தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

ஆசிரியராகிய நான்

Posted by tamilmuslim மேல் ஜனவரி 9, 2008

குர்ஆன்  இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சவால்கள்.

நூலாசிரியரின் உரை…

பலதரப்பட்ட மக்களையும் சந்திக்கும் வாய்ப்பை அழைப்புப் பணி ஏற்படுத்திக்கொடுத்தது முஸ்லிம்களுக்கு மத்தியிலான பிரச்சாரம் மட்டுமின்றி கொள்கை கருத்துப் பறிமாற்றங்களுக்காக மற்றுமத சகோதர – சகோதரிகளோடு பேசும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமிய கொள்கையை விளங்குவதற்காக கேட்கப்படும் கேள்விகளும் விமர்சனமாக வந்து விழுந்த குற்றச்சாட்டுகளும் அனேகம். மதவழியாக மட்டுமே புரிய வைக்கப்பட்டுள்ள இஸ்லாத்தை இதுவும் ஒரு மதம் என்ற நிலையிலேயே வைத்துள்ளார்கள் முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகள்.

மனித மனங்களையும் காலத்தையும் சூழ்நிலையையும் வெல்லும் சக்தி இஸ்லாமியக் கொள்கை மற்றும் சட்டக் கோட்பாடுகளில்தான் உண்டு என்று விளக்கும் தருணங்களில் உள்ளத்தில் வஞ்சமில்லாத சகோதர சகோதரிகள் வியப்பில் ஆழ்வதைக் காணமுடிகிறது. கடவுளை நெருங்கும் வழியை மட்டும் சொல்லிவிட்டு மனித வாழ்க்கையில் எதைப்பற்றியும் கவலைப்படாத மதக்கோட்பாடுகளையும் கடவுளையும் அன்பையும் மட்டும் சொல்லியுள்ள மதக்கோட்பாட்டையும், கடவுளை மற மனிதனை நினை என்ற மதக்கோட்பாட்டையும், கண்டுள்ள மக்கள் பள்ளிவாசலுக்குத் தொழச்செல்லும் குறைந்த அளவிலான மக்களைப் பார்த்து… இறை வணக்கத்தைச் சொல்லும் மதங்களில் இதுவும் ஒன்று… என்று இஸ்லாத்தை விளங்கியுள்ளதில் புதிர் ஒன்றுமில்லை.

ஆனால் இஸ்லாமிய உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்போது அது கொள்கையாகவோ சட்ட விளக்கமாகவோ விஞ்ஞான உண்மைகளாகவோ எதுவாக இருந்தாலும் அதை மனம் திறந்து ஏற்கும் மாற்றுமத சகோதர சகோதரிகளை காணும்போது மனநிறைவு ஏற்படுகிறது.

உலகில் உள்ள மனிதர்கள் சந்திக்கக் கூடிய எல்லாப் பிரச்சனைகளைப் பற்றியும் இஸ்லாம் பேசியுள்ளது தீர்வு சொல்லியுள்ளது என்று நாம் கூறும்போதெல்லாம் நவீனகால விஞ்ஞானத்தையெல்லாம் இஸ்லாம் பேசியுள்ளதா? பேசும் வாய்ப்புள்ளதா? இது சாத்தியமா? போன்ற ஆச்சரியங்கள் வெளிப்படுவதை தவிர்க்க முடிவதில்லை.

இஸ்லாமிய மூலங்களிலிருந்து நவீன காலப்பிரச்சனையை ஆராயத்துடிக்கும் தமிழ் மக்களுக்கு அதற்காக வழி காண்பிக்கும் வகையில் நவீன மருத்துவத்துறை குறித்து இஸ்லாமிய தொடர்ப்பை இந்நூலில் விளக்கியுள்ளேன். இஸ்லாமிய பிரச்சாரத்தின்போது முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகள் கேட்ட கேள்விகளும் சமீபத்திய விஞ்ஞான வளர்ச்சி கண்டுள்ள புதிய மருத்துவ கேள்வியும் இதில் இடம்பெறுகிறது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, ரத்ததானம், சிறுநீரக தானங்கள், டெஸ்ட் டியூப், டார்வினிஸ்டுகளுக்கு சவால்விடும் கருவறை நிலைப்பாடுகள், குடும்பக்கட்டுப்பாடு, குளோனிங், பலநூறு ஆண்டுகள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் போன்ற மருத்துவத் துறைகளை இஸ்லாம் அணுகும் விதத்தை இந்நூலில் நீங்கள் காணலாம்.

மருத்துவத்துறை என்பது மிக மிக விசலமானது எல்லைக்கோடு இல்லாமல் ஆராய்ச்சிகள் தொடரக்கூடியது. வளர்ந்து நிற்கும் பிளாஸ்டிக் சர்ஜரி, வளர்ந்து வரும் ஆக்குபஞ்சர் போன்ற மருத்துவக் கேள்விகள் இந்நூலில் இடம்பெறவில்லை. இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிப்புகளில் இக்குறை நிவர்த்தி செய்யப்படும்.

இந்நூலில் குறைபாடுகள் இருக்குமானால் அதற்கு என் பலவீனங்களே காரணமாகும். நிறைகள் அனைத்திற்கும் அவற்றின் புகழுக்கும் சொந்தக்காரன் இறைவனே. தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டும் உரிமை இப்புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு.

ஆய்வுரை வழங்கிய நண்பர் இப்னு ஹம்துன் இந்நூல் பற்றி சுருக்கமாக விளக்கியுள்ளார். நன்றி பல.

அழைப்பாளன் பதிப்பகத்தின் நிர்வாகிகளான நேசத்திற்குரிய நண்பர்கள் அனைவரும் என் நன்றிக்கு உரியவர்கள். எல்லோருக்குமாக இறையருள் வேண்டி…

பிரியமுடன்.

ஜி.நிஜாமுத்தீன்.

பரங்கிப்பேட்டை.

10.03.2001              

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: