தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

இணைய செய்தியோடை

Posted by tamilmuslim மேல் ஜூன் 19, 2008

இணையங்களில் RSS – XML என்ற செய்தியோடைகள் மிக பிரபல்யமாகி விட்ட ஒரு நுட்பமாகும்.  அதை தொகுப்பது, அதற்கான வாய்ப்புகள், அது குறித்து விளக்கப்பட்டுள்ள பல தளங்கள், நம் விருப்பங்களின் உள்ளடக்கம் என்று ‘செய்தியோடை’ பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

சில காலமாக இந்த RSS ஓடை அல்லது RSS ஊட்டு என்பதை இணைய தளங்களில் பார்த்திருப்பீர்கள். குறிப்பாக இணைய தளங்களில் செய்தி வாசிப்போர் இதை அறிய வந்திருக்கக்கூடும். ஒரு செஞ்சதுரத்தில் XML என்றோ அல்லது RSS என்றோ குறிக்கப்பட்டிருக்கும்.இந்த செஞ்சதுரம் காணப்படும் இணையதளங்களில் இம்மாதிரி வசதி கிட்டும். அவையன்றி வலைப் பூக்களிலும் இம்மாதிரி வசதி உண்டு.
நண்பர் பத்ரியின் வலைப்பூ பதிவை அவ்வப்போது படிக்க எண்ணுகிறீர்களா? நீங்கள் உலகில்நடக்கும் விடயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளவரா? உங்களுக்கு பிடித்தமானவற்றை சுடச்சுட அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் இந்த RSS வசதியைப் பற்றி சிந்திக்க வேண்டும். மேலும் நீங்கள் யாஹூ மின் மடற்குழுக்களைப் படிப்பவாரா?அப்படியானால் நிச்சயம் இந்த வசதியை நீங்கள் பெற்றே ஆகவேண்டும். ஆமாம் இப்போது யாஹூ மின் மடற்குழுவிலும் இம்மாதிரி வசதியைத் தந்திருக்கிறார்கள்.
இது xml கோப்பு அடிப்படையில் அமைந்த ஒரு பொருளடக்கப் பட்டியல். ஆக்கத்தின் அடிப்படை விடயங்களான தலைப்பு, எழுதியவர், நேரம் மற்றும் எதைப் பற்றியது என்ற சிறு குறிப்பு அடங்கியவைதாம் இந்த பட்டியல். அவ்வப்போது கிடைக்கும் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள ஏற்பட்ட முறையே இது. இபோது அனேகமாக எல்ல வலைப்பூக்களிலும் பல இணைய தளங்களிலும் பயன்படுத்தப் படுகிறது.xml இன் ஒரு வகையான RDF கட்டமைக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கபடுவதால் RDF Site Summary என்றும், எளிதாக செய்திகளை பரிமாறிக் கொள்வதால் Really Simple Syndicationஎன்றும் மொத்ததில் RSS என்றும் அழைப்படுகிறது.
RSS வசதியை நாம் பாவிப்பதால் உடனுக்குடன் செய்திகளைப் பெறுவது மட்டுமல்ல. ஒரே இடத்திலிருந்து நீங்கள் விரும்பும் தளங்களை அணுக முடியும். இந்த RSS ஊட்டுக்களைப் படித்து அவற்றில் பொதிந்திருக்கும் செய்திகளைத் தரவும் இணைய தளங்களை அங்கிருந்து அணுகவும் உதவும் செயலிகள் நிறைய இருக்கின்றன. அவை இலவசமாகவே கிடைக்கின்றன. இணைய தளத்தில் செயல்படும் செயலிகளும் தனித்து உங்கள் கணினியிலேயே செயல்படும் செயலிகளும் இருக்கின்றன. இப்போது யாஹு அறிமுகப் படுத்தியிருக்கும் இந்த வசதியை யாஹு அஞ்சல் குழுமங்களைப் படிக்க மட்டுமல்ல, வேறு எந்த XML ஊட்டுக்களை தரும்பிளாக்குகள், இணைய தளங்கள் ஆகிவற்றையும் யாஹுவில் இருந்தபடியே அணுக இயலும்.
வலைப்பூக்கள் சாதாரண இணைய தளம் போலல்லாமல் xml கட்டமைப்புடன் தரவுகள் சேமிக்கப்பட்டு பின்னர் பக்கங்களாக வெளிக்காட்டப்படுவதால் அடிப்படையிலேயே RSS ஊட்டுகளை தர இயலுகிறது.
இனி இந்த RSS படிப்பான்கள் பற்றியும் பயன்படுத்துவது பற்றியும் காண்போம்.
RSS ஊட்டுக்களைப் படிக்க நிறைய செயலிகள் உண்டென்று சொன்னோம். இந்தச் செயலிகள்இணையத்தில் இயங்குபவனவாகவும் தனித்து இயங்குபவனவாகவும் இருக்கின்றன.
வெப்தளங்களில் இயங்கும் http://www.bloglines.com/ போன்ற நூற்றுக் கணக்கான “அக்ரிகேட்டர்” அல்லது “நியூஸ் ரீடர்” எனப்படும் RSS படிப்பான்கள் நிறையவே இருக்கின்றன. இணையத்தில் துழாவினால் நிறையவே கிடைக்கும். நீங்கள் படிக்க விரும்பும் செய்தித் தலைப்புக்களின் RSS முகவரியை இட்டால் அங்கிருந்தே செய்திகளின் தளத்திற்குச் சென்று முழுவதையும் படிக்கலாம்.
RSS என்று பொதுவாகச் சொன்னாலும் அவற்றிலும் வித்தியாமான நிர்ணயம் உண்டு. 0.9, 1.0,2.0 மற்றும் புதியதாக வந்திருக்கும் atom போன்றவை xml கோப்பின் அடிப்படையிலே இயங்குகின்றன. என்றாலும் சில வேறுபாடுகள் உண்டு, இப்போது கிடைக்கும் படிப்பான்கள் எல்லா வகைகளையும் கையாளுபவையாக இருகின்றன.
தனித்தியங்கும் RSS படிப்பான்களும் இணையத்தில் நிறையவே கிடைக்கின்றன.”ராக்கெட் இன்போ” (www.rocketinfo.com), ஆர் எஸ் எஸ் ரீடர் (www.rssreader.com) போன்றபலவற்றைக் குறிப்பிடலாம். FreeReader என்ற படிப்பான் 98 இல் இயங்கும். மேலே குறிப்பிட்ட மற்றவையும் 98 இயங்கும் ஆனால் .NET Framework 1.1 கணினியில் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். நான் பார்த்தவைகளில் எனக்குப் பிடித்தது RSS Bundit தான். நிறையவே வசதிகள் இருக்கின்றன.
இம்மாதிரி வசதியை யாஹ¥வும் அளிப்பதுதான் இப்போது நம்மிடையே பலரைஈர்த்திருக்கிறது. யாஹ¥ குழுமங்கள் பலவற்றில் நாம் உறுப்பினராக இருக்கக் கூடும்.ஒவ்வொன்றாகவோ அல்லது ஒவ்வொன்றிற்கும் ஒரு சாரளமோ திறந்து பார்க்கவேண்டியிருக்கிறதல்லவா? இனி அவ்வாறில்லாமல் ஒரே இடத்திலிருந்து அவைகளைக்காணமுடிவதல்லாமல் புதியதாக அஞ்சல் ஏதும் வந்தால் அவைகளும் சேர்ந்து கொள்ளும்.
கீழே காண்பதுபோல் செய்து சோதித்துப் பாருங்களேன்.
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:
1. http://my.yahoo.com தளத்திற்குச் செல்லுங்கள்.2. “Choose Content” என்ற பொத்தானைச் சொடுக்குங்கள்.3. My Yahoo! Essentials என்பதில் “RSS Headlines (BETA)” ஐ தெரிவு செய்து கொள்ளுங்கள்.4. “Finished” பொத்தானை அழுத்தி நிறைவு செய்யுங்கள். (“My Yahoo” விற்கு திரும்பி வந்திருப்பீர்கள்)5. அடுத்து “Add/Delete” பொத்தானை அழுத்துங்கள். இனி வரும் பக்கத்தில் Page Settings என்பதன் கீழே காணும் “Refresh Rate:’ என்ற பட்டியலில் பல நிமிட அளவுகளைக் காண்பீர்கள். இந்த நிமிட அளவு, “My Yahoo!” முகப்புப் பக்கம் எத்துனை நிமிடங்களுகொருமுறை மீளேற்றம்(refresh)செய்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும். தேவையான நிமிட அளவைத் தேர்ந்தெடுங்கள்.6. “Finished” பொத்தானை அழுத்தி நிறைவு செய்யுங்கள்.
இனி RSS ஊட்டுக்களைக் கொடுக்கும் இணைப்பு முகவரிகளை ஒவ்வொன்றாக உள்ளிடலாம். இந்தஊட்டுக்களை தரும் மின்னஞ்சல் குழுக்களோ, வலைப்பூக்களோ, இணைய தளங்களோஎதுவாயினும் உள்ளிடலாம்.
யஹு மடற்குழுவில் கிடைக்கும் RSS சுட்டி கீழ்க் கண்டவாறு இருக்கும்:http://rss.groups.yahoo.com/group/XXXXXXXXXX/rssஇதில் XXXXXXXXXX என்பது குழு பெயர்.
எடுத்துக்காட்டாக, தமிழ் உலகம்http://rss.groups.yahoo.com/group/tamil-ulagam/rssஎன்றும்,
இ-உதவிhttp://rss.groups.yahoo.com/group/e-uthavi/rssஎன்றும் இருக்கும்.
இவற்றை மேற்கூறப்பட்டவாறு உள்ளிடுங்கள்.மேலும் நண்பர் பத்ரியின் இந்தச் சுட்டியையும் உள்ளிட்டு அவருடைய “எண்ணங்களை”உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்:http://thoughtsintamil.blogspot.com/rss/index.rdf
RSS ஊட்டுக்களைக் கொடுக்கும் தளங்களை எப்படி அறிந்து கொள்வது? அந்தந்த தளங்களுக்குச் செல்லும்போது மேலே கூறியதுபோல் செஞ்சதுரங்களைக் கொண்டோ அல்லது அதற்கான சுட்டிகளுடன் கொண்ட அறிவிப்பைக் கொண்டோ தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றாலும் கவலையில்லை. பெரும்பாலான “படிப்பான்கள்” வலைத்தளதின் முகவரியைக் கொடுத்தாலே அங்கு RSS வசதி இருக்கிறதா என்று கண்டறிந்து RSS சுட்டியை தன்னுள் பதித்துக் கொள்ளும்.
தற்போது வலைப்பூகளைத் தவிர செய்திகளைத் தரும் வேறு தமிழ்த் தளங்களில்இந்த வசதி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் விரைவில் வரும். வலைப் பூக்களிலும் அவரவர் அறிந்தோ அறியாமலோ இந்த வசதி கிடைக்கிறது.இதனை நன்கு அறிந்து வைத்திருப்போர் தங்கள் தளங்களில் இம்மாதிரியான வசதி கிட்டுகிறது என்ற அறிவிப்பையும் தருகின்றனர். அடிப்படையில் அனேக வலைப் பதிவுகள் “ஸ்க்ரிப்ட்” களைக் கொண்டும் தரவு தளமாக xml ஐக்கொண்டும் இயங்குவதால் RSS கோப்புக்குத் தேவையான தவல்களை தொகுப்பது எளிதாகிறது. அப்படியானால் சாதாரண வலைத் தளங்களில் RSS ஊட்டுக்களைப்படுத்த இயாலாதா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தாராளமாகப்பயன்படுத்தலாம். ஏகப்பட்ட வலைத் தளங்கள் பயன்படுத்துகின்றன. அடிக்கடிபக்கங்களைச் சேர்ப்போருக்கும் பக்கங்களில் உள்ள தகவல்களை பல முறைமாற்றுவோருக்கும் கூட இது ஒரு வரப் பிரசாதம். எடுத்துக் காட்டாக மென்பொருள் துறை, பல்பொருள் விற்பனைத்துறை போன்றவற்றைக் குறிப்பிடலாம் நுகர்வோருக்கு தங்கள் பொருட்களின் புதிய வரவுகளையும் விலைகளையும் அறிதயத்தர விரும்பும் முதலானோர் இதைப் பயன்படுத்தலாம்.
சுருக்கமாகச் சொன்னால் தங்களின் செய்திகளை, அறிவிப்புக்களை பிறரிடம் விரைவாகக் கொண்டு செல்ல விரும்புவோர் யாராயினும் இதைப் பயன்படுத்தலாம். அது செய்தித் துறையாகட்டும், வணிகத் துறையாகட்டும் அல்லது இன்ன பிறவாகட்டும். இந்த RSS ஊட்டு, பக்கங்களின் முழுச் செய்திகளையும் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. (சில ஊட்டுக்கள் முழுச் செய்தியைகொடுப்பனவாகவும் உண்டு). குறைந்த அளவாக, தலைப்பு, அந்தப் படிவத்தின் சுட்டி, அந்த படிவம் எதைப் பற்றியது என்ற ஒரு சிறு குறிப்பு, யாரால் அந்தப் படிவம் எழுதப் பட்டது, எப்போது எழுதப் பட்டது என்பன போன்ற குறிப்புக்கள் போதுமானதாகும். மிகவும் குறைந்த அளவாக தலைப்பு, அதன் சுட்டி ஆகியவையாவது இருக்க வேண்டும். மேற்கண்ட குறிப்புக்கள் கொண்ட ஒரு தொகுப்பு, ஒரு தொகுதியாக (item) கருதப்படும். இவ்வாறே ஒவ்வொரு ஆக்கத்திற்கும் ஒரு தொகுப்பாக வரையறுக்கப் பட்டிருக்கும்.
இதை உங்கள் தளங்களிலும் பெற வேண்டும். என்ற எண்ணம் வருகிறதா? நல்லதுதான். அதை உருவாக்கி தளங்களில் சேர்ப்பது கடினமானதா? அப்படியெல்லாம் கடினமானதில்லை.மீயுரை குறியீட்டில் (HTML) சில வரிகள் எழுதத் தெரிந்தாலே போதும்.இதை எழுத “நோட்பேட்” போதுமானது. ஒருமுறை சரியான ஒரு படிவத்தை எழுதிவிட்டால் அதை வைத்தே (template) புதியதையும் எழுதலாம்.
சரி, RSS ஊட்டுகளில் பல வகைகள் இருக்கின்றன என்று பார்த்தோம். அதில் எந்த வகையைத் தேர்ந்தெடுப்பது? புதியதும் மிக எளிதானதுமாக இருப்பது RSS 2.00 தான்.
RSS ஊட்டுக்களுக்காக XML வகை கோப்புக்களைப் பயன்படுத்துவதாகக் கண்டோம்.அந்த கோப்பை எந்த முறையில் உருவாக்கினாலும் சரி; அடிப்படையான இரண்டுவிடயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
1. XML கோப்புக்களுக்கான விதி..2. எந்த வகை RSS ஊட்டைப் பயன்படுத்துகிறோமோ அந்த கட்டமைப்பின் விதி.
வெப் தளம் வைத்திருப்போர்(அல்லது பராமறிப்போர்) மீயுரை(HTML) எழுதப்பட்டிருக்கும் விதம் பற்றி அறிந்திருப்பார். XML உம் அதன் சகோதரிதான் என்றாலும் சற்று கண்டிப்பானவள். மீயுரை சற்று இலகுப் போக்குக் கொண்டது. தவறாக எழுதினாலும் கோபித்துக் கொள்ளாது. மேல் தட்டு,கீழ்த்தட்டு எழுத்து வரிசைகளை (upper & lower case) பாவித்தாலும் அதற்கு எல்லாம் ஒன்றுதான். ஆனால் XML இல் ஒரு ஒழுங்கைக் கடைப் பிடிக்கவேண்டும்.மீயுரையில் Arial என்று எழுதினாலும் Arial என்று எழுதினாலும் ஒன்றுதான். ஆனால் XML இல் ஒரே ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறே வரிசை முறையையும் கடைபிடிக்க வேண்டும்.
அடுத்து RSS ஊட்டின் அமைப்பு ஒழுங்கு பற்றி:1. எந்த வகை RSS ஊட்டு என்பது பற்றி.2. அந்த ஊட்டின் சானல் (channel) அடக்கம்.
channel என்பதினுள்ளே இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று உங்கள்தளத்தைப் பற்றிய சில விபரங்களும், மற்றும் ஒவ்வொரு item என்பதாகநீங்கள் சுட்ட விரும்பும் ஆக்கத்தின் விபரமும் இருக்கும். item எண்ணிக்கைஎத்தனையாகவும் இநுக்கலாம் இருக்கலாம். ஒவ்வொரு item மும் குறைந்த பட்சம்ஆக்கத்தின் தலைப்பு, சுட்டி ஆகியவைகளையாவது கொண்டிருக்க வேண்டும்.
கீழே ஒரு அயிட்ம் கொண்ட ஒரு சிறிய RSS ஊட்டுக் கோப்பைக் காண்போம்.
முதல் வரி இந்த கோப்பு ஒரு XML கோப்பு என்பதையும் இரண்டாவது வரி RSS கோப்பின் எந்த வகை என்பதையும் காட்டுகிறது. என்பது நீங்கள் தரும் விபரத்தின் அடக்கம்(அல்லது வழி?) என்பதைக் குறிப்பதாகும்.
அதன் கீழே இருக்கும் முதல் பந்தி(3 வரிகள்) உங்கள் தளத்தைப் பற்றியதாகும். எனத் துவங்கும் இரண்டாவது பந்தி நீங்கள் அளிக்க விரும்பும் ஆக்கதின் விபரமாகும். இதில் தலைப்பு, சுட்டியின் முகவரி இரண்டை மட்டுமே தந்திருக்கிறோம். இம்மதிரி ஒவ்வொரு ஆகியபட்டிகளிகிடையே ஒவ்வொரு ஆக்கத்தைப் பற்றிய விபரத்தைத் தர வேண்டும். இமாதிரி எத்தனை item வேண்டுமானாலும் இருக்கலாம்.
இறுதியில் இந்தச் சேனலின் உள்ளடக்கம் முடிந்துவிட்டது என்பதைக் குறிக்க என்ற முடிவுப் பட்டியையும் RSS கோப்பு நிறைவடைகிறது என்பதைக் குறிக்க பட்டியையும் இட்டு முடிக்கப் பட்டிருக்கிறது. எளிமையாக இல்லை?
எளிமையாக ஒரு xml கோப்பை உருவாக்கிவிட்டோம். எளிமையாக இருப்பதாலேயே தவறுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. காரணம் வெறும் “டெக்ஸ்ட் எடிட்டரில்” இதை உருவாக்கும்போது எந்த சிக்கலும் இல்லாமல் உள்ளீடை ஏற்றுக் கொள்ளும். எனவே தவறு நடந்தாலும் தெரியாது. அதைப்பயன்படுத்தும்போதுதான் சிக்கல் தோன்றும். மீண்டும் திருத்த நேரிடும்.
நாம் ஏற்கனவே கண்டபடி பல “ப்ளாக்” தளங்கள் தாமாகவே இந்த ஊட்டுக்களை உருவாக்கும் திறன் கொண்டவை. சில தளங்கள் பிறருக்காவும் இம்மாதிரி ஊட்டுக்களை செய்து தரும் சேவையையும் அளிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் தளம் மூலமே செய்ய வேண்டும். மேலும் விளம்பரங்களும் அவற்றுடன் சேர்ந்து கொள்ளும்.
இங்கு தானியங்கும் ஊட்டு உருவாக்கத்தைப் பற்றி நாம் பேசவில்லை. நாமாவே பயிர் செய்து நெல் குத்தி சமைக்கும் விதத்தையே பார்க்கிறோம். என்னதான் நாமாகச் செய்தாலும் வெறுங்கையால் செய்தால் செம்மையாகுமா? உபரணம் வேண்டாமா? இதோ ஏழையின் உபகரணம்(poor man’s tool) ஒன்றை உருவாக்கித் தந்திருக்கிறேன்: “A Simple RSS Feed Creator”. உங்களுக்குத் தேவையான RSS ஊட்டை உங்கள் கணினியிலே உருவாக்கிக்கொள்ளலாம். இது எந்த வழங்கியையும்(server) சார்ந்திராததால் RSS_generator.html கோப்பை உங்கள் கணினியிலேயே சேமித்துக்கொள்ளலாம். இது ஒரு எளிமையான செயலி(8kb மட்டும்). என்றாலும் முன்பு சொன்ன தவறு ஏதும் நேரா வண்ணம் RSS கோப்பை உருவாக்க வகை செய்யும்.
தேவையான உள்ளீடுகளை செலுத்திவிட்டு “Next Item” பொத்தானை அழுத்தி ஒவ்வொரு ஆக்கத்திற்கான “Item” தொகுப்புக்களைச் செலுத்தியபின் “Finish” பொத்தானை அழுத்தினால் xml கோப்பின் (with professional look!)முழு வடிவமும் கிடைத்துவிடும். “Copy” பொத்தானை அழுத்தி பின் “நோட்பேடில்” அதை ஒட்டி தேவையான பெயருடன் xml (*.xml) கோப்பாக சேமித்துக் கொள்ளலாம்.
அதை இங்கே பெற்றுக் கொள்ளலாம்:http://www.geocities.com/csd_one/RSS_generator.html
Date & Time ஐப் பெறுவதற்கு அதன்மீது சொடுக்கினாலே போதும். மேலும் Date & Time அமைப்பைப் பாருங்கள் இது ஒருவகை தர நிர்ணயத்திற்குட்பட்டது. நீங்கள் கையால் மாற்றம் செய்ய வேண்டுமானால் அதன் அமைப்பு(format) மாறாமல் செய்ய வேண்டும். ஏனிப்படி? நாம் உருவாக்கிய கோப்பு சரி என்பதை எப்படி அறிந்து கொள்வது? இதற்கெல்லாம் மேல், இந்தகோப்பை எப்படி பயனுறச் செய்வது?
6
இந்த RSS ஊட்டு கோப்பைப் பற்றிச் சொல்லும்போது இரண்டு விடயங்களைப்பற்றிச் சொன்னோம். ஒன்று xml கோப்பின் அமைப்பு. இரண்டாவது, RSS ஊட்டின் தர நிர்ணய அமைப்பு. முதலாவதை நான் முன்பு தந்த செயலி மூலம் (RSS_generator.html) அடைந்து விட்டோம். அதாவது, xml கோப்பின்கட்டுப்பாட்டை மீறாதவாறு செய்து விட்டோம். ஆனால் உள்ளிடுவது நம் கையில்தானே இருக்கிறது? அந்த உள்ளீடு RSS தர நிர்ணயத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக தேதி நேரத்தை குறிப்பிடுவதைப் பற்றியதாகும்.நாம் பேசிக் கொண்டிருக்கும் version “2.0” இல் RSS_generator.html செயலியில் கண்டது போல அது இருக்கவேண்டும்.(வெவ்வேறு தர நிர்ணயங்களை ஒட்டி இதன் அமைப்பு மாறலாம்).
இந்த தேதி, நேரம் இல்லாமல் கூட RSS கோப்பை உருவாக்கலாமா? ஆம் உருவாக்கலாம். நாம் தொடக்கதில் கண்டது போல் வெறும் தலைப்பு மற்றும் அதன் சுட்டி ஆகியவையே போதும். பெரும்பாலான ஊட்டுக்கள் தலைப்பு, சுட்டி, சிறு குறிப்பு ஆகியவற்றை மட்டுமே கொண்டிருக்கின்றன. இங்கு தேதியைப் பற்றி குறிப்பிட்டதற்குக் காரணம் ஒன்று RSS இன் கட்டமைப் பற்றிச் சொல்வதற்கும் மற்றாது அதன் பயனைப் பற்றிச் சொல்வதற்கும்தான்.
பல RSS படிப்பான் செயலிகள் இந்த தேதி, நேரம் ஆகிவைகளை வைத்துக்கொண்டு இந்த ஆக்கத்திற்கு எத்தனை வயது என்று சொல்கின்றன. குறிப்பாக செய்தி நிறுவனங்கள் செய்திகளை பரிமாறிக்கொள்ளும்போது இது மிகத் தேவையான ஒன்றாகும். “சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்டார்” என்று ஒரு செய்தி இருந்தால் ‘இரண்டாவது முறையாக எப்போது தூக்கிடப்பட்டார்?’ என்று யாராவதுஎண்ணினால்?:-)
ஆக இம்மாதிரி தேதியை, நேரத்தை கணக்கிட வேண்டுமானால் அதை படிப்பான்களால் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். தேதி இருக்கும் இடத்தில் நேரத்தை இட்டால் குழம்பிவிடும் அல்லவா? ஆக, தெரிவிக்க வேண்டியதை சரியாகத் தெரிவிக்க வேண்டும். என் நண்பன் சொன்ன ஜோக்:மாடிப்படி வழியாக இருவர் ஏறிப் போய்க் கொண்டிருந்தனர். ஒருவர் நம்மவர்; மற்றவர் மலையாளி. மாடிப்படி மூலையில் ஏதோ மலையாளத்தில் எழுதியிருக்கக் கண்டு “என்ன எழுதி இருக்கிறது?” என்று நம்மவர் மற்றவரை வினவ, அவரும் மலையாளம் கலந்த தமிழில் “இங்கு எச்சில் துப்புரது” என்று சொல்ல, நம்மவர் வாயில் குதப்பி இருந்த வெற்றிலையை பளிச்சென்று துப்பிவிட்டு போனாராம். “எச்சில் துப்பாதே” என்பதாக மலையாளத்தில் எழுதியிருந்த வாசகம்தான் அது. மலையாளத்தில் “..ரது” போட்டால் “கூடாது” என்பது நம்மவருக்குத் தெரியாது பாவம். இந்த கதைபோல் ஆகிவடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வரைமுறை. 😉
சரி, நாம் உருவாக்கிய கோப்பு சரியாக இருக்கிறது என்பதை எப்படிப் பார்ப்பது? கவலை வேண்டாம். இதற்கு சில (தொண்டாகச் செய்ய) வலைத்தளங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் உங்கள் RSS கோப்பின் முகவரியைத் தந்தால் அந்தந்த தரத்திற்கொப்ப அது முறையானதா என்று சொல்லிவிடும். இல்லையென்றால் எங்கெங்கு குறையுண்டு என்று காட்டிவிடும். இது மற்றபடிப்பான்களில் சிக்கலின்றி அந்த RSS ஊட்டுக்குகளைப் படிக்க இயலும் என்பதைஉறுதி செய்கிறது.
RSS ஊட்டுக்களைச் சரிபபர்க்க உதவும் தளஙகளின் ஒன்றுதான் http://feedvalidator.org/ ஆகும். எளிமையானதும் அதிக விபரங்களை தரக் கூடியதுமாகும்.
உங்களது கோப்புக்கள் சரியானது என்பதை உறுதி செய்ய இந்த தளத்தினுள் காணும் உள்ளிடு பகுதியில் RSS கோப்பின் முகவரியை இட்டால் அதைப் பகுத்து என்ன குறை என்று சொல்லிவிடும். அதைச் செப்பனிட என்ன செய்யவேண்டும் என்ற உதவியும் கிட்டும்.
கீழ்க் காணும் இரண்டு மாதிரிக் கோப்புக்களை ஒவ்வொன்றாக http://feedvalidator.org/ தளத்தில் உள்ளிட்டு வரும் முடிவுகளை நீங்களே அறிந்து கொள்ளுங்களேன்!
http://www.geocities.com/csd_one/rss/sang.xml  
http://www.geocities.com/csd_one/rss/sang2.xml  
மேற்கண்ட இரண்டு கோப்புக்களையும் validate செய்து பார்த்திருந்தால் ஒன்றில் (sang2.xml) பிழை இருப்பதை அறிந்திருப்பீர்கள். பிழை இரண்டு வகைப்படும் ஒன்று எச்சரிக்கை. மற்றொன்று பிழை. இதில் முந்தையது இருந்தாலும் அந்த கோப்பு சரியானது என்று கருதப் படும். என்றாலும்பிழைகளைத் திருத்தி உறுதி செய்து கொள்வது நலம். இல்லையானால் சில படிப்பான்களால் சரியாகக் கையாள இயலாமல் போய்விடும்.
சரி, இப்போது எல்லாம் ஆகிவிட்டது. அடுத்தது அந்தக் கோப்பை வழங்கியில் (சர்வர்) ஏற்ற வேண்டும். அத்தோடு நம் வேலை முடிந்துவிட்டதா? மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டாமா? முதலில் உங்கள் தளத்தில் முன் பக்கத்தில் உங்கள் தளம் RSS ஊட்டு வசதியை வழங்குகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும். அதன் சுட்டியையும் (இப்போது சர்வரில் ஏற்றிய RSSகோப்பின் சுட்டி) தர வேண்டும் மேலும் சுட்டியுடன் இந்தச் சிறிய icon ஐயும் சேர்த்துத் தாருங்கள்.http://www.geocities.com/csd_one/rss/xml.gif
இந்த gif கோப்பை உங்கள் xml கோப்பு இருக்கும் இடத்திலேயே இட்டுக் கொள்ளுங்கள். இந்தச் சிறு செஞ்சதுரம் உங்கள் தளம் RSS வசதி கொண்டது என்பதை உங்கள் தளத்திற்கு வருவோருக்கு உணர்த்தும்.
உங்கள் தளத்தில் இதை இட்டுக் கொண்டால் மட்டும் போதாது. பிறருக்கு அஞ்சல் முலம் தெரிவிக்கலாம். அறிந்தவர்களுக்கு மட்டுமேதான் அஞ்சலில் தெரிவிக்க இயலும் இன்ன பிறருக்கு தெரிவிக்க வேண்டுமானால் சில தேடுதளங்களில் பதியவேண்டும். RSS ஊட்டுக்களை தேடித்தரும் தளங்கள் பல உள்ளன. இவற்றிற்கும் நாம் காணும் பிற தேடுதளங்களுக்கும் வித்தியாசமுண்டு. இவை அவ்வப்போது உங்கள் தளைத்திலுள்ள RSS கோப்பை அவதானித்துக் கொண்டே இருக்கும். அந்தக் கோப்பில் புதிய பதிவோ அல்லது மாற்றமோ இருந்தால் புதுப்பித்துக்கொள்ளும்.
http://www.syndic8.com/suggest.php?Mode=data
http://www.feedster.com/add.php
http://reader.rocketinfo.com/desktop/AddRSSFeed.jsp  
http://ngoid.sourceforge.net/add_rss.php  
http://dynalinks.dyndns.org/?section=addlink போன்றவை ஒரு சிலவாகும்.
சில தளங்கள் “பிங்”(ping) வசதியும் கொண்டிருக்கின்றன. அதாவது உங்கள் தளத்தில் ஆக்கங்ளின் புதிய சேர்ப்புக்களுப்ப புதிய RSS கோப்பை மாற்றுவீர்கள் அல்லவா? அப்போது இந்த தேடு தளங்களுக்கு உடனே தெரிவிக்கவேண்டுமானால் அதனையும் செய்ய இயலும்
இனி, நம்முடைய RSS கோப்பு எப்படி இயங்குகிறது என்பதைப் பார்க்கவேண்டாமா? RSS படிப்பான்கள் நிறையவே இருக்கின்றன என்று பார்த்தோம்.அவைகளில் தனித்தியங்குபவையும் உண்டு, இணையத்தில் இயங்குபவையும் உண்டு.நமக்கு பரிச்சயமான யாஹ¥வும் இந்த்ச் சேவையைத் தருகிறது என்று அறிந்தோம்.
யாஹு தரும் பல சேவைகளில் http://my.yahoo.com உம் ஒன்று. இங்கு உங்களுக்குத் தேவையான யாஹு தொடர்பான எல்லா விடயங்களியும் ஒரு சேர காணலாம். கிட்டத்தட்ட ‘ஹோம் பேஜ்’ மாதிரி. இங்கு நாம் முன் சொன்ன RSS படிப்பான் வசதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.. நேரடியாகhttp://my.yahoo.com தளத்திற்குச் சென்றும் செய்யலாம். அல்லது ஒரே சொடுக்கில் கீழ்க்கண்டவாறும் செய்யலாம்:
http://e.my.yahoo.com/config/addxcontent?.url=%5Bfeedurl%5D
மேற்கண்ட சுட்டியில் [feedurl] என்பது நீங்கள் ஏற்கன்வே ஏற்றி வைத்திருக்கும் RSS (xml) கோப்பின் சுட்டி ஆகும் (சுட்டியை உள்ளிடும்போது அடைப்பான் [ …. ] பயன்படுத்தாதீர்கள்)இங்கு நம் எடுத்துக்காட்டை எடுத்துக் கொண்டால் இப்படி இருக்கும்:
http://e.my.yahoo.com/config/addxcontent?.url=http://geocities.com/
csd_one/rss/sang.xml
ஆக இருக்கும். வரும் பக்கத்தில் உள்ள “Add” பொத்தானை அழுத்தி அந்த ஊட்டை சேர்து விடலாம். இவ்வாறு எந்த RSS ஊட்டையும் சேர்க்கலாம். இனி யாஹ¥ தொடர்ந்து அந்த சுட்டியைக் கண்காணித்துக் கொண்டிருக்கும். புதியன ஏது வந்தால் அதன் பட்டியலில் இடம்பெறும்.
இம்மாதிரியான வலைத்தள படிப்பான்கள் நிறைய இருக்கின்றன அவற்றுள் சில:
Active Web Readerhttp://www.deskshare.com/awr.aspx    
AmphetaDesk – a free, cross platform, open-sourced,syndicated news aggregator. Mac, Windows, Linux:http://www.disobey.com/amphetadesk/
Fastbuzz Newshttp://www.fastbuzz.com/  
Feed-Me.Info – Online News Readerhttp://www.feed-me.info/
இவையன்றி மொசில்லாவுடன் இணைத்துக் கொள்ளும் படிப்பன்களையும் தருகின்றனர்:
For Mozilla Firebird 0.7 v1.68: rssreader_168.xpihttp://fls.moo.jp/moz/rssreader/rssreader_168.xpi  
For Mozilla Firefox 0.8 v1.7: rssreader_170.xpihttp://fls.moo.jp/moz/rssreader/rssreader_170.xpi
இந்த கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டவைகளையன்றி உங்கள் கணினியுள்ளேயே பொருத்தி, வேண்டியபோது (off-line) படிக்க வகை செய்யும் மேலும் சில செயலிகள்: 
Abilon http://www.activerefresh.com/abilon.php இது ஒரு சிறிய, (வெறும் 364 kb) அளவுள்ள எளிய செயலி.
Feedreader http://www.feedreader.com/   இது W98 இலும் தொழிற்படும்.
Awasu http://www.awasu.com/ 
என்னுடைய தேர்வு RSSbandit.  www.rssbandit.org  இதில் நிறைய வசதிகளிருக்கின்றன.
இணையத்தைத் துழாவினால் நிறையவே கிடைக்கும். ஒவ்வொன்றையும் சோதித்தறிதலுக்கே நேரம் போதாது. நான் குறிப்பிட்டவைகளைவிட நல்ல செயலிகள் கூட கிட்டலாம். ஒரு நாளுக்கு நான்கைந்து என்று புதிதாக வந்துகொண்டே இருக்கின்றன.
இனி, இந்த RSS ஊட்டு உருவாக்கம், நடைமுறைப்படுத்துதல் “updadte” செய்தல் போன்றவற்றில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வது பற்றி பார்க்கலாம். (இறுதிப் பகுதியாக அமையும்)
9ஒவ்வொரு முறை புதிய ஆக்கம் அல்லது மாற்றம் நிகழும்போது இந்த RSS கோப்பிலும் அந்த மாற்றம் பதிப்பிக்கப் படவேண்டும். ஒரு இயற்கையான வினா தோன்றலாம். “ப்ளாக்கு”கள் RSS ஊட்டு வசதியைத் தருகின்றன என்றறிந்தோம். ஒவ்வொரு முறையும் இப்படி ஆக்கங்கள் புதிதாகச்சேர்க்கப்படும்போதோ அல்லது மாற்றப் படும்போதோ RSS கோப்பை நாம் உருவாக்க அல்லது மாற்ற வேண்டுமா என்று எண்ணலாம். “ப்ளாக்’குகளில் அந்த நிகழ்வு தானே நடக்கிறது. நல்ல தரவுதள கட்டமைப்பில் உள்ள asp, php போன்ற தளங்களில் இயங்கும் இணையதளங்களிலும் இந்த வசதியை நாம் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் இங்கு நாம் வெப் தளங்களில் இந்த வசதியை எப்படிப் பெறுவது என்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.
நாம் தொடக்கத்தில் சொன்னபடி xml கோப்புக்களைத் திருத்தும்போது அதன் கட்டமைப்பு மாறாமலும் RSS தரத்தின்(எந்த வகையோ அதற்கொப்ப) வரைமுறை மீறப்படாமலும் இருக்க வேண்டும் என்று அறிவோம். (இங்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது RSS Version 2 ஆகும்)
முன்னர் கூறியபடி தேதியை உள்ளிடுவதை எடுத்துக் கொள்வோம். RSS Ver2 இன்படி இப்படி இருக்க வேண்டும்:
Wed, 07 Jul 2004 12:13:39 +0530அல்லதுWed, 07 Jul 2004 06:43:39 GMT
மேற்கண்ட ஒன்றில் ஏதாவதாக இருக்கவேண்டும். முதலாவது உள்ளுர் நேரத்தையும்,இரண்டாவது க்ரீன்விச் நேரத்தையும் குறிக்கிறது. இதில் ஏதாவது சிறிய வித்தியாசம் நேர்ந்தாலும் அந்தப் படிவம் சரியானதாகக் கருதப் படாது. எனவே கையால் திருந்தும்போது தவறு நேரலாம்.
இன்னொரு சிக்கல் சில எழுத்துகளை, குறியீடுகளை உள்ளிடுவது பற்றி. குறிப்பாக & < > போன்றவற்றை நேரடியயக உள்ளிட இயலாது. அது சிக்கலைத் தோற்றுவிக்கும். அதற்கு இண¨யான மீயுரை குறியீடுகளை இடவேண்டும்.அவை இப்படி இருக்கும்:
&amp;amp;amp; = &> = >< = < மேலும் சில எழுத்துக்கள் அந்த xml கோப்பில் குறிப்பட்டிருக்கும் என்கோடிங்களில் சேராத ஒன்றாக இருக்குமானால் பிசகு என்று அந்தக் கோப்பு எகிறிக்கொள்ளும். ஒரு xml கோப்பை தயாரிக்கும்போது அது யுனிகோடில் தயாராவதாகத்தான் கருதப் படும் அதாவது என்கோடிங் ஏதும் குறிக்கப்பட்டிருந்தால் ஒழிய. வேறு என்கோடிங்கில் தரவு இருக்குமானால் அந்த என்கோடிங்கைக் குறிப்பிட வேண்டும்.எடுத்துக் காட்டாக யுனிகோடில்லாத வேறு வகையாக(ISO-8859-1) இருக்குமானால் அதைக் குறிப்பிடவேண்டும் (). இதையும் அவதானமமகச் செய்யவேண்டும்.இல்லையென்றால் “இது எனக்குத் தெரியாது; எனக்குத் தெரிந்த UTF-8 ஐத்தான் நான் எடுத்துக் கொள்வேன்” என்று சாதித்து UTF-8 ஆகவே பாவித்துக்கொள்ளும். ஆக, இந்தத் தொல்லைகளைச் சமாளித்தாக வேண்டும்.
10RSS ஊட்டு பற்றி மேலும் சில தகவல்கள்:முதலில் இதைத் தொடங்கி வைத்த பெருமை நெட்ஸ்கேப்பையே சாரும். மைக்ரோசாப்ட்டின் கைங்கரியத்தால் கலங்கிப் போயிருந்தாலோ என்னவோ இதில் கவனம் செலுத்தாமல் கைவிட்டு விட்டது. UserLand என்ற நிறுவனம் இதைக் கையிலெடுத்துகொண்டது. இப்போது செய்தி பரிமாற்றங்களில் மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது.
RSS வகையில் பல இருக்கின்றன என்று பார்த்தோம். என்றாலும் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கலாம். பொதுவாக எல்லாமே RSS என்று அழைக்கப்பட்டாலும் RSS 1.0 என்ற வகை சற்று வித்தியாசமானது. xml இன் துணை அமைப்பான RDF என்ற வகையைச் சார்ந்தது. இதன் அமைப்பு சற்று சிக்கலாக இருக்கும். இந்த முறை RDF Site Summary (RSS) என்று அழைக்கப்படுகிறது (Rich Site Summary என்று அழைக்கப் படுவதும் உண்டு -எப்படியானும் RSS மாறப் போவதில்லை). RSS 0.91, 0.92, 2.0 ஆகியவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. இப்போது இவையேபெரும்பாலோரால் பயன்படுத்தப் படுகிறது
xml பாவனைக்கு வந்த பின் தகவல் பரிமாற்றத்தில் நிறையவே மாற்றங்கள் வந்திருக்கின்றன. இதன் சிறப்புக் குணங்களில் முக்கியமானது, சாதாரணமாக நாம் புழங்கும் உரை வடிவிலேயே (text format) தரவுகளை பரிமாறிக்கொள்ளலாம். ஆனால் சில விதிகளைக் கடைபிடிக்கவேண்டும். உரைவடிவில் இருப்பதால் கையால் எழுதுவது சுலபமாக இருந்தாலும் விதிகள் மீறப்படமல் இருப்பது அவசியம்.
நம் RSS ஊட்டிலும் இம்மாதிரியான சிக்கலை எதிர் நோக்குவதால் கை மீறிவிடாமல் இருக்க சில உபகரணங்களைக் கையாள வேண்டியிருக்கிறது. இதனை மனதில் கொண்டு ஒரு சிறிய செயலியை உருவாகி நான் பாவிக்கிறேன். முன்னர் தந்த (html file) செயலியில் xml இன் கட்டமைப்பைக் கொண்டு வந்தாலும் உள்ளிடுவதில் தவறு இருந்தால் அந்த RSS கோப்பு சரியானதாக இல்லாமல் போய்விடும்.
இந்தச் செயலி விண்டோசின் எந்தத் தளத்திலும் இயங்கும். ஒரு நிபந்தனை: IE5 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு கணினியில் இருக்க வேண்டும்.
இதில் புதிய xml கோப்பை உருவாக்கலாம். முன்பு உருவாக்கியதை மீண்டும் ஏற்றி மாற்றங்கள் செய்யலாம். இணையத்திலிருந்து xml கோப்புக்களை இறக்கியும் மாற்றங்கள் செய்யலாம். குறிப்பாக, இணையத்தளம் வைத்திருப்போர் தாம் படித்தவைகளை, பயனுள்ளவகைகளை ஒரு “டைஜஸ்ட்” வடிவில் பிறருக்கு கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பர். பெரும்பாலும் தங்கள் தளத்தில் அவற்றை ஏற்றியோ அல்லது அவற்றின் இணைப்பைத் தந்தோ அவற்றைபரிமாறிக் கொள்வது வழக்கம். அம்மாதிரியான விடயங்களுக்கு இது பயன்படும். மேற்கொண்டு விபரங்கள் அதன் உதவி ஆவணத்தில் காணலாம்.
இந்த செயலி முழுமையாக ஆகிவிட்டது என்று சொல்ல மாட்டேன். இது உங்களுக்குபயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி. நல்லதோ அல்லது பிழை கண்டாலோ ஒரு வரி எழுதிப் போடுங்கள்.
Advertisements

2 பதில்கள் to “இணைய செய்தியோடை”

  1. மிக்க பயனுள்ள பதிவு.இனிய தமிழில் விளக்கம்.நன்றி.

  2. […] மேலும்….. […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: