தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

திரைமறைவு ஆளுமையில் உலகம்

Posted by tamilmuslim மேல் ஒக்ரோபர் 26, 2007

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து அரை நூறாண்டு நிறைவுப் பெற்று விட்ட நிலையிலும் மக்கள் முன்னேற்றத்தில் ஒரு மகா தேக்கநிலை நிலைத்து நிற்பதை உணராத அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது. ஓரு பரந்த முன்னேற்றம் இல்லை என்றாலும் மக்கள் பதட்டமில்லாத ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்களா.. என்று பார்க்கும் போது உலக நாடுகளில் குறிப்பாக வல்லரசுகளிலும் அதன் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கும் நாடுகளிலும் உள்ள மிக மிக சொற்பமான மக்களே நிம்மதியான சுகபோக வாழ்வை சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலக மக்கள் தொகையில் இவர்கள் ஐந்து சதவிகிதத்தைக் கூட தாண்ட மாட்டார்கள் என்பது தான் உண்மை.
இதற்குரிய காரணம் என்ன? என்பதை ஆய்வுக்குட்படுத்தினால் உடனடியான பதில் மக்கள் தொகை பெருக்கம் என்பதுதான். அதிலும் இந்த பதிலை வல்லரசுகளே தொடர்ந்து முன்மொழிகின்றன.எதையும் சந்திக்கவும் சாதிக்கவும் சக்திப் பெற்ற வல்லரசுகள் இந்த பதிலை சொல்லும் போது இயற்கையிலேயே ஒரு சந்தேகம் வலுக்க துவங்கி விடுகிறது. அவசரமாக இந்த பதில் உதிப்பதற்கு காரணம் என்ன? வேறு எதையோ மறைக்க இந்த பதில் அவர்களுக்கு ஆயுதமாகவும் ஆயத்தமாகவும் ஆகிவிடுகின்றன.
மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப இயற்கை வளங்களின் வளர்ச்சியும் குறைவின்றி செழுமையாக விளையும்போது மக்கள் வளர்ச்சியின் தேக்க நிலைக்கு மக்கள் தொகை வளர்ச்சியே காரணம் என்ற பதில் ஒரு போதும் சரியாக இருக்காது.
இதற்குரிய காரணத்தை கண்டுபிடிக்க வேண்டுமானால் இரண்டாம் உலகப் போருக்கு பின் நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகளை நாம் தெரிந்தாக வேண்டும். அப்படி தெரியும் போது ஒரு மர்ம சக்தியின் பிடிக்குள் இந்த உலகம் சிக்கி இருப்பதே மக்கள் வளர்ச்சியின் தேக்க நிலை உட்பட எல்லா கெடுதிகளுக்கும் காரணம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
1954ம் ஆண்டு உலகில் ஒரு அமைப்பு உருவாகிறது. – பில்டர்பேர்ஜ் – என்ற பெயர் கொண்ட இவ்வமைப்பை ஸ்வீடன் நாட்டை சார்ந்த பெரும் தொழிலதிபரும் அரசியல் செல்வாக்கு பெற்றவருமான ஜோசப் ரெடிங்கர் என்பவர் நிறுவுகிறார். சோர்போன் பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பெற்ற இவர், ஐரோப்பாவின் வல்லமையை பலப்படுத்தும் ஒரு கனவை உருவாக்கிக் கொண்டார். ஆரம்ப நாட்களில் இவரின் ஒரு சில திட்டங்கள் எடுபடவில்லை என்றாலும் தனது கடின முயற்சிக்குப் பிறகு 1920களில் மெக்ஸிகன் நாடுகளுடனான ஒரு வர்த்தக தொடர்பை ஏற்படுத்துவதில் வெற்றிப் பெற்றார். முதலாம், இரண்டாம் போர்களின் விளைவுகளை நிதானமாக உற்று நோக்கி 1950களில் மேற்குலகின் அரசியல் மற்றும் ராணுவ முக்கியப் புள்ளிகளுடன் உறவு வைத்துக் கொள்ளத்துவங்கி அதை வலுபடுத்திக் கொண்டார்.
உலக மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து அதில் ஆதிக்கம் செலுத்துவது என்பது அமெரிக்காவின் ஒத்துழைப்பின்றி நடக்காது என்பதை சரியாக யூகித்த இவர் ஐரோப்பிய அரசியலிலும் பெட்ரோல் உற்பத்தித் துறையிலும் செல்வாக்குப் பெற்றிருந்த ஹோலாந்து இளவரசர் பெரன்ஹார்ட் டின் உதவியை நாடிப் பெற்றார்.
இப்படியாக தன் செல்வாக்கை பெருக்கிக் கொண்ட இவரால் முறைப்படுத்தப்பட்ட, பில்டர் பேர்ஜ் என்ற ரகசிய அமைப்பின் முதலாவது கூட்டம் 1954 மே மாதத்தில் உஸ்டர்பீக் என்ற நகரத்தில் ஒரு ஹோட்டலில் கூட்டப்பட்டது. முதல் கூட்டத்தின் நினைவாகவும், அமைப்புப் பற்றி வெளிப்படையாக தெரியாமல் இருப்பதற்காகவும் எந்த ஹோட்டலில் கூட்டம் கூட்டப்பட்டதோ அந்த ஹோட்டலின் பெயரையே அமைப்பின் பெயராக்க முடிவு செய்யப்பட்டது. அந்த ஹோட்டலின் பெயர்தான் பில்டர் பேர்ஜ்.
இவ்வமைப்பிற்கு கனவு கண்ட பெரன் ஹார்ட் தலைமையிலேயே இதன் கூட்டங்கள் 22 வருடங்கள் நடந்துள்ளன. இக்கூட்டத்திற்காக இவர்கள் வருடந்தோரும் ஐரோப்பிய நகரங்களையே தேர்ந்தெடுத்தனர். கலந்துக் கொள்ளும் உறுப்பினர் எண்ணிக்கையை 120ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்வார்கள். இக்கூட்டங்கள் பற்றிய எந்தவித தகவலையோ ஆவனங்களையோ இவர்கள் பதிவு செய்துக் கொள்ள மாட்டார்கள். பிறரால் பதிவு செய்யவும் முடியாது. தப்பித் தவறி எப்படியாவது செய்தி வெளியில் போய் விட்டால் எத்தகைய விலை கொடுத்தும் அந்த செய்தி வெளியில் வருவதை தடுத்து விடுவார்கள்.
இக் கூட்டத்தில் கலந்துக் கொள்பவர்களில் 85 பேர் ஐரோப்பியர்களும் மீதி 35 வட அமேரிக்கர்களும் ஆவர். 80க்கும் மேற்பட்ட அரசியல் வாதிகளும் மீதி இருப்போர் பொருளாதார, கல்வி, வர்த்தக புள்ளிகளும் இடம் பெறுவர்.
அமைதியான ஒதுங்குப்புறமான இடமே கூட்டம் நடத்த தேர்வு செய்யப்படும். இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள வரும் எந்த பிரமுகரும் கூட்டம் நடக்கும் மூன்று நாட்கள் வரை தங்கும் இடத்தை விட்டு வெளியில் செல்ல முடியாது. கூட்டம் நடக்கும் இடத்திற்கான பாதுகாப்பை அமெரிக்க உளவு பிரிவும் ஐரோப்பிய நாடுகளின் உளவுப் பிரிவும் பொறுப்பெடுத்துக் கொள்ளும்.
1959 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளுக்கான இவ்வமைப்பின் கூட்டம் துருக்கியில் (முஸ்லிம் நாடு) நடந்தது. துருக்கியின் அரசியல் பொருளாதார கல்வித்துறை முக்கியஸ்தர்கள் இதில் கலந்துக் கொண்டனர். அந்நாட்டை சார்ந்த ஸலாஹூத்தீன் பயாஸீத் இவ்வமைப்பின் நிரந்தர உறுப்பினராவார்.
இவ்வமைப்புப் பற்றிய செய்திகள் வெளிவர துவங்கியவுடன் உலக அமைதிக்கு பாடுபடுவதுதான் எங்கள் லட்சியம் என்று இவ்வமைப்பு கூறினாலும் இதன் ரகசிய செயல்பாடுகள் – இது பொய் லட்சியம் – என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வமைப்பிற்கு தேவையான நிதிகளை ரோக்புலர் என்ற யூத அமைப்பும் ரோத் ஷீல்ட் என்ற யூத கோடீஸ்வரரின் வங்கியுமாகும்.
ஜிம்மி கார்டர், ரீகன், ஜோர்ஜ்புஷ், கிளிண்டன் போன்ற பலரும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டுதான் பின்னர் தேர்தலில் வெற்றிப் பெற்றனர். 1975ல் இவ்வமைப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட மார்கட் தாட்சர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்தின் பிரதமரானார். அரசியல் கணிப்பாளர்களின் கருத்துப்படி பிரதமராவதற்கு வாய்ப்பே இல்லாமலிருந்த டோனிபிளேயர் நாட்டை ஆண்டு வந்ததற்கு வழி வகுத்ததும் இந்த அமைப்புதான். காரணம் அவர் இந்த அமைப்பு கூட்டங்களில் கலந்துக் கொண்டுள்ளார்.
கடந்த எட்டு வருடங்களுக்கு முன் இவ்வமைப்பு கூட்டங்களில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பபைப் பெற்ற பத்திரிக்கையாளர்கள் சிலர் – தி நியு வேல்ட் ஆர்டர் இன்டலிஜன்ஸ் அப்டேட் – என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கையில்,
கொஸோவோ போர் முடிவுக்கு வந்தால் ஸைப்ரஸில் மற்றொரு போர் வெடிக்க வேண்டும் என்ற திட்டத்தை வெளியிட்டிருந்தனர். ஈராக் பற்றிய குறியீடும் இதில் அடங்கி இருந்தது.
இவ்வமைப்புப்பற்றி ஒரு நூல் எழுதிய அமெரிக்கப் பத்திரிக்கையாளர் ரோபர்ட் ஆக்கீன்ஸ் என்பவர் தனக்கு தேவையான தகவல்களை திரட்டுவதற்காக அவ்வமைப்புக் கூட்டங்களில் பங்கு பெற்ற வெளிநாட்டு அமைச்சர்கள், மத்திய உளவுப்பிரிவின் உயர் அதிகாரிகள் ஆகியோரோடு தொடர்புக் கொண்டு இவ்வமைப்புப் பற்றி சில கேள்விகளை கேட்ட போது, அப்படி ஒரு அமைப்புப் பற்றியே எங்களுக்குத் தெரியாது என்று சொல்லி வைத்தார்போல் அனைவரும் கூறியதைக் கேட்டு தான் தடுமாறி போன விபரத்தை குறிப்பிடுகிறார்.
உலக நாடுகளில் தலையிட்டு அங்கு எத்தகைய அதிகாரத்தையும் பெற்று தான் விரும்பும் மாற்றங்களை செய்யும் அளவிற்கு சக்தியுடன் விளங்கும் இவ்வமைப்பின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இன்னும் பல பயங்கர அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
மாட்ரிக்ஸ் பத்திரிக்கையின் முக்கிய ஆசிரியர் இவ்வiமைப்பு பற்றி எழுதிய கட்டுரையில்,
1998 மே 14ம் தேதி மேற்குலகின் அரசியல் கல்வி பொருளாதார முக்கிய பிரமுகர்கள் 120பேர் கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட விலையுயர்ந்த கார்களில் ஸ்காட்லாந்து கிராமபுர ஹோட்டல் ஒன்றுக்கு சென்றனர் பூட்டப்பட்ட கதவுகளுக்குள் அதி தீவிர பாதுகாப்புக்குள் நடந்த இவ்வமைப்பின் 46 வது கூட்டத்தில், உலகில் தம் ஆதிக்க எல்லையை விரிவு படுத்தி தங்கள் கலாச்சார பண்பாட்டு திட்டங்களை திணிப்பது சம்பந்தமாகவும், ஆட்சியாளர்களாக யார் இருக்க வேண்டும் யார் இருக்கக் கூடாது என்பதை தீர்மாணிப்பது சம்பந்தமாகவும் விவாதிக்கப் பட்டு முடிவெடுக்கப்பட்டதை குறிப்பிடுகிறார். இதற்கான பொறுப்பை நியூஜர்ஸி கவர்னர் கிறிஸ்டின் லீட் வயிட்மான் ஏற்றுக் கொண்டுள்ளார்.
உலகில் எதையும் சாதிக்கும் சக்திப் பெற்றிருந்தும் அதை வைத்து நல்ல மாற்றங்களை கொண்டு வராமல் தம் சக்திக்கு கீழ் மற்ற வேண்டாத நாடுகளை அடிமைப்படுத்தி மேலாதிக்கம் செய்யும் எண்ணத்துடன் தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல் பட்டு வருவதே பில்டர்பேர்ஜின் வரலாறாகும்.
இதுபற்றி எல்லாம் கண்டுக் கொள்ளாமல் காலம் தள்ளும் போக்குதான் முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் தொடர்ந்து நிலவி வருகிறது.மத்திய ஆசியாவின் மையப் பகுதிகளில், குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு நீடித்துக் கொண்டிருக்கும் அமைதியின்மை, ராணுவக் கொலைகள், பதட்டம், நில ஆக்ரமிப்பு போன்ற பயங்கரவாத செயல்களுக்கு இதுபோன்ற அமைப்புகளின் ரகசிய ஆளுமை பெரும் பங்காற்றுகிறது.
இதுபற்றி நாம் சிந்திக்கத் துவங்க வேண்டும்.
அல் முஜ்தமஃ அரபு பத்திரிக்கையின் கட்டுரையாளர் அவ்ரஹான் முஹம்மது அலி சொல்வது போல்,இதுபற்றி சிந்திப்போம், ஆக குறைந்தது சிந்திக்க மட்டுமாவது செய்வோம். ஏனெனில் சிந்திப்பதால் எதுவும் தீமை ஏற்படப் போவதில்லை. அதற்கு யாரும் வரி விதிக்கப் போவதுமில்லை.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: