தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

இதுதான் ஆபிஸ் 2007

Posted by tamilmuslim மேல் ஜூலை 10, 2008

பலப்பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே மைக்ரோ சாப்டின் புதிய வெளியீடாக வெளிவந்திருக்கிறது ஆபிஸ் 2007. உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிற ஆபிஸ் 2003, எக்ஸ்பி போன்ற வெளியீடுகளிலிருந்து பலவகைகளில் மேம்பட்டு சிறப்பான பல வசதிகளுடன் வெளிவந்திருக்கிறது ஆபிஸ் 2007. இதன் வசதிகள் ஒவ்வொரு பயனாளரும் கணினியையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில் அடுத்த உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் எனக்கூறலாம். இப்போது நாம் வேர்டு, எக்ஸல், பவர்பாயிண்ட் முதலான எம்.எஸ் ஆபிஸ் பயன்பாடுகள் அதன் முந்தைய வெளியீடுகளை விட எவ்வாறு மேம்பட்டுள்ளது என்பதை சுருக்கமாகக் காணலாம். 

எம்.எஸ்.வேர்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்பாடுகள்:
தற்போது எம்.எஸ் வேர்டு பெரிய அளவில் பிளாக்கிங் எனப்படும் இணைய பக்கங்களுக்கு தகவல்களை அனுப்ப பயன்படுத்தப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு வேர்டு 2007 – இல் நேரடியாக தகவல்களை தரவேற்றம் செய்ய முடிகின்ற வசதிகளை கொண்டுள்ளது. இதில் பெரும்பாலான பிளாக்கிங் வசதிகள் தரக்கூடிய இணையத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் நேரடியாக பிளாக்கிங் வேர்டிலிருந்து செய்ய முடிகின்றது.
ஸ்டேடஸ் பாரில் தொடர்ந்து ‘வேர்டு கவுண்ட்’ எனபடும் ‘சொல் எண்ணிக்கை’ தொடர்ந்து காண்பிக்கப்படுகிறது. நாம் புதிதாக தட்டச்சு செய்யும் போது தொடர்ந்து இந்த எண்ணிக்கையும் மாற்றப்பட்டுக் கொண்டு வருகிறது.

ஸ்பெல் செக்கிங் வசதியானது தற்போது மேம்படுத்தப் பட்டு, சரியான எழுத்துகளுடன் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களையும் கண்டறிந்து கூறுகிறது.

மறுகட்டமைப்பு செய்யப்பட்ட ஈகுவேஷன் எடிட்டர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் யுனிக்கோட் துணையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் எளிதாக பிராந்திய மொழிகளுடன் கணிதக் குறியீடுகள் இணைத்து நாம் உருவாக்க முடியும்.

நன்றாக உருவாக்கப்பட்ட பல கவர்(அட்டை) பக்கங்களின் கேலரி உள்ளது. இதனால் புத்தகங்கள், பிராஜக்ட்கள் போன்றவற்றை உருவாக்கும் போது அதன் அட்டைகளை உருவாக்க நாம் மெனக்கெட வேண்டியதில்லை. எளிதாக ஏற்கனவே உள்ளவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒருமுறை உருவாக்கப்பட்டு பலரால் திருத்தப்பட்ட ஒரேக் கோப்பில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை எளிதாக நாம் கண்டறிந்து கொள்ள டாகுமென்ட் கம்பேரிசன் என்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ளவை எம்.எஸ்.வேர்டில் மேம்படுத்தப்பட்டுள்ள சில வசதிகளாகும். இவை தவிர மேலும் பலவகையான குறிப்பிட தகுந்த மேம்பாடுகளும் உள்ளன.

எம்.எஸ்.எக்சலில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்பாடுகள்:

 • 1,048,576 ரோவ்ஸ்(rows) 16,384 காலம்ஸ்(columns) ஆகியவற்றை ஒரே வொர்க் ஷீட்டில் கொண்டுள்ளது.
 • ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய கணக்கீடுகளை செய்வதற்கான மேம்படுத்தப்பட்ட வசதிகள் பயனாளர்களே மேம்படுத்திக் கொள்ளக் கூடிய எளிதான பங்ஷன்களை கூடுதலாக கொண்டுள்ளது.
 • தரவிறக்கம் எனப்படும் டேடா இம்போர்டிங் வசதி மேம்படுத்தப் பட்டுள்ளது. சரியாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்காத அட்டவணைகள், தரவுகள் மற்றும் சரியான கிரிட் அமைப்பில் இல்லாதவற்றையும் எளிதாக, சரியாக எக்சலுக்குள் இறக்கி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
 • ஃபார்முலாக்களை தானாகவே நிறைவு செய்யும் ஆட்டோ கம்ளீட் ஆப்ஷனும் உள்ளது. இது ஒரு சாதாரண பயனாளர் எளிதாக தனது கணக்கீடுகளை செய்யவும் விரைவாக முடிக்கவும் பயன்படுகிறது.
 • புது மாதிரியான சார்ட் வசதிகளையும் எக்சல் கொண்டுள்ளது. இதன் மூலம் அழகாக முப்பரிமாண தோற்றத்திலும் சார்ட்களை உருவாக்க முடிகிறது. மேலும் தேவையான இடங்களில் மேம்படுத்தி காட்டுவதற்கான வசதிகளையும் கொண்டுள்ளது.

எம்.எஸ்.பவர்பாயிண்ட்டில் உள்ள மேம்பாடுகள்:

 • டெக்ஸ்ட் சார்ந்த அனிமேஷன்களுக்கு துணை புரியும் வகையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது
  முப்பரிமாண கிராபிக்ஸ்களை துணை புரிகின்றது.
 • அட்டவணைகளுக்கு மேம்பட்ட வசதிகளை கொண்டுள்ளது. குறிப்பாக எக்சலிலிருந்து ஒட்டப்படும் அட்டவணைகளை பெரிதும் துணை செய்கிறது.
 • மேம்படுத்தப்பட்ட பிரசண்டர் வியூ
  பெரிய திரைகளுக்கான பிரசண்டேஷன்களை தயாரிக்கும் போது எளிதாக வேலை செய்வதற்கான வசதி.

அவுட்லுக்கில் உள்ள மேம்பாடுகள்

 • அவுட்லுக் இப்போது எஸ்.எம்.எஸ் மற்றும் டெக்ஸ்ட் தகவல்களை துணை புரிகிறது.
 • தேடல் வாய்ப்புகளை சேமித்து வைப்பதற்கான வசதிகளையும் கொண்டுள்ளது. RSS பதிவுகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடியது.
 • பகிர்ந்து கொள்ளக் கூடிய காலண்டர் வசதிகளையும் கொண்டுள்ளது. இதனால் மற்ற பயனாளர்களுடன் இணைந்து வேலை புரிய ஏதுவாயிருக்கிறது.
 • இணைப்பாக வரப் பெற்ற செய்திகளை தனியாக மற்றொரு அப்ளிகேஷன் மூலம் படிக்காமல் நேரடியாக அவுட்லுக்கிலேயே படித்துக் கொள்ள முடியும்.
 • எம்.எஸ்.ஆபிஸ் 2007 புதியதாக ஒரு கோப்பு முறை மூலம் ஆபிஸ் அப்ளிகேஷன்களில் உருவாக்கப்படும் கோப்புகளை சேமிக்கிறது. அந்த கோப்பு வடிவமானது ஆபிஸ் ஓபன் எக்ஸ்.எம்.எல் (Office Open XML) என்றழைக்கப்படுகிறது. இவ்வகையில் சேமிக்கப்படும் கோப்புகள், முந்தைய எம்.எஸ் ஆபிஸ் கோப்பு வடிவங்களை விடவும் 75% குறைவான கோப்பு அளவை(File size) கொண்டுள்ளது. ஆனாலும் முந்தைய வடிவங்களில் சேமிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

ஆபிஸ் 2007 நுணுக்கமான கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு வரம் தான் போங்க.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: