர்கள் என்று சொல்லும் இரு பெரும் கிறிஸ்த்தவ வேதக்கரகளின் வேத புத்தகத்தை ஒப்பிட்டு பார்தலே போதும் இது இறைவனாள் உந்தபட்டு எழுதியதா?அப்படி இறைவனாள் உந்தபட்டு எழுதியதா இருந்தால் இதில் உள்ள கூடுதல் குரைஉக்கு யார் பொருப்பு இறைவனாள் உந்தபட்டு எழுதியவர்களா இல்லை அதர்க்கு பின்னால் வந்த புரோகிதர்களா?

  தொடரும் இன்ஷா அல்லாஹ்
  Rila

  Not: Please check the spelling

 2. மைகோவை said

  Quote: தொடர் – 6 (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்) இயேசு அற்புதமான முறையில் பிறந்து பிறந்தவுடன் தன் தாயின் கற்புக்கு கொடுத்த உத்திரவாதம், இயேசுவின் அற்புத பிறப்பில் பொதிந்துள்ள விஞ்ஞான உண்மை – அத்தாட்சிப் போன்றவற்றை கடந்த தொடர்களில் கண்டோம். (குறிப்பாக தொடர் – 4) இத்தொடரில் இயேசுவின் முதல் பேச்சில் பொதிந்துள்ள ஆழத்தையும், கிறிஸ்த்தவர்கள் பெற வேண்டிய பாடத்தையும், முஸ்லிம்களிடம் இருக்கக் கூடிய சந்தேகங்கள் அதற்கான பதில்கள் இவைகளைப் பார்ப்போம். ஈஸா – இயேசு முதல் முதலில் வாய்திறந்தவுடன் சொன்ன வார்த்தை அவரது அடிமைத்தனத்தை வெளிபடுத்துகின்றது. ‘இன்னி அப்தல்லாஹ்’ நிச்சயமாக நான் கர்த்தரின் அடிமையாவேன். இறைவனுக்கு முன், அவனது பணியில் தனது அடிமைத்தனத்தை வெளிபடுத்துவதற்கு எந்தத் தீர்க்கதரிசியும் தயங்கியதே இல்லை. மஸீஹ் (என்ற ஈஸாவும்) இறைவனுக்கு நெருக்கமான வானவர்களும் அவனுக்கு அடிமையாக இருப்பதில் ஒரு போதும் இருமாப்புக் கொள்ள மாட்டார்கள் என்று இறைவன் திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். (அல் குர்ஆன் 4:172) அடியாராகப் பிறந்து அடியாராகவே இறைப் பணி செய்து, அடியாராகவே இன்றுவரை வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஈஸா பிற்காலத்தில் ஞானமில்லாத சிலரால் தேவக்குமாரனாக்கப்படுவார் என்பதையும் அது மிகப்பெரிய தவறு என்பதையும் உணர்த்தும் விதமாகவே அவர் முதன் முதலில் பேசிய பேச்சிலேயே ‘நான் இறைவனின் அடிமைத்தான்’ என்பதை தெளிவுபடுத்தி விடுகின்றார். மைகோவை இயேசுகிறிஸ்து ஏதோ தேவனுக்கு அடிமை என்பதை போல காண்பிக்கிறீர்கள்.ஆனால் பரிசுத்த பைபிள் சொல்லுவதை பாருங்கள். யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். யோவான் 14:9 அதற்கு இயேசு, பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னைஅறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவைஎங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? இயேசுகிறிஸ்துவை அறிந்துகொள்ளாமல்,வேறு எந்த வழியில் சென்றாலும் பிதாவை அடையமுடியாது.இதை வேதாகமத்தில் இயேசுகிறிஸ்து சொல்வதிலிருந்து அறிந்து கொள்ளலாம். யோவான் 14:6 அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல்ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். Quote: (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்) இறைவன் என்னை அழைப்புப் பணிக்காக நியமித்துள்ளான். எனக்கு வேதத்தையும் வழங்கியுள்ளான் என்பதை அடுத்துக் கூறுகிறார். ஆதானியல் கிதாப வஜஅலனி நபிய்யா. தீர்க்க தரிசனம் உரைப்பவராக இறைவனின் தூதராகத்தான் அவர் வந்துள்ளாரேத் தவிர இறைமகனாக அவர் வரவில்லை. மைகோவை அப்படின்னு குரான வச்சு சொல்லிறீங்க.ஆனால் யூதர்கள் வேதமான தோரா,ஜபூர்(ஐந்தாகமம்,சங்கீத புத்தகம்)ஆகியவற்றில் இயேசுக்கிறிஸ்து வருவதற்கும்,குரான் வருவதற்கும் பல நூறு வருடங்களுக்கு முன்னாலேயே தேவனுடய குமரன் வருவார் என்று சொல்லுகிறது. ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமயுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும், சங்கீதம் 2:12 குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள் இது மாதிரியான நூற்றுக்கணக்காண வசனங்கள் இயேசுகிறிஸ்துவை பற்றிய முன்னறிவிப்பாக உள்ளது.இது ஏதோ கிறிஸ்தவர்கள் எழுதிக்கொண்டது அல்ல.இயேசு கிறிஸ்து பூமிக்கு வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட வார்த்தை குமாரன் வருவார் என்பதே.அதுவும் அவர் காட்டிக்கொடுக்கப்படுவார்,அடிக்கப்படுவார்,மரிப்பார்,உயிர்த்தெழுவார்,மீண்டும் வருவார்,என்று அநேக வசனங்கள் உண்டு.அதன் முதல் நிறைவேற்றமே இயேசுகிறிஸ்துவின் முதல் வருகை. Quote: (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்) ஈஸாவிற்கு வேதம் கொடுக்கப்பட்டது. அந்த வேதத்தின் பெயர் இன்ஜில் என்று குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. இறைத்தூதர்களுக்கு வேதங்கள் வழங்கப்பட்டன. வேதமில்லாமல் யாரும் இறைத்தூதராக வரவில்லை. அப்படியே வந்தாலும் கடைசியாகவும், அவர்களுக்கு முந்தியதாகவும் வந்த வேதத்தை பாதுகாக்கும் பொறுப்பிலேயே அவர்கள் வந்துள்ளார்கள். ஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டது. இன்றைக்கு அரபு மொழி பேசும் கிறிஸ்த்தவர்கள் தங்களிடம் உள்ள பைபிளை ‘இன்ஜில்’ என்றே குறிப்பிடுகிறார்கள். அவர்கள் அதை இன்ஜில் என்று குறிப்பிட்டாலும் இறைவன் ஈஸாவிற்கு வழங்கிய இன்ஜிலுக்கும் இன்றைக்கு இவர்களிடம் இருக்கும் பைபிளுக்கும் சம்மந்தம் எதவுமில்லை. கேள்விப்பட்டதையும் – மனதில் தோன்றியதையும் எழுதி வைத்துக் கொண்டு இதுதான் இன்ஜில் என்று கிறிஸ்த்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மைகோவை வேதம் என்றால் சத்தியம்.ஆம் இயேசுவே சத்தியம். வேதம் என்றால் தேவனின் வார்ததை. ஆம் இயேசுகிறிஸ்துதான் தேவனின் வார்த்தை. இயேசுகிறிஸ்துவே உலகத்துக்கு வந்தார். மோசே தேவனின் பத்துகட்டளைகளை வாங்கி வந்தார்.மேலும் வாழ்க்கை வழிமுறைகள் அந்த காலத்து நடைமுறைக்கு ஏற்ப தேவ ஆவியானவரின் நடத்துதல் படி மோசே மக்களுக்கு சொன்னார்.பின் வரும் சந்ததி கர்த்தர் தங்களுக்கு செய்ததை மறந்து போகக்கூடது என்பதற்காக கடவுள் மூலம் வந்தக் கட்டளைகள் அவர்கள் வாழ்க்கையில் கடவுள் செய்த நன்மைகள் அனைத்தையும் பலவிதங்களில் பாதுகாத்தனர்.பின் சந்ததி கர்த்தரை விட்ட பொழுது கர்த்தர் தீர்க்கதரிசிகளை எழுப்பினார்.தீர்கதரிசிகள் எழும்பி இஸ்ரவேல் ஜனத்தை கடிந்து கொண்டணர்.அவர்கள் வேத வசனங்களை வெறும் சடங்காக பயன்படுத்தினர்.அதின் உயிரோட்டங்களை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினர்.ஆனால் எந்த தீர்க்கதரிசியும் முன்னால் உள்ள வேதங்கள் மாற்றப்பட்டது என்று யாரும் சொல்லவில்லை. Quote: (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்) இஸ்ராயீலின் சந்ததியிடம் கர்த்தர் செய்துக் கொண்ட உடன்படிக்கையை அவர்கள் மாற்றிக் கொண்ட விபரங்கள், வேதவசனங்களில் பலவற்றை மறந்து மறைத்து விட்ட விபரங்கள் பற்றிய அறிவிப்பு அல்குர்ஆன் 5:12,13,14 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. (இதபற்றி நமக்கும் கிறிஸ்த்தவர்களுக்கும் மத்தியில் நடக்கும் கருத்துப் பரிமாற்றத்தில் நாம் விரிவாக பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்) மைகோவை இதற்கு நீங்கள் விடை அளியுங்கள்.அதன் பிறகு கர்த்தருக்கு சித்தமானால் யாருடைய வார்த்தை மறக்கப்பட்டன,மறைக்கப்பட்டன என்பதை குரான்,ஹதீஸ்,வரலாற்று வெளிச்சத்தில் பார்ப்போம் Quote: (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்) ஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டு அதை வைத்து அந்த மாபெரும் இறைத்தூதர் இஸ்ரவேலர்களை இறைவனின் பக்கம் அழைத்துள்ளார். யுதர்களுக்கு வழிகாட்டியுள்ளார். ஆனால் இறைவன் அவரைக் கைப்பற்றிய பிறகு அனேகக் காரணங்களால் அந்த வேதம் மாற்றத்திற்குள்ளாக்கப்பட்டது. (இயேசுவையே ஒழித்து விட வேண்டும் என்று கொலை வெறிப்பிடித்தலைந்தவர்கள் அவரது போதனைகளை விட்டு வைப்பார்களா.. வேதமாற்றங்களுக்கு இதுவும் காரணமாக அமைந்திருக்க வேண்டும். இயேசுவுக்கு பிறகு அவரை விசுவாசித்தோம் என்று சொன்னவர்களில் சிலரும் வேத மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளார்கள்). மைகோவை இயேசுவை ஒழித்துவிட வேண்டும் என்று நினைத்தவர்கள் யூதர்கள்.அவர்களே தங்கள் வேதத்தில் அதாவது பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனப்படி இயேசு தான் மேசியா,தேவனின் குமாரன்,அவரே மகா தேவன் என்று எழுதினார்கள் என்று சொல்லி யார் காதில் பூ சுற்ற பார்க்கிறீர்கள். இயேசு செத்து போய்விட்டார்.என்று சொல்லி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தவர்கள் இயேசுகிறிஸ்துவை கடவுளாக்க தங்கள் வேதத்தையும் மாற்றி கிறிஸ்தவர்களின் வேதத்தையும் மாற்றினார்கள் என்றால் சிரிப்புதான் வருகிறது. வசனம் சொல்லுகிறது 1 கொரிந்தியர் 1:23 நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்று பிரசங்கிப்பது அவர்களுக்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்று, சிலுவையில் அடிக்கப்பட்டார் என்று சொன்னவுடன் அவர்களுக்கு என்ன ரத்தின கம்பள வரவேற்பா கிடத்தது.இல்லை நண்பர்களே அப்படி நினைப்பீர்களானால் பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டாக இருக்கிறது என்று சொன்ன கதையாகி விடும். மற்றவர்களுக்கு பைத்தியமாக தோன்றும் ஒரு நடக்காத விஷயத்தை சீஷர்கள் சொல்லி அவமானப்பட அவர்களுக்கு என்ன தலையெழுத்து. இயேசுவுக்கு பிறகு அவரை விசுவாசித்தோம் என்று சொன்னவர்கள் ஏதோ பொழுது போக்க வந்தவர்கள் இல்லை.சபை வரலாற்றை நன்றாக படித்து பாருங்கள் . நீங்கள் கண்ணியப்படுத்துகிறோம் என்று சொல்லுகிற மரியம்,அல்லாவிடம் உறுதிமொழி கொடுத்து உண்மை முஸ்லீம்கள் ஆக இருந்த ஈசாவின் சீடர்கள் இவர்கள் அனைவரும் தான் இயேசுகிறிஸ்து பரமேறின பிறகு சுவிஷேசத்திற்காக தங்கள் வாழ்க்கையை துச்சமென்று மதித்து வாள் முனைகளுக்கும்,சிங்க கெபிகளுக்கும்,நெருப்பு தழழ்களுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள்.இவர்களா தங்கள் தலைவரின் வார்த்தைகளை மாற்றுவார்கள்.கொஞ்சமாவது கூச்சம் இல்லாமல் இப்படி பொய்யை அவிழ்த்து விடுகிறீர்களே. Quote: (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்) முஸ்லிம்களைப் பொருத்தவரை முந்தைய இறைத்தூதர்களுக்கு வேதம் வழங்கப்பட்டுள்ளது என்பதை நம்புவார்கள். ஆனால் இன்றைக்குள்ள வேதங்கள் தான் அவை என்று கூறினால் அந்தப் பொய்யை நம்ப மாட்டார்கள். மைகோவை இதுக்கு நீங்க நம்பாமயே இருக்கலாம்.ஒன்றை நம்புவதாகவும் ஆனால் அது மற்றப்பட்டது அதனால் அத நம்ப மாட்டோம் என்பதும் போலித்தனமான நடிப்பே. . Quote: (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்) இறைவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை தூதராகவும் ஆக்கியுள்ளான் என்ற ஈஸாவின் அடுத்த பேச்சு அவர் கொண்டு வந்த தூதுத்தவத்தின் ஆழத்தை உணர்த்துகின்றது. வஜஅலனி முஃபாரகன் ஐனமாகுன்து. நான் எங்கிருந்தாலும் அவன் என்னை பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான்.இந்த வார்த்தைகளும் ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும். . மைகோவை உண்மை தான் .இவ்வளவு உறுதி உலகத்தில் பிறந்த வேறு எந்த தீர்க்கதரிசிகளுக்கும் வரவில்லை.ஏன் நபிகள் நாயகம் அவர்களுக்கே வரவில்லை என்று சொல்ல தோன்றுகிறது கீழ் காணும் ஹதீஸ் சை வசிக்கும் போது குரான் ஒருசிலவற்றை அழகாக எழுதியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்த இடத்தில் முகமது நபியவர்கள் சொன்ன பொன்மொழிகளை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். ஸஹீஹ் புகாரிஹதீஸ் 1243 ………………….உடனே நபி (ஸல்) அவர்கள் அவரை அல்லாஹ் கண்ணியப் படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே* என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்? என நான் கேட்டேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், இவர் இறந்துவிட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக* இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது .என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக* அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை. ஈசா சொன்ன வார்த்தை கிறிஸ்தவர்களுக்கு பதில் சொல்லுமோ இல்லையோ ஆனால் முகமது நபியவர்கள் சொன்னது புரியும்படி உள்ளது. Quote: (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்) பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான் என்ற வார்த்தை சிலுவை சம்பவத்திற்கு எதிரானதாகும். தலையில் முள் கிரிடம் சூட்டி, சுமக்க முடியாத பெரும் துன்பத்துடன் சிலுவையை சுமந்து, சாட்டையால் அடிக்கப்பட்டு தெரு முழுதும் இழுத்துச் செல்லப்பட்டு அனேக இழிநிலைக்கு இயேசு ஆளானார் என்ற மொத்த நம்பிக்கைக்கும் மறுப்பு இந்த வார்த்தையில் உள்ளது. மனிதர்களின் பார்வையில் இத்தகைய இழிநிலைக்கு ஆளானவர்களை பாக்கியம் பொருந்தியவன் என்று யாரும் கூறமாட்டார்கள். கர்த்தரின் பாதையில் உழைக்கும் பொது ஏற்படும் இழப்புக்கு கர்த்தர் சிறந்த கூலி கொடுப்பார். என்பது வேறு விஷயம். துன்பத்திற்கு ஆளாகாமல் சுவர்க்கம் என்ற பெரு வாழ்வு கிடைக்காது என்பதால் இறை நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை துன்பங்களும் பாக்கியம் தான். ஆனால் இயேசு விஷயத்தில் (குறிப்பாக இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைக்கு) அந்தப் பொருள் கொடுக்க முடியாது. மைகோவை உண்மைதான் அந்த பொருள் கொடுத்தா உங்க வாதம் அடிபட்டு விடும்,.குரானில் இந்த வசனம் கொடுக்கபடுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்னே பவுல் அப் புதிய ஏற்பாட்டில் சொல்கிறார். 1 கொரிந்தியர் 1:18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. இப்ப சொல்லுங்க நீங்கள் குரானில் ஈசா சொன்னதாக உள்ள பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான் என்ற வார்த்தைக்கு கீழ்காணும் பொருள்தான் கொள்ளவேண்டும் என்பதை. மனிதர்களின் பார்வையில் இத்தகைய இழிநிலைக்கு ஆளானவர்களை பாக்கியம் பொருந்தியவன் என்று யாரும் கூறமாட்டார்கள். கர்த்தரின் பாதையில் உழைக்கும் பொது ஏற்படும் இழப்புக்கு கர்த்தர் சிறந்த கூலி கொடுப்பார். என்பது வேறு விஷயம். துன்பத்திற்கு ஆளாகாமல் சுவர்க்கம் என்ற பெரு வாழ்வு கிடைக்காது என்பதால் இறை நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை துன்பங்களும் பாக்கியம் தான். என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். Quote: (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்) இயேசு தன் தாய் வயிற்றில் உருவாகும் போது எப்படி பாக்கியம் பொருந்தியவராக .இருந்தாரோ, பிறந்தவுடன் எப்படி பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, தனது உலக வாழ்வில் பிரச்சாரத்தில் எப்படிப் பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, இன்றைக்கும் அதே நிலையில் பாக்கியம் பொருந்தியவராக இருக்கிறார். இனி வரக் கூடிய இறுதிக் காலத்திலும் அவர் பாக்கியம் பொருந்தியவராக இருப்பார். ‘நான் எங்கிருந்தாலும்’ என்ற வார்த்தை அவர் விஷயத்தில் எத்துனை தெளிவாக இருக்கின்றது. என்பதை எண்ணிப் பார்க்கும் போது சிலிர்ப்பு ஏற்படவே செய்யும். மைகோவை அதிகமாக சிலிர்க்காதீங்க சகோதரரே இந்த வார்த்தையும் பைபிளில் தான் உள்ளது கொஞ்சம் எழுத்து நடை மாறி உள்ளது அவ்வளவே. எபேசியர்: 1 20. எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமைலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,21. அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,22. எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி………….. Quote: (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்) அடுத்து, வ அவ்ஸானி பிஸ்ஸலாத்தி, வஸ்ஸகாத்தி மாதும்து ஹைய்ய(ன்)வ் வ பர்ரம் பி வாலிததி. நான் உயிரோடு இருக்கும் காலம் மேலும் தாயராருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் தொழுது வருமாறும் ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன். அழைப்புப்பணிக்கல்லாமல் அவரது சொந்த வணக்கங்கள் பற்றியும் அவர் தனது ஆரம்ப பேச்சில் தெளிவு படுத்தியுள்ளார். இந்த இடம் சற்று ஆழமாக அணுக வேண்டிய இடமாகும். காரணம் இந்த இடத்தைப் புரிந்துக் கொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் ஒரு குழப்பமான நிலைக்கு ஒரு சாரார் தள்ளப்பட்டு விட்டனர். ‘நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்’ என்பதாகும். இவ்வாறு பொருள் கொண்ட அவர் ‘ஈஸா இப்போது உயிரோடு இருந்தால் அவர் எப்படித் தொழுவார்? எப்படி ஸக்காத் கொடுப்பார்? என்ற கேள்வியை வைத்து அவர் இப்போது உயிரோடு இருந்தால் கட்டாயம் தொழ வேண்டும் ஸக்காத் கொடுத்தாக வேண்டும் ஆனால் இப்போது அவரால் தொழவோ ஸக்காத் கொடுக்கவோ முடியாது என்பதால் அவர் உயிரோடு இல்லை என்பது அவரது வாதம். மொழி ரீதியாக இப்படிப் பொருள் கொள்ள இடமிருந்தாலும் இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ள அந்த வசனம் இடங்கொடுக்கின்றது. ஈஸா அவர்களின் முழு வாழ்க்கையையும் நாம் கருத்தில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது இன்னொரு பொருளே அங்கு பொருத்தமாக உள்ளது. எவ்வித குழப்பத்திற்கும் இடங்கொடுக்காமல் அந்த பொருள் பொருந்திப் போகின்றது. குர்ஆன் வசனத்தின் அரபு வார்த்தை இப்படிப் பொருள் கொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது. இப்படிப் பொருள் கொள்ளும் போது ஈஸாவின் மீது தொழுகை மற்றும் ஸக்காத் கடமையாவதற்கு இரண்டு நிபந்தனைகள் – சூழ்நிலைகள் அமைந்திருக்க வேண்டும். 1) அவர் உயிரோடு இருக்க வேண்டும். 2) தாயாருக்கு பணிவிடை செய்யும் நிலையில் இருக்க வேண்டும். இந்த இரு நிபந்தனைகள் இருக்கும் போது மட்டுமே ஈஸாவின் மீது தொழுகை ஸக்காத் ஆகியவை கடமையாகும். இன்றைக்கு ஈஸா அவர்கள் உயிரோடு இருந்தாலும் தாயாருக்கு பணிவிடை செய்யும் சூழல் அவருக்கு இல்லை என்பதால் இன்றைக்கு அவர் மீது எந்தக் கடமையும் இல்லை. ஈஸாவின் வாழ்க்கை அனேக அற்புதங்களைக் கொண்டதாகும். தனித்துவம் வாய்ந்த அந்த அற்புதங்களோடு இந்த விளக்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதுவே சரியான விளக்கமாகப் படுகின்றது. இப்படிப் பொருள் கொள்ளும் போது புதிய நபித்துவக் கொள்கையில் தடுமாற்றம் ஏற்பட்டு விடும். மைகோவை ஈஸா அவர்களின் வாழ்க்கையை எதை கொண்டு ஒப்பிடுவீர்கள்.பைபிளை கொண்டுதான் ஒப்பிட வேண்டும். நீங்க சொல்கிறதை பாத்தால் “ஒருவர் சொல்கிறார் நான் என் பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவிட்டு அவர்களின் பேரப்பிள்ளைகளை பார்த்துவிட்டு மரிப்பேன்”. என்று சொல்வதை கீழே உள்ள மாதிரி மற்றலாம் என்று சொல்லுவீங்களா?. “நான் மரித்துவிட்டு என் பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவிட்டு அவர்களின் பேரப்பிள்ளைகளை பார்ப்பேன்” என்று மாற்றிக்கொள்ளுவீர்கள் என்று நினைக்கிறேன் Quote: (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்) இப்படிப் பொருள் எடுத்தால் இனி ஈஸா அவர்கள் அடுத்த முறை வரும் போது அவர்கள் உயிரோடு இருப்பார்கள் ஆனால் அப்போதும் தாயாருக்கு பணிவிடை செய்ய முடியாது மைகோவை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் அது உங்க இஷ்டம். Quote: (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்) அப்படியானால் அப்போதும் அவர்கள் மீது தொழுகை – ஸக்காத் கடமையில்லையா என்ற கேள்வி எழுந்தால், இனி வரும் போது அவர்கள் இறைத்தூதராக வரமாட்டார்கள். மாறாக குர்ஆனை விசுவாசித்து இறைப் பணி செய்யும் ஒரு நம்பிக்கையாளராகவே வருவார்கள் என்பதே பதிலாகும். அவர்களின் இரண்டாவது வருகை இறைத்தூதர் அந்தஸ்த்தில் இருக்காது என்பதால் (இரண்டாவது வருகை குறித்து பிறகு வரும் இன்ஷா அல்லாஹ்) இறைத்தூதராக இருந்த போது அவர்களுக்கு இருந்த சட்டம் இப்போது பொருந்தாது என்பதை கவனத்தில் கொண்டால் சந்தேகம் தீர்ந்து விடும். மைகோவை அவர் நபியா வருவார மாட்டாரா என்பதை விட பைபிள் சொல்லுவதை வழி மொழியும் இந்த ஹதீஸ்சின் படி அவர் நீயாதிபதியாக வருவார் என்பது உண்மை. பாடம் மர்யமின் மைந்தர் ஸஹீஹ் புகாரி ஹதீஸ் 3448 என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக* விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார்…………………………………………… இது தான் பைபிள் சொல்லுவது. இதன் பின் சிலுவையை உடைப்பார்,பன்றியை கொல்வார்,ஜிஷ்யாவை நீக்குவார் இதெல்லாம் தனி கட்டுரையில வைத்துக்கொள்ளலாம் Quote: பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்) மேற்கண்ட வசனத்திற்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம். ‘நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்’ என்று ஈஸா அவர்கள் சொல்லும் போது உயிரோடு பச்சிலங்குழந்தையாக இருக்கிறார்கள். அதாவது தன் மீது தொழுகைக் கடமை என்று அவர்கள் சொல்லும் போது உயிரோடு இருக்கிறார். ஆனாலும் குழந்தை. குனிந்து நிமிர்ந்து வணங்கும் நிலையில் அவர் அன்றைக்கு இல்லை என்றாலும் அந்தக் குழந்தையின் வார்த்தைகள் அனைத்தும் வணக்கமாகவே இருந்தது. அதுபோன்ற ஒரு நிலையைக் கூட உயர்த்தப்பட்டப் பிறகு இறைவன் அவருக்கு ஏற்படுத்தி இருக்கலாம். இந்த இரண்டு வித்தில் எப்படிப் பொருள் கொண்டாலும் அங்கே புதிய நபிக் கொள்கைக்கு இடமில்லாமல் போய்விடுகின்றது. மைகோவை எப்படி உங்க கருத்தில் அதாவது நபிகள் நாயகம் அவர்களுக்கு பின் நபி வரமாட்டார் என்ற கருத்துகிறீர்களோ அது போலவே மனிதன் இரட்சிக்கப்படும் படி உலகத்தில் இயேசு என்கிற நாமமே அல்லாமல் வேறு நாமம் வழங்கப்படவில்லை என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். Quote: (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்) நான் மரணிக்கும் நாளில் என் மீது சாந்தி நிலவும் என்ற இயேசுவின் கூற்று மீண்டும் ஒரு முறை சிலுவை சம்பவத்தைப் பொய் படுத்துகின்றது இந்த இடத்தில். ஏனெனில் சிலுவையில் அறையப்பட்டதாக நம்பப்படும் அந்த நபர் ‘ஏலி ஏலி லாமா சபக்தனி’ என்று கூக்குரலிடுகிறார் இதற்கு ‘என் என் தேவனே ! என்னை ஏன் கை விட்டீர்’ என்று அர்த்தமாம் என பைபிள் கூறுகின்றது. இந்த அவலக்குரல் சாந்தியான மரணத்தின் அடையாளமல்ல. ஆனால் ஈஸாவின் மரணம் நிச்சயம் சாந்தியோடு நிகழும் என்பதில் ஐயமில்லை. அவரது இரண்டாவது வருகைக்கு பின் நிகழப்போகும் இறைப் பணிகளுக்குப் பிறகு அவர் மரணிப்பார். அப்போது அவர் மீது சாந்தி நிலவும் அந்த சாந்தி, அவர் மீது சுமத்தப்பட்ட இறைமகன் என்ற அவதூறு – சிலுவை அவதூறு போன்றவை துடைக்கப்பட்டு விட்டதாக இருப்பதால் உலகறியும் சாந்தியாக இருக்கும். மைகோவை சிலுவையில் இயேசு சொன்ன ஒரு வார்த்தையை அழகாக சொன்னீர்கள்,ஆனா அவர் சொன்ன கடைசி வார்த்தையை மறந்துவிட்டீர்கள்.முடிந்தது, என் ஆவியை ஒப்படைக்கிறேன்.என்று சொன்னார்.இதில் சாந்தி நிலவுவது உங்களுக்கு தெரியவில்லையா?ஒரு போரில் உண்மையாய் ஈடுபடும் ஒருவருக்கு அவரின் மரணத்தை விட அதில் கிடைக்கும் வெற்றியே அதிக சந்தோஷத்தை தரும்.அதனால் தான் இன்றைக்கு அநேக தற்கொலைப்படைகள். Quote: (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்) இதுவே அவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்த மரியமின் புதல்வர் ஈஸா பற்றிய உண்மைச் செய்தியாகும். எந்த ஒரு பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது கர்த்தருக்கு தகுமானதல்ல. கர்த்தர் தூயவர். (அல்குர்ஆன் 19:29-35) இயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது. தேவன் நாடட்டும் தொடர்வோம் மைகோவை 1,குமாரன் வருவார் என்று யூதர்கள் வேதம் சொல்கிறது.(பழைய ஏற்பாடு), 2,தேவன் தன் குமாரனை உலகத்துக்கு அனுப்பினார் என்று கிறிஸ்தவர்கள் வேதம் சொல்கிறது(புதிய ஏற்பாடு) 3,எனக்கு மனைவி இல்லை,மனைவி உறவில் எனக்கு ஒரு குழந்தை இல்லை என்று இஸ்லாமிய வேதம் (குரான்) சொல்கிறது. அவ்வளவுதான். இதில் ஒன்னும் முரண்பாடு இல்லை.இயேசு கடவுளின் பிள்ளை என்று சொன்னவுடன் கடவுள் ஏதோ மரியாள் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டார் என்று சொல்லுவதாக நினைத்தது யாருடைய தவறு.? அப்படியென்றால் உங்களுக்கு புரிய வில்லை என்று அர்த்தம்.அப்பொழுது யாராவதும் பைபிள் படித்தவர்களிடம் என்ன பைபிளில் எழுதியிருக்கிறது என்று கேளுங்கள். குழந்தை அற்புதம் இத நாங்க மாத்தினோமா இல்ல நீங்க மரியாள அவமான படுத்த இத சேத்தினீங்களா? அப்படிஇயேசுகிறிஸ்து குழந்தையில் பேசியிருந்தல் குரானில் சேர்த்துவதற்கு முன்பே பைபிளில் சேத்திருப்பார்கள்.இது இயேசுகிறிஸ்துவை பற்றி அறிவிப்பதற்கு மிகவும் பிரயோஜனமாக இருந்திருக்கும்.ஆனால் அப்படி ஒரு அற்புதம் நடக்கவில்லை.இயேசுகிறிஸ்துவின் தனித்தன்மையை கெடுக்க செய்யப்பட்ட சதி அவ்வளவுதான்.எப்படி சொல்லுகிறேன்.கீழே வாங்க. உங்க கூற்றுப்படி இயேசு மட்டும் தான் குழந்தையில பேசினாரா? இல்லை ஒரு விபச்சாரக்காரியின் பிள்ளை,இஸ்ரவேல் பெண்ணின் பிள்ளை இவர்களும் குழந்தையாக இருக்கும் பொழுது பேசியதாக நபிகள் நாயகம் அவர்கள் சொல்லி உள்ளார்கள். ———- பாடம் தொட்டிலில் பேசிய ஸஹீஹ் புகாரி ஹதீஸ் 3436 மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும்போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றெhருவர்) பனு} இஸ்ராயீல்களால் ஜுரைஜ; என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ; (தம் மனத்திற்குள்) அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா? என்று கூறிக் கொண்டார். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், இறைவா* இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச் செய்யாதே* என்று கூறி விட்டார். (ஒரு முறை) ஜுரைஜ; தமது ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆகவே, (அவள் அவரைப் பழிவாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு இது ஜுரைஜுக்குப் பிறந்தது என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜுடம் சென்று அவரது ஆசிரமத்தை அடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ; அவர்கள் உளூ செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று குழந்தையn* உன் தந்தை யார்? என்று கேட்டார். அக்குழந்தை, (இன்ன) இடையன் என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்து கொண்ட அந்த மக்கள், தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறேhம் என்று கூறினார்கள். அதற்கு அவர், இல்லை, களிமண்ணால் கட்டித் தருகிறேhம் என்று கூறினார்கள். அதற்கு அவர், இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ளமாட்டேன் என்று கூறிவிட்டார். (மூன்றhமவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டிருந்தான். உடனே அவள், இறைவா* என் மகனை இவனைப் போல் ஆக்கு என்று துஆ செய்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, இறைவா* இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே என்று கூறியது. பிறகு அவளது மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. இந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்தது – பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், இறைவா* என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே என்று கூறினாள். உடனே அக்குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு, இறைவா* என்னை இவளைப் போல் ஆக்கு என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), ஏன் இப்படிச் சொல்கிறhய்? என்று கேட்டதற்கு அக்குழந்தை, வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடங்கோலர்களில் ஒருவன், இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறhக) நீ திருடிவிட்டாய், விபசாரம் செய்து விட்டாய் என்று கூறுகிறhர்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை என்று பதிலளித்தது-(119). முடிவுரை இப்ப சொல்லுங்கள் மரியாளுக்கும் இயேசுவுக்கும் இது மதிப்பா? அன்பு நண்பர்களே இதை சொல்லியே எத்தனை கிறிஸ்தவ சகோதரர்களை ஏமாற்றி வருகிறீர்கள். உமர் அண்ணா வைத்த ஒருகட்டுரைக்கு கூட நீங்கள் இது வரை சரியான பதில் வைக்கவில்லை.ஏன் இவ்வளவு தாமதம் அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே நீங்கள் சொல்வதற்கு எந்த ஆதாரம்மும் இல்லை.இயேசுகிறிஸ்து தேவனின் குமாரன்,அவரே நம்மை மீட்க வந்த பரிசுத்தர்.கொஞ்சம் திறந்த மனதோடு பைபிளை படிப்பீர்களானால் இறைவன் உங்கள் கண்களை திறப்பான். , http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=3745#3745,
 3. A Critic said

  உங்களை நீங்களே அறிஞன் ண்டாக்கா எப்பிடிங்க சாமி ?!!

 4. A Critic said

  “இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்” எனும் புத்தகம் ஹோல்கர் கெர்ஸ்டன் என்பவரால் எழுதப்பட்டது.

  அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சாரம்சம்:

  இயேசு பிரான் பதினான்காம் வயதில் இந்தியாவிற்கு வந்தார். கல்விகள் பெற்றார். புத்தரின் கோட்பாடுகளை ஏற்று, பலருக்கும் கல்வி கொடுத்தார். இந்து சமயத்திற்கு எதிராக, சாதிகளைச் சாடினார். அதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட தருணத்தில், (முகம்மது நபி மதீனாவுக்குத் தப்பித்ததைப் போன்று) ஈசா அவர்கள் காஷ்மீரத்திற்கும் பின்பு அங்கிருந்து ஈரான் வழியாக பாலஸ்தீனத்திற்கும் ஏகினார்.

  புத்தரின் கொள்கைகளை பாலஸ்தீனத்தில் போதித்தார். பைபிளில் கூறப்பட்டுள்ள அவரின் சீடருக்கு அவர் செய்த போதனையானது, அப்படியே ஒரு வரிக் கூட மாறாமல் புத்த மதத்தின் முக்கூடைகளில் காணப்படும் புத்தரின் போதனைகளாகும். புத்தர் தனது சீடர் ஆனந்தாவுக்கு அளித்த போதனைகளே அவை.

  இயேசு பிரான் சிலுவை ஏற்றத்திற்குப் பிறகு, சிலுவை-ஏற்றப் பொறுப்பாளியான ஒரு யூதரால் காப்பாற்றப் பட்டார். வெள்ளிக்கிழமை மாலையில் யூதர்களின் “சப்பாத்” எனும் சடங்கு நாள் தொடங்கியமையால், அனைத்து யூதர்களும் ஈசா மரிப்பதற்கு முன்பே வீட்டிற்குச் சென்றுவிட்டிருந்தனர். மயங்கிய நிலையில் இருந்த ஈசா கீழிறக்கப் பட்டு, பிணவறைபில் ஓய்வளிக்கப் பட்டார். இரு நாட்களுக்குப் பின்பு அவரது அன்னை மற்றும் ஒரு சீடரின் உதவியுடன் அவர் கைத்தாங்களாக எழுந்து தப்பித்தார். தப்பித்த அவர் பாலஸ்தீனத்தில் சில நாட்கள் வாழ்ந்தார். பின்பு ஈரான் வழியாக காஷ்மீரகத்திற்கு மீண்டார்.

  அம்புடுதேன்.

  இத சொல்லுறதுக்கு ஆசிரியர் பல ஆதாரங்களை காட்டுறார். இது பத்தி உங்க கருத்து என்ன ? “குர்-ஆன் ஹதீஸில் இவ்வாறு இல்லை” அப்பிடீன்னு தப்பிக்க வேணாம். இந்த வரலாறு குர்-ஆனில் உள்ள ஒரிஜினல் வாசகத்திற்கு எதிரானதுமில்லையாம். சும்ம கேள்வி தான்.

  அப்புறம்,..

  இது காதியானிங்க வரலாறு-நும் சொல்ல வானாம். ஏன்னா காதியானிங்க இந்த வரலாரை முழுசா ஏத்துக்குறதில்ல. சில்வை ஏற்றத்துக்கு பிறவு ஆன பகுதியை மட்டும் தான் அவங்க ஏத்துக்குவாங்க.

  ‘அறிஞ’ரே, இத எப்படி பாக்குறீங்க ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: