தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

உள்ளுரில் சேர்த்துத் தொழுதல்

Posted by tamilmuslim மேல் ஜனவரி 18, 2008

உள்ளுரில் குறைத்துத் தொழுதல்!
………………………………………………

கேள்வி: சகோதரருக்கு,
 
நாம் (ஜம்மு) தொழுகையை நம் வசதிக்கேற்ப எளிதாக்கிக்கொள்ள  சேர்த்து தொழலாமா?  சஹிஹ் ஹதீஸ் தங்கள் பார்வைக்கு…

நூல் மாலிக்… முவத்தா வால்யிம் vol 1, பக்கம் 161, இப்னு அப்பாஸ் கூறியதாவது… நபி (ஸல்) அவர்கள் லுஹர், அஸர் சேர்த்து தொழுதுள்ளார்கள். மற்றும் மக்ரிப், இஷா சேர்த்து தொழுதுள்ளார்கள் எந்த காரணமும் இல்லாமல்.

சஹிஹ் முஸ்லிமில் கூட்டுத்தொழுகை என்ற தலைப்பின்கீழ்…இப்னு அப்பாஸ் அறிவிப்பதாவது… எந்த கூட்டதாருடைய (எதிரி) பயமும் இல்லாத நேரத்திலும், பிரயாணம் இல்லாத நேரத்திலும்  லுஹர், அஸர் சேர்த்து தொழுதுள்ளார்கள். மற்றும் மக்ரிப், இஷா சேர்த்து தொழுதுள்ளார்கள். (சஹிஹ் முஸ்லிமில் (ஆங்கில மொழியாக்கம்) பாகம் CCL, Tradition #1515.

இதைப்பற்றி தங்களுடைய விளக்கம் தேவை.

hssnansarஅட்yahoodotcom

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுப் போன்று ஆதாரப்பூர்வமான செய்திகள் பல நூல்களில் அறிவிக்கப்பட்டுள்ளது உண்மைதான். மேலும் நூல்கள் அஹ்மத் 3152 திர்மிதி 172 அபுதாவூத் 1025.

جمع رسول الله ‏ ‏ صلى الله عليه وسلم ‏ ‏ بين الظهر والعصر والمغرب والعشاء في ‏ ‏ المدينة ‏ ‏ من غير خوف ولا مطر

நம்முடைய அனைத்துத் தொழுகைகளையும் தீர்மானிப்பதற்கு இந்த ஒரு கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் நபி(ஸல்) காலாகாலத்துக்கும் இப்படி சேர்த்து (ஜம்வு)  தொழுதுக் கொண்டிருக்கவில்லை. ‘பயமோ மழையோ இல்லாத நேரத்தில் நபி(ஸல்) அவ்வாறு செய்துக் காட்டியுள்ளார்கள் என்பதிலிருந்து சில அவசரங்களுக்கு அவ்வாறு செய்துக்கொள்ளலாம் என்றுதான் விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாக இந்த ஒரு செய்தியை மட்டும் ஆதாரமாகக் கொண்டு எப்போதும் அவ்வாறு செய்துக் கொள்ளலாம் எனறு முடிவெடுத்தால்,

إنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

இந்த வசனத்துக்கு விளக்கமாக இநைத்தூதவர்கள் தம்முடைய வாழ்நாள் முழுவதும் தொழுகையின் நேரங்களை விளக்கி அதற்குரிய நேரங்களில் தொழுதுக் காட்டியுள்ளார்கள்.

எனவே உள்ளுரில் இருக்கக் கூடியவர்கள் தொழுகையை அதற்குரிய நேரங்களில் தான் தொழ வேண்டும். தவிர்க்க முடியாத சில நேரங்களில் சேர்த்து  தொழுதால் அதை கூடாதென்று சொல்ல முடியாது. ஏனெனில் அதற்கும் நபியிடம் வழிகாட்டல் இருக்கின்றது.

பிரயாணிகளாக இருந்தால் அவர்கள் எப்பொழுதும் சேர்த்து குறைத்துத் தொழுதுக் கொள்ளலாம்.

Advertisements

ஒரு பதில் to “உள்ளுரில் சேர்த்துத் தொழுதல்”

  1. அஸ்ஸலாமு அலைக்கும்…
    இன்னும் முழுமையாக படிக்க வில்லை…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: