தமிழ் முஸ்லிம்

இஸ்லாம் பற்றி வாசிக்க…சுவாசிக்க…

இரவு – இயக்கம்

Posted by tamilmuslim மேல் ஜூலை 17, 2008

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது பழமொழி. அதாவது நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் நம் எந்த பணியையும் செய்ய முடியும்.

தூக்கம் என்பது உடலுக்கு மிக இன்றியமையாதது. உடலுக்கும், மனதிற்கும் முழுமையான ஓய்வை அளிக்கும் உன்னதமான ஒரு விஷயம்தான் தூக்கம்.

தினமும் 3 வேளை உண்ணும் உணவும், குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமும் ம‌னிதனு‌க்கு‌த் தேவைப்படுகிறது.

இரவில் அதிகமாக தூங்குபவர்களை விட குறைந்த நேரமே தூங்குபவர்களுக்குத்தான் உடல் பருமன் பிரச்சினை ஏற்படுவதாக சமீபத்தில் கனடா நாட்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் நடத்திய ஆய்வு கூறுகிறது.

குறைவாக சாப்பிடுவதும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும், நேரம் தவறி சாப்பிடுவதும் உடலுக்கு கேட்டை உண்டாக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவுகளை உண்ணும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். ஏனோ தனோ என்று உண்ணாமல் உடலுக்கு ஏற்ற உணவுகளை மட்டும் அளவோடு உண்பதும் நல்லது.

சரி ஏன் நேரத்திற்கு தூங்க வேண்டும், அது என்ன 6 மணி நேரம் தூக்கம், ஏன் அதிகாலையில் எழுந்திரிக்க வேண்டும், நேர‌ம் தவறாம‌ல் ஏ‌ன் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் என்று விதண்டாவாதமாக கேள்வி எழுப்புபவர்களுக்கு கீழ்க்கண்ட விளக்கத்தை தந்துதான் ஆக வேண்டும்.

நமது உட‌லி‌ல் உ‌ள்ள ஒ‌வ்வொரு உறு‌ப்புகளு‌ம் ஒரு ‌சில ம‌ணி நேர‌‌த்‌தி‌ல்தா‌ன் த‌ங்களது ‌ப‌ணிகளை‌ச் செ‌ய்‌கி‌ன்றன. அ‌ந்த நேர‌த்‌தி‌ல் அத‌ற்கே‌ற்ற வகை‌யி‌ல் நமது உட‌ல் ஓ‌ய்வாக இரு‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம்.

இரவு 9 மணி முதல் 11 மணி வரை : இந்த நேரம் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகள் வேலை செய்யும் நேரம். அதாவது நமது உடலில் உள்ள தேவையற்ற, அதிகப்படியான ரசாயனங்களை வெளியேற்றும் பணியைச் செய்யும். எனவே இந்த சமயத்தில் நாம் படுக்கைக்கு படுக்கச் சென்று விட வேண்டும். இல்லையெனில் அமைதியாக அமர்ந்து பாடல் கேட்பதும் நல்லது.

இந்த நேரத்தில் ஓய்வெடுக்காமல் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடுகிறது.
இரவு 11 மணி முதல் 1 மணி வரை : ஈரல் தனது வேலையைச் செய்யத் துவக்கும். மேலும், இந்த நேரம்தான் ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் நேரமாகும்.

இந்த நேரத்தில் விழித்திருக்க நேரிட்டால் ஈரல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

நள்ளிரவு 1 மணி முதல் 3 ம‌ணி வரை : இந்த நேரத்தில் கல்லீரல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்கிறது. இந்த நேரமும் மிகவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்போம்.

அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை : இந்த நேரத்தில் நுரையீரல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்யும். எனவேதான் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும், இந்த நேரத்தில் அதிகமாக கஷ்டப்படுவார்கள். இருந்தாலும் அதிகாலையில் ஆ‌ழ்‌ந்து உற‌ங்‌கினாலே இருமல் இயற்கையாகவே சரியாகிவிடும் என்கிறது மருத்துவம்.

காலை 5 மணி முதல் 7 மணி வரை : இந்த நேரத்தில் பெருங்குடல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்கிறது. எனவே இந்த நேரத்தில் நமது வயிறு காலியாக இருப்பதோ அல்லது தண்ணீர் மட்டும் பருகி இருப்பதோ நல்லது.

காலை 7 மணி முதல் 9 மணி வரை : தற்போது சிறுகுடல் தனக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளும். எனவே இந்த நேரத்திற்குள்ளாக காலை உணவை முடித்திருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் தொடர்ந்து காலை 6.30 மணிக்குள் காலை உணவை எடுத்துக் கொண்டால் குடல் நோய் தாக்கும்.

அதே சமயம் 7.30 மணிக்குள் காலை உணவை சாப்பிட்டால் நாம் திடகாத்திரமாக வாழலாம்.

மேலும் காலை உணவை தவிர்க்கும் பலர் உள்ளனர். அவர்கள் அந்த பழக்கத்தை கைவிட்டு குறைந்தபட்சம் 9 முதல் 10 மணிக்குள் தங்களது காலை உணவை முடிக்க வேண்டும்.

தாமதமாக உறங்கி, காலையில் வெகு தாமதமாக எழுந்திரிப்பதால் நமது உடலில் இருந்து தேவையற்ற ரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் பணி வெகுவாக பாதிக்கிறது.

மேலும் இரவு முதல் காலை 4 மணி வரைதான் எலும்பு மஞ்சையில் ரத்தம் உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது. எனவே நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டியது நமது உடலின் ரத்த உற்பத்திக்கும் அவசியமாகிறது.

ஆரோ‌க்‌கிய‌த்துட‌ன் வா‌ழ்வத‌ற்கான பழ‌க்க வழ‌க்க‌ங்களை இ‌ன்‌றி‌ல் இரு‌ந்தே கடை‌பிடி‌க்க முயலுவோ‌ம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: